கருப்பை புற்று நோயின் அறிகுறிகளை பற்றி தெரிந்திருக்கிறீர்களா?

Written By:
Subscribe to Boldsky

நோயில்லாமல் வாழ்வதுதான் பெரிய சொத்து. புற்று நோய் என்பது பரவலாக பரவிக் கொண்டிருக்கிற நோய்.

முந்தைய காலம் போலல்லாமல் இன்று நிறைய மருந்துகள், சிகிச்சைகள் இருந்தாலும் நோய் கட்டுப்படாமல் வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.

நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறியிருக்கிறது

உடல் உழைப்பு என்பது மிகவும் குறைவு. எல்லாவ்ற்றிற்கும் இயந்திரங்கள் கண்டுபிடித்து நமது உழைப்பை தொலைத்துவிட்டோம்.

கருப்பை புற்று நோய் இதனால்தான் உண்டாகிறது என சொல்ல முடியாது. இது சத்தமில்லாமல் வந்து கொல்லும் உயிர் கொல்லி என்பதை மருத்த உலகம் ஒத்துக்கொள்கிறது. ஆனால் அதனைப் பற்றி விழிப்புணர்வை பெற்றிருப்பது அவசியம்.

கருப்பை புற்று நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். சின்ன அறிகுறியையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், புற்று நோயின் தீவிர தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிவயிறு வலி:

அடிவயிறு வலி:

இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

ஏனென்றால் 80/100 புற்று நோயாளிகளுக்கு இடுப்பு அடிவயிற்றுப் பகுதியில் தாங்க முடியாத வலி உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பசியின்மை :

பசியின்மை :

பசியின்மை. குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போலிருந்தால் இதுவும் கருப்பை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலன கருப்பை புற்று நோயாளிகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

அடிக்கடி சிறு நீர் செல்லுதல் :

அடிக்கடி சிறு நீர் செல்லுதல் :

அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு. அவசரமாய் வருவது போல் உணர்வு என எப்போதும் காணப்பட்டால் அதுவும் கருப்பை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சாதரண சிறு நீர் தொற்று நோய்க்கும் , இதற்கும் குழப்பிக் கொள்ளாதீர்கள். அதிக நீர் குடித்தால் அல்லது சிகிச்சையினால் சிறு நீர் தொற்று குணமாகிவிடும். ஆனால் இது குணமாகாது.

அதிக மன அழுத்தம் :

அதிக மன அழுத்தம் :

மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக காணப்படும். மற்ற புற்று நோயாளிகளுக்கு வருவது போல கருப்பை புற்று நோயாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மன அழுத்தம் , பதட்டம், ஆகியவை காணப்படும்.

 வயிறு பாதிப்பு :

வயிறு பாதிப்பு :

வயிறு பாதிக்கும். வயிற்று வலி, உப்புசம், வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும். மலச்சிக்கலும் அடிக்கடி உண்டாகும். மருந்துக்கள் மலச்சிக்கலுக்கு கொடுத்தாலும் அவை குணமாகாமல் தொடர்ந்தபடி அவஸ்தையை தரும்.

 முதுகு வலி :

முதுகு வலி :

முதுகு வலி கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகும். குறிப்பாக கீழ் முதுகில் வலி அடிக்கடி உண்டாகும்.

 உறவின் போது வலி :

உறவின் போது வலி :

கருப்பை பிறப்புறுப்பின் பாதைக்கு அருகிலேயே இருப்பதால் உடலுறவு கொள்ளும்போது தாங்க முடியாத வலி உண்டாகும்

முறையற்ற மாதவிடாய் :

முறையற்ற மாதவிடாய் :

மாதவிடாய் மாறி மாறி, முறையில்லாமல் வருவது, அடிவயிறு வீங்குதல் ஆகியவை இன்னபிற அறிகுறிகளாலும்.

வரும் முன் காப்பது நல்லது. வந்த உடனேயே காப்பது இன்னும் நல்லது.

மருத்துவ பரிசோதனை :

மருத்துவ பரிசோதனை :

ஆகவே சின்ன அறிகுறிக்கும் உங்கள் மனதை சமாதானம் செய்து கொள்ளாமல் என்ன ஏது என்று உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனால் வரவிருக்கும் ஆபத்தை தடுத்த நிறுத்த உங்களால் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms of ovarian cancer

Do You ever suffer from these things? may cause for Ovarian cancer
Story first published: Monday, October 3, 2016, 14:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter