Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் 6 வகையான அற்புத ஜூஸ் !!
மலச்சிக்கலை குணப்படுத்த இந்த 6 வகையான பழச் சாறுகளை குடித்துப் பார்த்து அதன் நன்மைகளை பெறும் வகையில் இந்த க்ட்டுரை விவரித்துள்ளது.
மலச்சிக்கல் இன்று பெரும்பாலோனோருக்கு வரும் பிரச்சனை. போதுமான நெகிழ்வுத்தன்மை மற்றும் உடல் உழைப்பு இல்லாததால் இவ்வாறு உண்டாகக் கூடும்.
மலச்சிக்கலை குணப்படுத்தாவிட்டால் அது பைல்ஸ் மற்றும் பல பாதிப்புகளை தந்து விடும். பழச்சாறுகள் மலச்சிக்கலை குணப்படுத்த மிகவும் உதவி புரிகின்றன.

அவை மலத்தை இளக்குவதோடு,அதிக நார்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றன.
அவ்வாறு மலச்சிக்கலை தடுக்க உதவும் முக்கிய ஜூஸ் பற்றி காண்போம்.

ப்ருனே பழச் சாறு :
ப்ருனே பழங்களை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து பின் அதன் காம்பை அகற்றி ஒரு கப் அளவு நீர் கலந்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் சிறிது தேன் மற்றும் சீரகப்பொடி கலந்து குடிக்க வேண்டும்.

பேரிக்காய் பழச் சாறு :
பேரிக்காயை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு மிக்ஸியில் அரைக்கவும் தேவைபடும் நீர் சேர்த்து அரைக்க வேண்டும். அதன் பின் இதில் கால் மூடி எலுமிச்சை சாறு மற்றும் ஒருன் சிட்டிகை உப்பு க்லந்து குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.

ஆப்பிள் ஜூஸ் :
ஆப்பிளை துண்டாக அரிந்து பின் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு சிறிது சோம்புப் பொடி கலந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ் :
ஆரஞ்சு சுளைகளில் விதைகளை நீக்கிய பின் சிறிது நீர் கலந்து ஜூஸாக்கி குடிக்க வேண்டும். இதிலுள்ள நார்சத்து குடலியக்கத்திற்கு பெரிதும் உதவுவதால் மலச்சிக்கல் குணமாகும்.

எலுமிச்சை சாறு :
எலுமிச்சையில் நீர் சேர்த்து ஜூஸ் செய்யவும். பின் அதில் 1 ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் சீரகப் பொடி கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வாரம் 4 நாட்கள் இவ்வாறு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது



Click it and Unblock the Notifications
