பாடாய் படுத்தும் ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்து பாடாய் படுத்தி எடுக்கிறதா. தாங்க முடியாத வலியால் துளைத்து எடுக்கிறதா.இந்த ஒற்றைத் தலைவலி வரும் நேரத்தை கண்டிப்பாக உங்களால் தாங்கவே முடியாது. அப்படியே தலையை கழட்டி கீழே வைத்து விடலாமா என்று தோன்றும். அந்த அளவிற்கு இதன் வலியின் வீரியம் நம்மளை கஷ்டப்படுத்தி விடும்.

இதற்கு ஒரு சிறந்த மருந்து உங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினாலே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஒற்றைத் தலைவலிக்கு என்ன தான் மாத்திரைகள் எடுத்தாலும் இதற்கான பலன் கிடைப்பதில்லை.

இந்த ஒற்றைத் தலைவலி நமது வேலைகளை முடக்கும் நோய்களில் உலகத்திலயே 20 வது இடத்தை பெற்றுள்ளது என்று உலக ஆரோக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஒற்றைத் தலைவலி உங்கள் தலையின் ஒரு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தி துடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது ஒரு நாளைக்கு 4 லிருந்து 72 மணி நேரம் வரை கூட நீடிக்கலாம்

இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்குமே வித்தியாசம் அடைந்து காணப்படுகிறது. 75% மக்களுக்கு ஒற்றைத் தலைவலி வர பரம்பரையும் காரணமாக உள்ளது.

எனவே இந்த ஒற்றைத் தலைவலிக்கு பக்க விளைவுகளை உண்டு பண்ணும் மாத்திரைகளை சாப்பிடுவதை விட இயற்கையான பொருட்களை கொண்டே இதை சரி செய்து விடலாம்.

சரி வாங்க எந்த எந்த இயற்கை பொருட்கள் எப்படி இந்த ஒற்றைத் தலைவலியை போக்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினா டீ :

புதினா டீ :

தினமும் புதினா டீ பருகுவதால் இந்த ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம். இநது நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்து ஒற்றைத் தலைவலியை நன்றாக குறைத்து நல்ல பலனை கொடுக்கும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயில் கேப்சைசின் என்ற பொருள் உள்ளது. இந்த பொருள் ஒற்றைத் தலைவலியை சரி செய்கிறது. இந்த பொருள் நமது உடலில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர் மூலமாக வலியை குறைப்பதற்கான சிக்னலை அனுப்புகிறது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி கண்டிப்பாக ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துகிறது. ஒற்றைத் தலையில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் தென்படும். ஏனெனில் இந்த ஒற்றைத் தலைவலி நம் வயிற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒற்றைத் தலைவலிக்கு ஒரு மிகச்சிறந்த வீட்டு முறையாகும்.

ஐஸ் பேக்

ஐஸ் பேக்

ஐஸ் பேக்கை வைத்து தலையில் ஒத்தடம் கொடுப்பதால் சூடான வலிக்கு குளிரான ஒத்தடம் ஒரு மர மரப்பான தன்மையை அந்த இடத்தில் ஏற்படுத்தி வலியின் வீரியத்தை குறைக்கிறது. இந்த ஒத்தடம் உங்கள் தசைகளையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது.

காஃபைன்

காஃபைன்

ஒற்றைத் தலைவலி இருக்கும் போது ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற முறையில் காஃபைன் எடுத்தால் அதன் வலி குறைந்து விடும்.

மக்னீசியம் உணவுகள்

மக்னீசியம் உணவுகள்

மக்னீசிய சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுக்கும் போது ஒற்றைத் தலைவலி குணமாகிறது. இந்த முறை பெண்களின் மாதவிடாய் வலிகளையும் சரி செய்கிறது. மக்னீசியம் அடங்கியுள்ள உணவுகளாவன கீரைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, சூரிய காந்தி இலைகள், வெள்ளை சோளம், ப்ரவுன் அரிசி, முழு தானியங்கள் ஆகியவை ஆகும்.

இருட்டு அறையில் அமர்தல்

இருட்டு அறையில் அமர்தல்

வெளிச்ச கூச்சத்தினால் அல்லது போட்டோ போஃபியா போன்றவற்றாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. எனவே அதற்கு எதிர் பதமாக ஒரு இருட்டு அறையில் ஓய்வு எடுத்தால் கொஞ்சம் ரிலீவ் உண்டாகும்.

விட்டமின் பி2 அடங்கிய உணவுகள்

விட்டமின் பி2 அடங்கிய உணவுகள்

நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் ரிபோப்ளவின் (விட்டமின் பி2) எடுத்து கொள்ள வேண்டும். இதை 3 மாதங்கள் பின்பற்றினால் நல்ல மாற்றத்தை காணலாம்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

ஒற்றைத் தலைவலி மேலும் நமது தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. எனவே நன்றாக தூங்கினாலே போதும் ஒற்றைத் தலைவலியை துரத்தி விடலாம்.

தலை மற்றும் கழுத்து பகுதி மசாஜ்

தலை மற்றும் கழுத்து பகுதி மசாஜ்

அப்படியே உங்கள் தலை மற்றும் கழுத்து பகுதியை மசாஜ் செய்தால் போதும். அதனுடன் கொஞ்சம் ஐஸ் பேக் ஒத்தடம் கொடுத்தால் நல்ல ரிலீவ் தசைகளில் உண்டாகும்.

பட்டர்பர் மூலிகை

பட்டர்பர் மூலிகை

ஒற்றைத் தலைவலிக்கு பட்டர்பர் மூலிகை ரெம்ப காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள் ஒற்றைத் தலைவலியை சீக்கிரமாக குணமாக்ி விடுகின்றனர்.

பீவர்வ்யூ மூலிகை

பீவர்வ்யூ மூலிகை

இந்த மூலிகை ஒற்றைத் தலைவலி வருவதை தடுக்கிறது. நிறைய மக்கள் இந்த மூலிகையை பயன்படுத்தி ஒற்றைத் தலைவலி குணமாகி உள்ளதாக கூறுகின்றனர்.

குளூட்டன் ப்ரீ டயட் (கோதுமை இல்லாத உணவுப் பழக்கம்)

குளூட்டன் ப்ரீ டயட் (கோதுமை இல்லாத உணவுப் பழக்கம்)

சில ஆராய்ச்சிகளின் முடிவு குளூட்டன் ப்ரீ டயட் மேற்கொண்டால் ஒற்றைத் தலைவலி குறைகிறது என்று கூறுகின்றனர்.

லாவண்டர் எண்ணெய்

லாவண்டர் எண்ணெய்

லாவண்டர் எண்ணெய்யை நெற்றியின் இரு பக்கங்களிலும் மற்றும் கழுத்தின் பின் பகுதியிலும் தேய்த்து மசாஜ் செய்தால் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

போதுமான நீர்ச்சத்து உடலில் இல்லாமல் இருந்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடித்தால் உடலின் மெட்டா பாலிசம் அதிகரித்து ஒற்றைத் தலைவலி சரியாகும்.

நச்சுக்களை வெளியேற்றும் குளியல்

நச்சுக்களை வெளியேற்றும் குளியல்

ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த நச்சுக்களை வெளியேற்றும் குளியலை மேற்கொள்ளவது நல்லது. இந்த குளியலை நிறைய வழிகளில் செய்யலாம். சூடான நீருடன் ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து குளிக்கலாம். மேலும் நமக்கு தேவையான எண்ணெய்களையும் கலந்து கொள்ளலாம்.

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர்

ஒற்றைத் தலைவலிக்கு அக்குபஞ்சர் முறை நல்ல தீர்வை அளிக்கிறது. இது உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

யோகா

யோகா

யோகா ஒரு பக்க விளைவுகள் இல்லாத முறையாகும். சில யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி சரியாகும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் ஒற்றைத் தலைவியின் வீரியம் குறைகிறது. உடற்பயிற்சி செய்யும் போது நமது உடல் எண்டோர்பின்ஸ்யை உருவாக்குவதால் இது ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்பட்டு வலியை குறைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

19 Amazing Home Remedies To Treat Migraine Headache

19 Amazing Home Remedies To Treat Migraine Headache
Story first published: Sunday, October 29, 2017, 10:00 [IST]