For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் பற்களை பார்த்தே விட்டமின் குறைப்பாட்டை கண்டுபிடிக்கலாம்

|

100 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த மனிதர்களின் பற்களை கொண்டு அவரின் வயது, வாழ்க்கை முறை சத்து குறைபாடு அகியவற்றை கண்டுபிடிக்கலாம். பற்கள் தொல்பொருளாக வாழ்ந்தவர்க்கு சாட்சியமாக உள்ளது .

மரங்களில் உள்ள வளையங்கள் கணக்கிடுவது போல, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பற்களை வைத்து இறந்த மனிதனின் வாழ்ந்த காலத்தையும் அவனுடைய விட்டமின் டி குறைப்பாட்டையும் கணக்கிடுகிறார்கள்.

Vitamin D deficiency can predict your dental health

உடலில் விட்டமின் டி குறைப்படிருந்தால், பற்களின் திசுவில் படலம் போல படிந்திருக்கும். இந்த பல்திசு, எனாமலுக்கு அடியில் அமைந்துள்ளது. ஆனாலும் விட்டமின் டி குறைப்பாட்டை அளவீடு செய்ய சரியான முறையை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள மேக் மாஸ்டர் பல்கலைக் கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

விட்டமின் டி எலும்புகளின் வளர்ச்சியில் ஈடுபடுவதைப் போல், பற்களின் வளர்ச்சியில் எத்தகைய பங்கு உள்லது என மருத்துவ விஞ்க்னானிகள் ஆராய்ந்து வருகின்ரனர்.

எலும்புகளை விட கடினமானது பற்களின் எனாமல். அது பற்களை நீண்ட காலம் பாதுகாக்கின்றன. அதனால்தான் இறந்த பின்னும் பற்கள் சிதையாமல் அப்படியே இருக்கிறது.

தீவிர விட்டமின் டி குறைப்பாட்டினால் வருவது ரிக்கெட்ஸ். உலகளவில் 1 பில்லியன் குழந்தைகளை பாதிக்கின்றது என்று மேலும் கூறுகின்றனர்.

சூரிய வெளிச்சம் போதுமான அளவு பெறாததே இதற்கு காரணம். இந்த நோயினால், எலும்புகள் மிருதுவாகி, வடிவமிழந்து, வலுவிழக்கிறது.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் நமது இன்றைய காலகட்டங்களில் இருப்பவர்களின் பற்களை, ஆயிரம் வருடத்திற்கு முன் இறந்தவர்களின் பற்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

இதில் ஆயிரம் காலத்திற்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு ரிக்கட்ஸ் நோய் வந்ததன் அறிகுறிகள் இருந்திருப்பது தெரியவதுள்ளது.

இந்த ஆராய்ச்சியை எப்படி மேற்கொண்டார்கள் என்றால், இறந்தவரின் பற்களின் எனாமலுக்கு அடியில் படிந்த படலங்களை ஆராய்ந்து , முடிவிற்கு வந்தனர். அந்த மனிதனுக்கு விட்டமின் டி போதிய அளவு கிடைத்திருக்கவில்லை என தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர் கூறியிருக்கிறார்.

English summary

Vitamin D deficiency can predict your dental health

Vitamin D deficiency can predict your dental health
Story first published: Thursday, July 21, 2016, 17:43 [IST]
Desktop Bottom Promotion