For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்தரங்கப்பகுதிகளில் அலர்ஜியா? கவலை வேண்டாம்.. இதல்லாம் யூஸ் பண்ணுங்க!!

|

பெண்களுக்கு அந்தரங்கப்பகுதிகளில் வரும் பிரச்சனைகளை வெளியே சொல்வதில் மிகுந்த தயக்கம் இருக்கும். இதற்காகவே மருத்துவரிடம் செல்லாமல் நாட்களை கடத்துவார்கள். இது முற்றிலும் தவறு. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை ஒத்திப் போடாமால் கையோடு அதனை கவனிப்பது அவசியம்.

Take care of your private parts

பிறப்புறுப்பில் சிலருக்கு மரு போல சிறி சிறு கொப்புளங்கள் வரும். இது வைரஸினால் உண்டாகும் தொற்று. இதனால் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாகும். அதை அப்படியே விட்டால் மேலும் அந்த தொற்று பரவி, தீவிர பிரச்சனையை தரும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் கிருமி நாசினி. இந்த சிறு கொப்புளங்களுக்கு காரணமான வைரஸை கொல்லும் ஆற்றல் ஆப்பிள் சைடர் வினிகருக்கு உள்ளது.

ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு பஞ்சினால்
நனைத்து, கொப்புளங்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளை செய்தால் ஓரிரு நார்களிலேயே கொப்புளங்கள் மறைந்து விடும்.

தேயிலை மர எண்ணெய் :

தேயிலை மர எண்ணெய் ஒரு ஆன்டி செப்டிக். கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. இவை கொப்புளங்கள் மீது மட்டுமே செயல்படும். சருமத்தை சிறிதும் பாதிக்காது.

தேயிலை மர எண்ணெய் செறிவு மிகுந்தவை. அதனால் அப்படியே அதனை உபயோகப்படுத்தக் கூடாது. நீர்த்த நிலையில்தான் உபயோகிக்க வேண்டும். எனவே அதனை, சம அளவு நீரில் கலந்து, கொப்புளங்கள் மீது பஞ்சினால் தடவுங்கள். விரைவில் கொப்புளங்கள் மாயமாய் மறைந்துவிடும்.

பூண்டு :

பூண்டு சிறந்த கிருமி நாசினி. இது கிருமிகளை அழித்து விடும். பூண்டு கேப்ஸ்யூல் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி அதிலிருக்கும் எண்ணெயை எடுத்து கொப்புளம் மீது தடவுங்கள். விரைவில் குணமாகும்.

வெங்காயம் ;

பூண்டைப் போன்றே வெங்காயத்திலும் அதே ஆற்றல் உண்டு. வெங்காயச் சாறில் சிறிது உப்பு சேர்த்து, கொப்புளம் மீது தடவினாலும், கொப்புளங்கள் ஆறிவிடும். உப்பிலும் ஆன்டி செப்டிக் குணங்கள் உள்ளதால் சீக்கிரம் பலன் கிடைக்கும்.

வாழைப்பழத் தோல் :

வாழைப் பழத் தோலில் நிறைய மருத்துவ குணங்களும் சத்துக்களும் உள்ளன. இவை கிருமி நாசினியும் கூட. இரவு தூங்கும் முன், வாழைப் பழத்தோலை கொப்புளங்களின் மீது தடவிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் கழுவிவிடலாம். விரைவில் கொப்புளங்களின் நிறம் மாறி , உதிர்ந்துவிடும்.

English summary

Take care of your private parts

Take care of your private parts
Story first published: Monday, July 4, 2016, 15:49 [IST]
Desktop Bottom Promotion