வயிறு உப்புசத்தை குணப்படுத்தும் இரண்டு சமையல் பொருட்கள் !!

By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

உங்கள் வயிறு வீங்கும் வரை உங்கள் உணவு பழக்க வழக்கத்தை பற்றியோ அல்லது உடற்பயிற்சி பற்றியோ நீங்கள் கவலைப்படுவதில்லை என்பது உண்மையா? உங்கள் வயிற்றில் வாயு பிரச்சினை மற்றும் எரிச்சல் பிரச்சினையை அனுபவித்து உள்ளீர்களா?

இந்த கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் தீராத வயிற்று வீக்கத்தை பெற்று உள்ளீர்கள். இது உங்களுக்கு சீரண மண்டலத்தை பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

சீரண சக்தி என்பது நமது உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரு முக்கியமான செயல் ஆகும். சீரண மண்டலத்தில் பிரச்சினை இருந்தால் உங்கள் உணவுகள் சரியாக

செரிக்காமல் வயிற்றில் பலவித பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். இதனால் உங்களுக்கு சோர்வு, பலவீனம், ஊட்டச்சத்து குறைபாடு, அனிமியா போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

2 Kitchen Ingredients To Reduce Tummy Bloating In A Day!

எனவே இதை அதன் ஆரம்ப கால நிலையான வயிறு வீக்கத்திலயே இதை குணப்படுத்த வேண்டும். வயிறு வீக்கம் என்பது அறிகுறிகள் இல்லாமல் நிறைய காரணங்களால் ஏற்படும் ஒரு பிரச்சினை ஆகும்.

இந்த சமயத்தில் உங்கள் வயிறு ரெம்ப இறுக்கமாக கனத்துடன் வயிறு வலி மற்றும் அமிலத்தன்மை போன்றவை ஏற்படும். வயிறு வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் வயிற்றின் வெளிப்பகுதியில் ஒரு கனத்தை காண்பார்கள்.

பொதுவாக இந்த வயிறு வீக்கம் வருவதற்கான காரணங்கள் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், உடற்பருமன், தவறான உணவுப் பழக்கம், வயிறு மந்தம் போன்றவை காரணங்கள் ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களால் உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் அதிகமான வாயு உருவாகி உங்களுக்கு வயிற்று வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது மிகவும் எளிதான பிரச்சினை அல்ல. இதனால் வாந்தி, வயிற்று வலி, சோர்வு போன்றவையும் ஏற்படும். எனவே இதை முதலில் குணப்படுத்துவது மிகவும் முக்கியம்.

இந்த பிரச்சினையை எளிதாக சமாளிக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்களை கொண்டே தீர்வு காணலாம். சரி வாங்க அதைப் பற்றி பார்க்கலாம்.

2 Kitchen Ingredients To Reduce Tummy Bloating In A Day!

தேவையான பொருட்கள் :

கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்

வெள்ளரிக்காய் ஜூஸ் - 1/2 டம்ளர்

இந்த இயற்கை ஜூஸ் ஒரே ஒரு நாளில் உங்கள் வயிறு வீக்கத்தை குறைத்திடும். இதை தினமும் எடுத்து வந்தால் வயிறு வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம்.

இதனுடன் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதும் முக்கியம். அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுப்பதன் மூலமும் கொழுப்பு மற்றும் ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் வாயு தொல்லை குறைந்து வயிறு வீக்கத்தை தடுக்கலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்தால் வயிற்றில் உள்ள அதிகமான வாயுக்கள் வெளியேறி வயிறு வீக்கத்தை குறைத்திடும்.

கீரைகள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்ந்த இந்த ஜூஸில் நிறைய நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது வயிற்றில் உருவாகும் வாயுக்கள் மற்றும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி வயிறு வீக்கத்தை காணாமல் செய்கிறது. மேலும் இது உங்கள் சீரண சக்தியை அதிகரிக்கிறது.

2 Kitchen Ingredients To Reduce Tummy Bloating In A Day!

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தேவையான அளவு ஒரு டம்ளரில் எடுத்து கொள்ள வேண்டும். அதை நன்றாக கலக்க வேண்டும்

இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடித்தால் வயிறு வீக்கம் சரியாகி விடும். இஞ்சி தேவைப்பட்டால் இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.

English summary

2 Kitchen Ingredients To Reduce Tummy Bloating In A Day!

2 Kitchen Ingredients To Reduce Tummy Bloating In A Day!
Subscribe Newsletter