நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும்!!

Posted By:
Subscribe to Boldsky

முக அழகிற்கு முக்கியமானவை பற்கள். பற்களில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்ப்பட்டாலே அவை உடல்நலனை பெரிதும் பாதிக்கிறது. பற்கள் தொடர்பாக இன்னும் பெரும்பாலனோர் விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

பற்களின் வருகிற முக்கால் பங்கு நோய்களை அது வராமலே முன்கூட்டியே தவிர்க்க முடியும். தானா வரும் நோய்களை பற்களைப் பொறுத்தவரையில் மிகவும் குறைவு.

Every day mistakes which ruin your dental health

இதனால் நீங்கள் அன்றாடம் செய்யும் என்னென்ன செயல்கள் எல்லாம் பற்களை பாதிக்கிறது என்பதனையும் பற்கள் பராமரிப்பு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் :

ஐஸ் :

அதிக குளீருட்டப்பட்ட ஐஸ்க்ரீமை கடித்து சாப்பிடுவது.நார்மல் டெம்பரேச்சரில்

இருந்து கொண்டு தீடிரென அதிக குளிரான பொருளை கடித்துச் சாப்பிடுவதால்

பற் கூசும்.

ஈறுகளில் உள்ள திசுக்கள் எல்லாம் பாதிப்படையும் நாளடைவில்

அவை பலவீனமடைந்து பாதிப்பை ஏற்படுத்திடும்

குளிர்பானங்கள் :

குளிர்பானங்கள் :

இன்றைக்கு நாகரிகம் கருதி பலரும் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்களை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இவை உடல் நலனுக்கு பெரும் தீங்கு விளைவிப்பவையாகவே இருக்கிறது. மேலும் இது பற்களுக்கும் கேடு தருகிறது.

குளிர்பானங்கள் என்றாலே அது அதிக குளிர்ச்சியை கொண்டு இருக்கும் அதனை அப்படியே அருந்த பற்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் ஈறுகள் வலுவிழக்கும் மற்றும் சர்க்கரை அளவு பற்களை சொத்தை ஆக்கும். பற்களை

சுற்றி புண்களை உருவாகும் அபாயம் உள்ளது

பேஸ்ட் :

பேஸ்ட் :

ஃப்ளோரைட், உப்பு, ஜெல் எனப் பல்வேறு பற்பசைகள் உள்ளன. ஃப்ளோரைட் உள்ள பற்பசையானது பற்களுக்கு வலிமை சேர்க்கும். அதுவும் 10 லட்சத்துக்கு ஒன்று என்ற அளவில் ஃப்ளோரைட் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ட்ரைக்ளோசான் உள்ள பற்பசைகள் ஈறுக்கு வலிமை சேர்க்கும். ஜெல் உள்ள பற்பசைகளைத் தவிர்க்கலாம்.

குழந்தைகள் பற்பசையை விழுங்கிவிடக்கூடும். இதனால் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, பிரத்யேகப் பற்பசைகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப்

பயன்படுத்தலாம்.ஒரு பட்டாணி அளவுக்கு பற்பசை இருந்தால் போதும்.

அதைக்கொண்டே பற்களைத் துலக்கலாம். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் பல் துலக்கிவிட வேண்டும்.

கடிப்பது : .

கடிப்பது : .

சிலர் டென்சன் ஆனால் நகத்தை கடிப்பது, பேனா, பென்சில் போன்றவற்றை கடிப்பது

எனச் செய்வார்கள். இதனால் பற்களுக்கும் அதன் வேர்களுக்கும் பெரும் பாதிப்பு

உள்ளாக்கிடும்.

நம்மையும் அறியாமல் இதைச் செய்வதால் உடனடியாக நிறுத்த வேண்டியது கட்டாயம்.

பிரஷ் :

பிரஷ் :

ஹார்டு, மீடியம், சாஃப்ட் என மூன்று வகைகளில் பிரஷ்கள் கிடைக்கின்றன.

பொதுவாக பல் மருத்துவர்கள் ஹார்டு பிரஷ்களை பரிந்துரைப்பது இல்லை. பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அப்போதுதான் பல்

வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும்.

பிரஷில் உள்ள இழைகள், பூ காம்புகளைப் போன்று வளைய ஆரம்பித்தால், உடனே பிரஷை மாற்றிவிட வேண்டும். பொதுவாக, இந்த இழைகள் 60 நாட்களில் வளைய ஆரம்பிக்கும். எனவே, 60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை

மாற்றுவது நல்லது.

தண்ணீர் :

தண்ணீர் :

நம் உடலுக்கு தேவையான தண்ணீரைக் குடிப்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல பற்களுக்கும் மிகவும் நல்லது. வாயில் எச்சில் சுரப்பிற்கு தண்ணீர் மிகவும் தேவையாக இருக்கிறது.

ஒரு நாளில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் எச்சிலுக்காக செலவிடப்படுகிறது. அதனால் நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.

பழச்சாறு குடிப்பதை விட தண்ணீர் குடிப்பது தான் சிறந்தது. பழச்சாறுகளில் இருக்கும் சர்க்கரைப் பொருள் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை தவிர்த்திட

வேண்டும்.

இடம் :

இடம் :

பெரும்பாலும் பிரஷ்ஷினை பாத்ரூமிற்கு உள்ளேயே வைப்பது தான் வழக்கமாய் இருக்கிறது.

அதுவும் ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் நான்கு பிரஷ்ஷுமே ஒரே இடத்தில் நெருக்கமாய் வைப்பதை தவிர்த்திட வேண்டும்.

தண்ணீர் அதிகமிருக்கும் இடம், குளிர்ச்சியான இடங்களில் தான் பாக்டீரியா வேகமாக பரவும்.

அதோடு பிரஷ் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும் போதும் பாக்டீயா பரவும் என்பதால் பாத்ரூமுக்கு உள்ளே பிரஷ்ஷினை வைப்பது தவிர்த்திட வேண்டும்.

சத்துக்கள் :

சத்துக்கள் :

பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம், கால்சியம் சத்து உறிந்து கொள்ள விட்டமின் டி அத்தியாவசியம்.

உணவுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்ப்பட்டால் அல்லது சத்துக் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் அதன் அறிகுறிகள் பற்களில் தான் தெரியும். அதனால் சத்தான

காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தேய்க்கும் முறை :

தேய்க்கும் முறை :

பெரும்பாலும் பல் துலக்கும்போது பிரஷை இட வலமாக பற்களின் மேல் அழுத்தித் தேய்ப்பார்கள். இப்படி செய்வதால் எந்த பலனும் இல்லை. அழுத்தித் தேய்ப்பதால்

பற்களின் மேல் இருக்கும் கிருமிகள், உணவுத் துகள்கள் பல் இடுக்கில் தங்கிவிடும்.

இதனால் பற்கள் தேயவும் வாய்ப்பு உள்ளது. டூத் ப்ரெஷ்ஷை 45 டிகிரி சாய்த்து மெதுவாக ஒவ்வொரு பல்லிலும், உங்கள் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து மென்மையாக துலக்க வேண்டும்.

ஒவ்வொரு பல்லுக்கும் செய்ய இரண்டு முதல் மூன்று நொடிகள் போதுமானது.

இப்படி செய்வதன் மூலம் ஈறுகளில் ஒளிந்திருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் கிருமிகள் வெளியேற்றப்பட்டு பற்கள் பளிச்சிடும்.

நார்ச்சத்து :

நார்ச்சத்து :

இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடையபற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது.

அதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும்,

பற்களுக்கும் ஆரோக்கியமானது.

சுத்தம் :

சுத்தம் :

கொத்தமல்லித் தழையை லேசாகக் கழுவிவிட்டு சமைக்காமலேயே பயன்படுத்துகிறோம்.மேலும், பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடும்போது, உணவுகளில் கிருமிகள் இருக்கலாம். இவை பற்களையும் பதம் பார்க்கும். காய்கறிகளை வெந்நீரில் போட்டு

லேசாக வெந்ததும் சாப்பிடுவது நல்லது.

கர்ப்பம் :

கர்ப்பம் :

கர்ப்பக்காலத்தில் டெட்ராசைக்ளின் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்பவர்களின் சிசுவுக்கு பற்களின் நிறம் மஞ்சளாக இருக்கலாம். பொதுவாக டாக்டர்கள் கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பது இல்லை.

கர்ப்பகாலத்தில் பெண்கள் பல் மற்றும் ஈறுகளை பராமரிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தவேண்டும். பல்லில் தொற்று ஏற்பட்டு அதை கவனிக்காமல் விட்டுவிட்டால்,

தொப்புள்கொடி வழியாக குழந்தையையும் அந்த தொற்று தாக்கும். அதனால் குழந்தையும் பாதிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Every day mistakes which ruin your dental health

Every day mistakes which ruin your dental health
Story first published: Monday, October 30, 2017, 16:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter