தாங்க முடியாத பல்வலியா? இந்த பாட்டி வைத்தியங்களை ட்ரை பண்ணுங்களேன்!!

Written By:
Subscribe to Boldsky

தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள். அதிலும் பல் வலி தாங்க முடியாதோடு சாப்பிடவும் முடியாமல் அவஸ்தையை தரும். பல்வலியை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

Granny remedies to treat tooth ache

ஆனால் வலியை குறையச் செயலாம். வலியை மறக்க தற்காலிகமாக மாத்திரை எடுத்துக் கொள்வதால் வலி குறையுமே தவிர நிரந்தர பலன் தராது. அதன் வகையில் இங்கே சொல்லப்பட்டிருக்கும் இயற்கை வைத்தியங்கள் பற்களுக்கு மற்றும் ஈறிற்கு வலிமை தந்து வலியை எப்போதும் போக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு கலந்து பற்களில் தடவினால் வலி குறையும். ஈறு பலப்படும்.

ஆலமரப் பட்டை :

ஆலமரப் பட்டை :

ஆலமரப்பட்டையை பொடி செய்து தினமும் பல் விளக்கி வந்தால் பற்களும் ஈறும் பலப்படும். வலி மறைந்துவிடும்.

 கிராம்பு மற்றும் கொட்டைபாக்கு :

கிராம்பு மற்றும் கொட்டைபாக்கு :

கிராம்பு மற்றும் கொட்டைப் பாக்கை சம அளவு பொடி செய்து பல் விளக்கி வாருங்கள். பல்வலியும் குறைந்துவிடும்.

அருகம்புல் சாறு:

அருகம்புல் சாறு:

அருகம்புல்லில் இருந்து சாறு எடுத்து அவற்றை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறு களில் உள்ள நச்சுகளைப் பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய்த் தொற்றை கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக் கொள்கிறது. மேலும் அருகம்புல் செடியை வாயிலிட்டு மென்று பல் வலியை போக்கலாம்.

 மிளகு மற்றும் உப்பு :

மிளகு மற்றும் உப்பு :

மிளகு கலந்த உப்புகூட வீட்டில் பல் வலிக்கு சிறந்த மருந்தாகும். சம அளவு மிளகு, உப்பு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்தமுறையை தினமும் சில நாள்களுக்கு செய்து வந்தால் பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Granny remedies to treat tooth ache

Granny remedies to treat tooth ache
Story first published: Saturday, January 7, 2017, 15:48 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter