தாங்க முடியாத கழுத்துவலி வந்தா என்ன செய்வது?

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பொதுவாக உடலில் எதாவது ஒரு இடத்தில் வலி உண்டானால் நமது அன்றைய நாளின் வேலைகள் கடினமாக நடந்தேறும். அதுவும் கழுத்தில் வலி ஏற்பட்டால், அந்த நாளே போயே போச்சு! சிறிய வேலை கூட செய்ய முடியாமல் போய் விடும். கழுத்து வலி வந்தால் உடனே தலை வலியும் சேர்ந்து கொள்ளும். தோல் பட்டைகளும் வலிக்கும். படுக்கவும் முடியாது, உட்காரவும் முடியாது.

Ayurvedic remedies for treating neck pain

கழுத்து வலி ஏன் ஏற்படுகிறது?

சரியான நிலையில் தூங்கவில்லை என்றால் கழுத்து வலி உண்டாகலாம். டென்ஷன் அல்லது மன அழுத்தம் , நீண்ட நேரம் சாய்ந்து கொன்டே இருப்பது, மிகவும் மென்மையான மெத்தையில் படுப்பது, நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார்ந்தபடி வேலை செய்வது, கம்ப்யூட்டர் பார்த்து கொன்டே இருப்பது போன்றவை கழுத்து வலி உண்டாக சில காரணங்களாகும். இதன் காரணத்தை அறிந்து உடனடியாக களைய வேண்டும். இல்லையேல் நிலைமை மிகவும் மோசமாகி விடும்.

கழுத்து வலியை போக்க இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சித்து வலியை குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுத்து வலிக்கான உடற்பயிற்சி:

கழுத்து வலிக்கான உடற்பயிற்சி:

கழுத்து வலியை போக்க உடற் பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். வலிமையூட்டும் பயிற்சிகள், காய் கால்களை நீட்டி செய்யும் பயிற்சிகள் கழுத்து பகுதியை நெகிழ்வுத்தன்மையோடு வைக்க உதவும். இதனால் கழுத்து பகுதி வலிமை அடையும். வயிற்று பகுதில் இருக்கும் அதிகமான தசைகள் முதுகு பகுதியை வளைத்து, கழுத்து வலியை உண்டாக்கும். அடி வயிற்று தசைகளை இறுக்கும் பயிற்சிகள் நன்மை தரும்.

தலையை முன்னும் பின்னும் சில நிமிடங்கள் தொடர்ந்து அசைக்கவும். பிறகு இரண்டு பக்கமும் மாறி மாறி தலையை திருப்பவும்.

தசைகளில் குறைந்த அளவு அழுத்தம் உண்டாகும்போது, வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் திருப்பவும்.

20 முறை தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளவும்.

சிறிது நேரத்தில் உங்கள் கழுத்து வலி பறந்து விடும்.

எண்ணெய் சிகிச்சை:

எண்ணெய் சிகிச்சை:

பெப்பெர்மிண்ட் எண்ணெய் சில துளிகள்

லாவெண்டர் எண்ணெய் சில துளிகள்

துளசி எண்ணெய் சில துளிகள்

சிப்ரஸ் எண்ணெய் சில துளிகள்

ஓலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

மேலே கூறிய எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலக்கவும்.

இவற்றை கலந்து உங்கள் கழுத்து பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த எண்ணெய்களை தனியாகவும் பயன்படுத்தலாம்.

ஒரு நாளில் 2 முறை இதனை செய்யலாம்.

அக்குபஞ்சர் :

அக்குபஞ்சர் :

எந்த வலியையும் குணமாக்க அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறிய ஊசியை சருமத்தின் ஒரூ சில குறிப்பிட்ட இடங்களில் குத்தி வலிகளை குறைக்கும் முறையாகும். இப்படி செய்வதால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு வலிகள் குறைகிறது. இதற்கான மருத்துவரை அணுகி இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஒரு டிஷ்யூ பேப்பரை வினிகரில் முக்கி எடுத்து கழுத்தில் வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விடலாம்.

ஒரு நாளில் 2 முறை இதனை செய்து கழுத்து வலியில் இருந்து விடுதலை அடையலாம்.

மசாஜ்:

மசாஜ்:

நல்ல சூடான நீரில் குளித்து விட்டு கழுத்து பகுதியை துடைத்து கொள்ளவும்.

ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து கழுத்து பகுதியில் நன்றாக மசாஜ் செய்யவும்.

சூழல் வடிவில் மென்மையாக மசாஜ் செய்யவும்.

ஒரு நாளில் காலை நேரத்திலும் மறுபடி ஒரு முறையும் இதனை செய்யலாம்.

அழுத்தமாக மசாஜ் செய்வதால் மேலும் வலி அதிகரிக்கும்.

ஐஸ் :

ஐஸ் :

ஐஸ் கட்டியை எடுத்து ஒரு துண்டில் சுற்றி கொள்ளவும்.

வலி இருக்கும் இடத்தில் அந்த துண்டை வைத்து ஒத்தி எடுக்கவும்.

2 நிமிடம் தொடர்ந்து இதனை செய்யவும்.

ஒரு நாளில் 3-4 முறை இதனை செய்யலாம்.

வைட்டமின்கள்:

வைட்டமின்கள்:

உடலின் ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு வைட்டமின்கள் தேவை. இரத்தத்தில் அதன் அளவு குறையும்போது பலவித உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் குறைந்த வலி மற்றும் நாட்பட்ட வலி உண்டாகிறது. தொடர்ந்து கழுத்து வலியால் அவதிப்படுகிறவர்கள் கீழே கூறும் வைட்டமின்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எலும்பு ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். இந்த சத்து குறையும்போது உடலின் பல இடங்களில் நாட்பட்ட வலி தோன்றும். குறிப்பாக மூட்டுகளில் வலி அதிகரிக்கும்.

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இயற்கையான வலி நிவாரணி ஆகும். இது வலிகளை குறைத்து அழற்சி மற்றும் வீக்கத்தை தடுக்கிறது.

வைட்டமின் சி வலியின் ஆரம்ப நிலயை கண்டறிந்து கட்டுப்படுத்த உதவுகிறது.

 எப்சம் உப்பு :

எப்சம் உப்பு :

குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 2 கப் எப்சம் உப்பை சேர்க்கவும்.

15 நிமிடங்கள் இந்த நீரில் குளியுங்கள்.

ஒரு நாளில் 2 முறை இதனை செய்யலாம்.

கழுத்து காலர் :

கழுத்து காலர் :

கழுத்து வலிக்காக பயன்படுத்தும் காலர்களை மருத்துவ ஆலோசனைப்படி வாங்கி அணிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட இடைவெளியில் அதனை எடுத்துவிட்டு கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை விரித்து பயிற்சி செய்யலாம்.

கழுத்து வலி ஏற்படும்போது மட்டும் இந்த கழுத்து காலரை பயன்படுத்தவும்.

கழுத்து வலி அடிக்கடி ஏற்பட்டால் ஓய்வு அவசியம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உங்கள் இருக்கையில் இருந்து எழுந்து சற்று நேரம் நடப்பது நல்லது. நீங்கள் எப்படி உட்காருகிறீர்கள் என்பதை கவனியுங்கள் . ஜங்க் உணவுகளை தவிர்த்து காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் பருமனும் கழுத்து வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். உடல் நலனில் அக்கறை கொண்டு ஆரோக்கியமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic remedies for treating neck pain

Ayurvedic remedies for treating neck pain
Story first published: Thursday, October 26, 2017, 18:00 [IST]