அல்சரை உணவின் மூலமாகத்தான் கட்டுப்படுத்த முடியும். !! எப்படின்னு ஆயுர்வேதம் சொல்றத கேளுங்க!!

Written By:
Subscribe to Boldsky

அல்சருக்கு உணவுதான் முதல் மருந்து. நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள்.

Ayurvedic medicinal foods to treat Ulcer

இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.

வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். உங்களுக்கான அருமையான நாட்டு வைத்திய குறிப்புகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சுக்குப் பொடி :

சுக்குப் பொடி :

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

அதிமதுரம் :

அதிமதுரம் :

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

தென்னம் பூ :

தென்னம் பூ :

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

 திப்பிலி :

திப்பிலி :

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

தயிர்

தயிர்

தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் கூடிய அல்சரில் இருந்து நிவாரணம் தரும். ஆகவே அல்சர் இருந்தால், தயிரை அதிகம் சாப்பிட்டால், விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.

முட்டைகோஸ்

முட்டைகோஸ்

முட்டைகோஸில் அமினோ அமிலங்கள், எல் குளூட்டமைன் மற்றும் ஜெபர்னேட் போன்ற அல்சரை சரிசெய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது. இவை அல்சரை குணமாக்குவதோடு, செரிமான மண்டலத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, இனமேல் அல்சர் வராமல் தடுக்கும்.

 வாழை

வாழை

வாழையில் அல்சரை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

 கைகுத்தல் அரிசி :

கைகுத்தல் அரிசி :

கைக்குத்தல் அரிசிகைக்குத்தல் அரிசியில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வளமாக நிறைந்துள்ளது. எனவே அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாவதோடு, அதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால், உடலியக்கங்கள் அனைத்தும் சீராக இயங்கும்.

சீஸ்

சீஸ்

சீஸில் எண்ணற்ற ஆரோக்கியமாக பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருளை அதிகம் சாப்பிட்டால், அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, அல்சர் எளிதில் குணமாகிவிடும்.

பூண்டு

பூண்டு

பூண்டுகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை உணவில் சேர்க்க உடலில் நோயை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். குறிப்பாக அல்சர் உள்ளவர்கள், பூண்டுகளை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic medicinal foods to treat Ulcer

Ayurvedic medicinal foods to treat Ulcer
Story first published: Tuesday, May 2, 2017, 12:10 [IST]
Subscribe Newsletter