Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குண்டான இடுப்பை ஸ்லிம்மாக மாற்ற இந்த யோகாவை செய்யுங்க !!
ஆண்களோ பெண்களோ இடுப்பிலுள்ள கொழுப்பை குறைக்க ஜிம் போனாலும் பயனில்லை என கவலைப்படுபவர்கள் அதிகம் பேர்.
அதோடு இடுப்பு குண்டாக இருக்கும்போது, அழகாக ஃபிட்டிங்க் உடைகள் போடும்போது விகாரமாக காட்சி அளிக்கும். எந்த உடை போட்டாலும் வடிவம் தராது.
டயட், உடற்ப்யிற்சி செய்ய நேரமில்லையென்றாலும், உங்கள் இடுப்பை குறைக்க நீங்கள் வெறும் 10 நிமிடங்கள் ஒதுக்க தயாரென்றால் இதனை தொடர்ந்து படியுங்கள்.

பிரசரித பதோத்தனாசனம்
இந்த யோகா இடுப்பி கொழுப்பை குறைப்பதில் பிரசித்தி பெற்ற ஆசனம். இதனை செய்யும்போது, இடுப்பை சுற்றியுள்ள பகுதிகள் நெகிழ்வுத்தன்மை அடைகிறது.
ரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகள் வேகமாக இயங்கப்படுகின்றன. இவக்கையில் கொழுப்பு துரிதமாக எரிக்கப்பட்டு இடுப்பு ஸ்லிம்மாகும்.

செய்முறை :
முதலில் நேராக தடாசனத்தில் நில்லுங்கள். கால், முதுகை நேராக வைக்கவும். ஆழ்ந்து மூச்சை விட்டுக் கொள்ளவும்.

செய்முறை :
பின்னர் கால்களை அகல விரியுங்கள். கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு, உடலை பேலன்ஸ் செய்து கொண்டு மெதுவாக குனியுங்கள்.
பின்னர் கைகளால் கால்களை பிடித்துக் கொண்டு, தலையை கீழே எவ்வளவு முடியுமோ அவ்வளவு குனிந்து கொள்ளுங்கள்.

செய்முறை :
இந்த ஆசனம் நாளடைவில் உங்களுக்கு சுலபமான பிறகு, படத்தில் உள்ளது போல் தரையில் கைகளை பதிந்து தலையை தரையில் முட்டச் செய்யுங்கள்.

பலன்கள் :
இடுப்பு மற்றும் தலைப் பகுதியில் அதிக ரத்த ஓட்டம் பாயும். இடுப்பு எலும்பு பலம்பெறுகிறது. கொழுப்பு குறைகிறது. மூளைக்கு அதிக ரத்தம் பாயும். தலைவலி குறையும்.

குறிப்பு :
முட்டி, இடுப்பு, முதுகில் அடிபட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்வதை தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications