சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு எளிய வகை உடற்பயிற்சி . வீட்டில் உள்ள அனைவராலும் செய்ய கூடிய ஒரு உடற்பயிற்சி. சைக்கிள் போக்குவரத்து வாகனமாகவும் இருப்பதால் பலவித நன்மைகளும் இதில் உண்டு. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதும் பெரியவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போதும் இதனை பயன்படுத்தி நன்மை அடையலாம்.

சைக்கிள் ஓட்டுவதால் உங்கள் பணம் மிச்சமாகிறது, உங்கள் உடல் ஃபிட்டாகிறது, உங்கள் சுற்று சூழல் பாதுகாக்கப்படுகிறது.

Health benefits of cycling

சைக்கிள் ஓட்டுவது என்பது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு உடற்பயிற்சியாகும். ஓட்ட பயிற்சியை காட்டிலும் உங்கள் மூட்டுகளுக்கு இவை நல்ல பலனை கொடுக்கும்.

உங்கள் இதய நலனை மேம்படுத்த வாரத்திற்கு 150 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது நல்லது.தொடர்ந்து இந்த பயிற்சியை முயற்சிக்கும்போது விரைவில் நல்ல பலனை காணலாம். சைக்கிள் ஓட்டுவதால் உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை காணலாம் மற்றும் உங்கள் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்மார்ட் ஆகலாம்:

ஸ்மார்ட் ஆகலாம்:

சைக்கிள் ஓட்டுவதால் உங்கள் மூளையின் சக்தி அதிகரிக்கிறது மற்றும் பெரியவர்கள் அல்சைமர் போன்ற வியாதிகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர் என்று 2007ம் ஆண்டு சார்லஸ் ஹில்மன் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது.

அதே ஆண்டு Dr .பில் டோம்ப்ரோவ்ஸ்கி நடத்திய ஆய்வில் குழந்தைகளின் மன வளர்ச்சியும் அதிகரிக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.

 நோய்களை குணமாக்குகிறது:

நோய்களை குணமாக்குகிறது:

சமீபத்திய ஆய்வு ,வயது முதிர்ந்தவர்களின் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற நோய்கள்,தொடர்ச்சியான சைக்கிள் பயிற்சி மூலம் குறைந்திருக்கிறது என்றும் அவர்கள் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்று கூறுகிறது. இந்த பயிற்சி நேரம் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆனால் இதன் பலனோ மிகவும் அதிகம்.

இதயத்தை வலுப்படுத்துகிறது:

இதயத்தை வலுப்படுத்துகிறது:

சைக்கிள் ஓட்டுவது இதயத்திற்கு நன்மை பயக்கிறது. ஆய்வு பூர்வமாகவும் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மருத்துவம் மற்றும் அறிவியல் துறை நடத்திய 5 வருட ஆய்வில்,1500 பேரை சோதனைக்கு உட்படுத்தினர்.

அவர்களுள் 31% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு இதன் மூலம் குறைந்ததாக கூறப்படுகிறது.

கவர்ச்சியான தோற்றம்:

கவர்ச்சியான தோற்றம்:

தி பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் நடத்திய ஆய்வில் 600 ஆண்கள் மற்றும் பெண்களை நியமித்தது. அவர்களில் 13% பேர் சைக்கிள் ஓட்டுபவர்களை புத்திசாலிகள் என்றும் சாந்தமானவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.23% பேர் சைக்கிள் ஓட்டுபவர்கள் தான் அவர்கள் விரும்பும் தடகள வீரர்கள் என்றும் பதில் அளித்துள்ளனர்.

கொழுப்பு குறைகிறது:

கொழுப்பு குறைகிறது:

தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டுவதால் உடல் எடை குறைகிறது. பரவலாக எடை குறைவிற்கு உணவில் கொழுப்பை குறைப்பதே முக்கிய காரணம் என்று பேசப்படுகிறது. ஆனால் விஞ்ஞானம் வேறு விதமாக கூறுகிறது.

நீரிழிவு நோய் உள்ள பெண்கள் உடற்பயிற்சியோடு சேர்த்து உணவு மாற்றங்களை மேற்கொள்ளும்போது மட்டுமே அவர்களின் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்புகள் குறைகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இதையே வயது குறைந்த பெண்களுக்கும் பரிசோதிக்க பட்டு உண்மைகள் வெளியாகியிருக்கிறது.

புற்று நோயை தடுக்கிறது:

புற்று நோயை தடுக்கிறது:

சரியான உடல் எடையை பராமரிப்பதும், சீரான உடற்பயிற்சியும், அளவான உணவும் நம் உடலை புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.

அமெரிக்கன் மெடிக்கல் அஸோஸியேஷன் 14,000 ஆண்களை பரிசோதித்தபிறகு வெளியிட்ட கருத்து என்னவென்றால், உடற்பயிற்சியின் மூலம் உடலை சீராக வைத்திருப்பவர்கள் நடுத்தர வயதை எட்டும் போது அவர்களுக்கு குடல் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தன்னை பற்றி உயர்வாக எண்ணுதல்:

தன்னை பற்றி உயர்வாக எண்ணுதல்:

பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு குறிப்பாக சைக்கிள் ஓடுகிறவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவர்.

ஒரு சிறந்த உடற் பயிற்சிக்கு பின்னர் அவர்கள் உடலில் புத்துணர்ச்சி அடைய செய்யும் ஹார்மோன்கள் சுரக்கும். இதன் மூலம் அவர்கள் உலகத்தையே தமதாக்குவர் . சைக்கிள் ஓட்டுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நீண்ட ஆயுள்:

நீண்ட ஆயுள்:

டூர் டி பிரான்ஸ் என்ற ஆய்வில், முற்காலத்தில் சைக்கிள் ஒட்டியவர்களின் ஆயுள் நீடித்ததை பார்க்க முடிந்தது . சராசரியாக 81.5 ஆண்டுகள் அவர்களின் ஆயுள் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது சராசரியாக 70 ஆண்டுகள் தான் ஆயுள் நீடிக்கிறது. இதற்கு காரணம் நாம் கார், பஸ் என்று நமது போக்குவரத்து பயன்பாட்டை மாற்றியதுதான்.

இப்போது கூட தொடர்ந்து சைக்கிளை ஓட்டும்போது 3 மாதங்கள் முதல் 14 மாதங்கள் நம் வாழ்நாளில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நோய்களை அண்ட விடாமல் செய்கிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of cycling

Health benefits of cycling
Story first published: Thursday, August 24, 2017, 16:17 [IST]
Subscribe Newsletter