குறட்டை விடுவதை தடுக்க 3 எளிய பயிற்சிகள்!! ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை!!

Written By:
Subscribe to Boldsky

குறட்டை விடுவதை நம்மில் பெரும்பாலோனோர் அலட்சியமாகவே கருதுகிறோம். ஆனால் அது உயிருக்கு ஆபத்தை கூட வரவழைத்து வைத்துவிடும்.

குறட்டை விடுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று நாக்கு தான். நாக்கு தூங்கும்போது பின்னோக்கி செலவதால் தொண்டைப் பகுதியில் உள்ள சுவாசக் குழாயின் மூச்சு சீரில்லாமல் சென்று குறட்டை உண்டாகிறது

குறட்டையை உணவின் மூலமாகவோ அல்லது மாத்திரைகளின் மூலமாக சரிப்படுத்த முடியாது. ஆனால் பயிற்சிகளின் மூலம் எளிதில் மற்றவர்களைப் போல தங்கு தடையில்லாமல் மூச்சு விடுவதால் குறட்டை தடுக்கப்படும். அத்தகைய பயிற்சிகளை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பயிற்சி 1 :

பயிற்சி 1 :

முதலில் உங்கள் நாக்கின் நுனியால் மேலண்ணத்தை தொடவேண்டும். பின்னர் பின்னோக்கி நாக்கின் நுனியை கொண்டு செல்ல வேண்டும். அதே நிலையில் 15 நொடிகள் வைத்திருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு நாக்கை கொண்டு வரவும். சில நொடிகள் கழித்து அதேபோல் செய்யுங்கள். இவ்வாறு 5 முறை செய்யலாம்.

பயிற்சி 2 :

பயிற்சி 2 :

நாக்கை மேல்புறமாக மடித்து உள்ளிழுங்கள். மேலண்ணத்தத்திற்கு நாக்கினால் அழுத்தம் நன்றாக கொடுக்க வேண்டும். பின்னர் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மீண்டும் இதேபோல் செய்ய வேண்டும்.

பயிற்சி -3 :

பயிற்சி -3 :

நாக்கின் நுனியை கீழ்வரிசையில் உள்ள முன்பற்களை தொட்டபடி, ஆங்கில எழுத்தான " ஏ" சொல்லுங்கள். நாக்கின் மத்திம பகுதியை மேலண்ணத்தில் அமுக்கம்படி சொல்ல வேண்டும்.

ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

அமெரிக்காவிலுள்ள கேன்டக்கி மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள தூக்கம் சம்பந்தமான மருத்துவதுறையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் டைரக்டர் பார்பரா ஃபிலிப்ஸ் என்பவர் மற்றும் அவரின் குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வெற்றியும் கொண்டனர்.

வெற்றி :

வெற்றி :

குறட்டை விடும் பிரச்சனைக்கு தீர்வு காண, குறட்டை பிரச்சனையால் பாதிப்படைந்த சுமார் 39 பேருக்கு இந்த பயிற்சியை தந்தனர். ஆரம்பித்த சில வாரங்களிலேயே குறட்டை விடுவது குறைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

3 Simple exercise to stop snoring

3 Simple exercise to stop snoring
Please Wait while comments are loading...
Subscribe Newsletter