டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான வழிகள் என்ன? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

வெய்யில் காலம் முடிந்து மழைக்காலம் வந்தாலே இன்னொரு பயம் டெங்கு காய்ச்சலாகத்தான் இருக்கும். வெறும் வைரஸ் காய்ச்சலாக இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம்.

உயிரை குடிக்கும் இந்த காய்ச்சலை வரவிடாமல் காப்பது உங்கள் கையில்தான் உள்ளது. ஏனெனில் இதில் சுகாதாரத்தை விட விழிப்புணர்வு மிக முக்கியமாய் வேண்டும்.

Precautions for dengue fever

எவ்வாறு டெங்கு வைரஸ் உருவாகிறது?

ஏட்ஸ் அல்போபிக்டஸ் என்ற கொசு தேங்கியிருக்கும் சுத்தமான நீரிலிருந்து உருவாகிறது. இவை அசுத்த நீரிலோ சாக்கடைகளிலோ உருவாவதில்லை என்பதை நினைவில் கொள்க. இது டெங்கு வைரஸை பரப்பும் ஒட்டுண்ணி.

இது இரண்டு விதமாக காய்ச்சலை பரப்பும் ஒன்று உயிருக்கு ஆபத்து தராத கடுமையான டெங்கு காய்ச்சல் மற்றொன்று ரத்த இழப்பை ஏற்படுத்தும் காய்ச்சல்( dengue haemorrhagic fever-DHF ). இதில் இரண்டாவது வகை உயிரை பறித்துவிடும் ஆபத்து நிறைந்தது.

Precautions for dengue fever

இந்த கொசுக்கள் எப்படி உருவாகும்?

இதன் நுண்புழுக்கள் செடியின் இலைகளில், வீட்டில் அலங்காரமாக வைக்கும் நீர் நிறைந்த மலர் பானைகளில், நீர் தேங்கிய வீணான டயர்களில், நிறைய நாட்கள் சேமித்து வைக்கபட்டிருக்கும் நீர் தொட்டிகளில், வீட்டு விலங்குகளுக்கு வைக்கப்படும் நீர் பாத்திரங்களில், மழை நீர் தேங்கும் பாட்டில்கள் ஆகியவற்றில் உருவாகும். முக்கியமாய் நீரினை சேர்த்து வைக்காமல் அவ்வப்போது உபயோகப்படுத்த வேண்டும்.

Precautions for dengue fever

எப்போது இந்த கொசுக்கள் கடிக்கும்?

மலேரியா போலவே, இந்த கொசுக்களும் பகலில் கடிக்கும். முக்கியமாய் காலை 5 மணியிலிருந்து 8 மணி வரை மற்றும் மாலை 3- 6 மணி வரை இந்த கொசுக்கள் கடிக்கும். ஆகவே அந்த சமயங்களில் மிக பத்திரமாய் இருந்து கொள்ள வேண்டும்.

Precautions for dengue fever

எப்படி பரவும்?

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. கொசுக்களின் மூலமாக மட்டுமே பரவும். ஆனால் ஒரு இடத்தில் டெங்கு கொசுக்கள் உருவாகினால், அவைகளின் எண்ணிக்கை வேகமாக மற்றொரு இடத்திற்கு பரவும் அபாயம் உள்ளது.

டெங்கு காய்ச்சலின் அறிகுறி என்ன?

குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சலுடன் உடல் முழுவதும் சிவந்து பொறி பொறியான அலர்ஜி ஏற்படும். பெரியவர்களுக்கு லேசான தடிப்புடன் சிவந்து, காய்ச்சல் கூடிய தலைவலி, கண் எரிச்சல், வாந்தி, உடல் வலி ஆகியவை ஏற்படும்.

Precautions for dengue fever

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

உங்கள் சுற்றுப்புறத்தை நீர் தேங்காதவாறு சுத்தமாக பார்த்துக் கொள்வது அவசியம். எல்லா சாக்கடை குழாய்களில் அடைப்பு இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சுற்றுப்புறத்தில் எங்கேயாவது பாட்டில்களில் டயர் , அல்லது காலி இடங்களில் நீர் தேங்கியிருந்தால், தயக்கமேயில்லாமல் அவற்றை கட்டாயமாக அப்புறப்படுத்தவேண்டும். திறந்திருக்கும் நீர்த்தொட்டிகளை மூடி வைத்திருங்கள்.

Precautions for dengue fever

வீட்டில் கொசுவராமல் இருக்க கொசு மருந்து, கொசுவர்த்தி சுருள் ஆகியவயற்றை உபயோகப்படுத்த வேண்டும். முக்கியமாய் உடலில் கொசு கடிக்காமல் தடுக்கும் க்ரீம்களை தடவிக் கொள்ளுங்கள். பகலில் உடல் முழுவதும் மூடியிருக்கின்ற முழுக்கை முழுக்கால் சட்டைகளை உபயோகப்படுத்துங்கள்.

ஆரோக்கியமான உணவு :

Precautions for dengue fever

நல்ல சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும். அப்போதுதான் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். வாரம் மூன்று நாட்கள் நிலவேம்பு கஷாயம் செய்து குடித்தால் இந்த அபாயம் வராமல் தடுக்கலாம்.

English summary

Precautions for dengue fever

Precautions for dengue fever
Please Wait while comments are loading...
Subscribe Newsletter