நுகர்ந்து பார்த்தாலே உடல் எடை குறையும் அதிசயம்! நீங்களும் பின்பற்றலாம்

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை குறைப்பு தொடர்பான டயட் மற்றும் உடற்பயிற்சிகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உலாவுகின்றன. இதைத் தாண்டி வேறு எதாவது ஒரு வழியிருக்கிறதா என்று தேடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்திடும்.

Best Oils To Reduce Belly Fat Quickly

சில குறிப்பிட்ட எண்ணெய்களைக் கொண்டு நீங்கள் உடல் எடையை தாரளமாக குறைக்கலாம் . இது நம் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுவதுடன், பசியை மட்டுப்படுத்துகிறது அதோடு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உணவு செரிப்பதற்கு உதவுகிறது. இதனால் கணிசமாக உடல் எடை குறைந்திடும். குறிப்பாக தொப்பையை குறைப்பதற்கு இந்த எண்ணெய்கள் நிறையப் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெமன் ஆயில் :

லெமன் ஆயில் :

இது மிகவும் அடிப்படையான ஒன்று தான். இது நம் எனர்ஜி லெவலை அதிகப்படுத்தும். இதில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது நம் உடலுக்கும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன.

உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களையும், அதிகப்படியான கொழுப்பினையும் நீக்கச் செய்கிறது. அதோடு இதில் d-limonene உட்பட பல்வேறு விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் அடங்கியிருக்கின்றன.

காட்டனில் லெமன் ஆயிலை ஊற்றி நனைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை சாப்பிடுவதற்கு முன்னால் நுகர்ந்து பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகப்படியாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு சொட்டு லெமன் ஆயிலை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

க்ரேப் ஆயில் :

க்ரேப் ஆயில் :

லெமன் ஆயிலைப் போன்றே க்ரேப் ஃப்ரூட் ஆயிலும் பல்வேறு உடல் நல நன்மைகளை வைத்திருக்கிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும்.

கொழுப்பை கரைக்க உதவிடும். பசியை மட்டுப்படுத்தச் செய்வதுடன் நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக தொப்பையை குறைக்க உதவிடும்.

க்ரேப் ஆயிலை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.இவை உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

அரை ஸ்பூன் க்ரேப் ஆயிலுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தொப்பையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.

புதினா ஆயில் :

புதினா ஆயில் :

செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்த எண்ணெய் முக்கியப் பங்காற்றுகிறது. உணவு செரிக்க உதவுவதுடன் . இந்த ஆயிலை பயன்படுத்தினால் நிறைவான உணர்வைத் தருவதால் அதிகப்படியான உணவினை எடுத்துக் கொள்ள முடியாது.

சாப்பாட்டிற்கு முன்பு பெப்பர் மிண்ட் ஆயிலை பஞ்சில் நனைத்து நுகர்ந்து பாருங்கள். அதோடு பெப்பர்மிண்ட் கலந்த தண்ணிரை சாப்பாட்டிற்கு முன்பு குடிக்கலாம். காலையில் இதனைக் குடிப்பதால் நாள் முழுமைக்கும் தேவையான எனர்ஜி கிடைத்திடும்.

பட்டை எண்ணெய் :

பட்டை எண்ணெய் :

இலவங்கப்பட்டை வாசனை பிடிக்குமென்றால் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் உடல் எடை அதிகரிக்கும்.

இலவங்கப்பட்டை எண்ணெய் பயன்படுத்தி வந்தால் அதிகப்படியான சர்க்கரையை எடுக்க வேண்டும் என்று தோன்றாது. அதோடு உடலின் சர்க்கரையையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.

நீங்கள் சாப்பிடும் பழங்க, டீ போன்றவற்றில் இரண்டு சொட்டு இந்த எண்ணெயை சேர்க்கலாம். ஒரு கப் சூடான தண்ணீரில் பட்டை எண்ணெய் இரண்டு சொட்டு அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பாட்டிற்கு முன்பாக குடிக்க வேண்டும்.

லேவண்டர் ஆயில் :

லேவண்டர் ஆயில் :

லேவண்டர் ஆயிலினால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. இது நம் மனதை அமைதிப்படுத்த முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நம் உடலில் இருக்கும் கொர்டிசால் என்கிற ஹார்மோன் அதிகமாக சுரக்காமல் வழி செய்கிறது. இந்த ஹார்மோன் தான் உடல் எடை அதிகரிப்பிற்கு பயன்படுகிறது.

நிம்மதியான தூக்கத்திற்கு இந்த ஆயிலை பயன்படுத்தலாம்.

இஞ்சி ஆயில் :

இஞ்சி ஆயில் :

பசியுணர்வினை கட்டுப்படுத்தும். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கும் அதிலுக்கும் சத்துக்கள் உடலில் சேர்வதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது.

ஒரு கப் சூடான தண்ணீரில் மூன்று சொட்டு இஞ்சி எண்ணெயை கலந்து குடித்திடுங்கள்.

ஏலக்காய் எண்ணெய் :

ஏலக்காய் எண்ணெய் :

ஏலக்காயில் இருக்கும் சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதே போல ஏலக்காய் எண்ணெயை பயன்படுத்தியும் உடல் எடையை குறைக்க முடியும். சிறுநீர் தொற்று தொடர்பான பிரச்சனையையும் இது தீர்க்கும்.

நீங்கள் சமைக்கும் உணவுகளிலேயே ஏலக்காய் எண்ணெய் இரண்டு சொட்டு பயன்படுத்துங்கள்.

இதைத் தவிர இதனை சாப்பிடுவதற்கு முன்னர் நுகர்ந்து பார்க்கலாம்.

ப்ளாக் பெப்பர் ஆயில் :

ப்ளாக் பெப்பர் ஆயில் :

உடல் எடையை குறைக்கும் உணவுப்பொருட்களின் பட்டியலில் மிளகு கண்டிப்பாக இடம் பெறும். அளவுகோலின்றி அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்கிறவர்களாக இருந்தால் ப்ளாக் பெப்பர் ஆயில் உங்களது அதீத பசியை கட்டுப்படுத்தச் செய்யும்.

வெந்தய எண்ணெய் :

வெந்தய எண்ணெய் :

உடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் வெந்தயம் முக்கியப் பங்காற்றுகிறது. இது கொழுப்பைக் கரைக்க உதவிடுகிறது. அதே போல கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களையும் சுரக்கச் செய்கிறது,இதைத்தவிர நாள் முழுமைக்கும் சுறுசுறுப்பாக இருக்க இந்த வெந்தய எண்ணெய் பயன் தருகிறது.

குளிக்கும் நீரில் ஐந்து சொட்டு வெந்தய எண்ணெயை கலந்து குளிக்கலாம். இதைத்தவிர, மூன்று சொட்டு வெந்தய எண்ணெயுடன் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் கலந்து தொப்பையில் தடவி மசாஜ் செய்திட வேண்டும்.

ஆரஞ்ச் ஆயில் :

ஆரஞ்ச் ஆயில் :

லெமன் ஆயிலைப் போன்றே தான் ஆரஞ்ச் ஆயிலும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. அதைத் தாண்டி ஆரஞ்சு ஆயில் உங்களுடைய மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது உங்களுடைய எமோஷனல் லெவலை மேம்படுத்தும்.

சாப்பாட்டிற்கு முன்பாக இந்த ஆயிலை நுகர்வது, சூடான நீரில் ஆரஞ்ச் ஆயிலை கலந்து குடிப்பது ஆகியவற்றை தொடர்ந்து செய்யலாம்.

ஜாஸ்மின் ஆயில் :

ஜாஸ்மின் ஆயில் :

நம்மில் பலரும் இதனை கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு பழமையான முறை தான். ஜாஸ்மின் ஆயில் நமக்கு முழுமையான உணர்வைத் தருவதுடன் மனதை அமைதிப்படுத்துகிறது. இதனால் அதிகமாக உணவு எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.

சாப்பாட்டிற்கு முன்பாக ஜாஸ்மின் ஆயில் நுகர்ந்து பாருங்கள். இதைத் தவிர குளிக்கும் நீரில் நான்கைந்து சொட்டு ஜாஸ்மின் ஆயில் கலந்து குளிக்கலாம்.

சந்தன எண்ணெய் :

சந்தன எண்ணெய் :

உடல் எடையை குறைக்க துரிதமாக பயன் தருவதில் சந்தன எண்ணெயும் ஒன்று. தேங்காயை அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஐந்து சொட்டு சந்தன எண்ணெய் சேர்த்து குடிக்கலாம். இதைத் தவிர யூக்கலிப்டஸ் ஆயில், ரோஸ் மெர்ரி ஆயில், டேங்கிரைன் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Oils To Reduce Belly Fat Quickly

Best Oils To Reduce Belly Fat Quickly
Story first published: Thursday, November 2, 2017, 13:31 [IST]