மூட்டு வலியை போக்கனுமா? காலையில் இப்படி வெறும் வயித்துல குடிச்சுப்பாருங்க!! ஒரு ஸ்பெயின் மருத்துவம்

Written By:
Subscribe to Boldsky

முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது.

சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும்.

அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

உங்களுக்கு இயற்கை முறையில் மூட்டு வலியை போக்கக் கூடிய வைத்தியமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீர்வு -1

தீர்வு -1

நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வடிவமாக வெட்டி ஒரு கப் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

 தீர்வு -2 :

தீர்வு -2 :

ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

தீர்வு-3

தீர்வு-3

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

 தீர்வு-4 :

தீர்வு-4 :

இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும்.

இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு. நல்ல பலனை தரும். இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும்.

இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

தீர்வு-5 :

தீர்வு-5 :

ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப் பழக்கங்கள் :

உணவுப் பழக்கங்கள் :

வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்க வேண்டியவை :

தவிர்க்க வேண்டியவை :

காரமான வறுத்த உணவுகள், காபி, தே நீர், பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம் போன்றவற்றை தவிர்த்தால் மூட்டு வலி குணமாக ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective Ayurvedic remedies to treat for Knee pain

Effective Ayurvedic remedies to treat for Knee pain
Story first published: Saturday, April 29, 2017, 10:00 [IST]
Subscribe Newsletter