35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள் !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

முப்பது வயதிற்கு பிறகுதான் பெண்களுக்கு வாழ்க்கையே தொடங்குகிறது. குழந்தைகள் வளர்ந்து அவர்களே சுயமாய் தங்களுக்கு செய்து கொள்ளும் நேரங்களில், பெண்கள் தனக்கென இருக்கும் ஆசைகள், கனவுகளை மெய்ப்பட அப்போது தான் செய்ய தொடங்கும் காலம்.

ஆனால் அந்த வயதுகளில் பெண்கள் இன்னொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 வயதிற்கு பிறகு வரும் நோய்கள். இந்த சமயங்களில் பெண்கள் சில முக்கியமான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம். எதற்கு தேவையில்லாமல் இந்த பரிசோதனைகள் என நினைக்கக் கூடாது. இயல்பாகவே காலம் மாற மாற புதுப் புது நோய்கள் வந்துகொண்டிருக்கின்றன. காரணம் நமது மரபனுக்களில் உண்டான மாற்றங்களே.

எனவே அக்கறையோடு இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதால் எந்த நோயையும் ஆரம்பத்தில் அல்லது வருமுன் காக்கலாம் அல்லவா. அவை என்னென்ன என்று பார்ப்போமா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பாப் ஸ்மியர் :

பாப் ஸ்மியர் :

இது பெண்கள் 40 வயதினில் செய்து கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்று நோய் நிறைய பெண்களுக்கு இந்த வயதில் தாக்குகிறது. இந்த பாப் ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்வதால் ஆரம்ப நிலையிலேயே தடுக்கலாம். குணப்படுத்திவிடலாம். ஒரு தடவை செய்தால் 3 வருடங்களுக்கு பிறகு செய்தால் போதும்.

தைராய்டு டெஸ்ட் :

தைராய்டு டெஸ்ட் :

பெண்களுக்கு இது 35 வயதிற்கு பின் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். தாங்க முடியாத மன உளைச்சல், உடல் சோர்வு ஆகிய்வாய் தைராய்டு பிரச்சனைகளின் அறிகுறியே. இது முக்கியமான சுரப்பி , பல்வேறு ஹார்மோன்கள் இதனாலேயே இயங்குகின்றன. ஆகவே தைராய்டு டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

மெமோகிராம் :

மெமோகிராம் :

இது மிக முக்கியமான பரிசோதனை. மார்பக புற்று நோயை கண்டறியும் சோதனையாகும். 30 வயது தாண்டினாலே செய்து கொள்ளலாம். இது சிறு கட்டிகளையும் காண்பித்துவிடும். இதனால் மிக ஆரம்ப நிலையில் இருக்கும் புற்று நோய்கட்டிகளையும் கண்டறியப்படுவதால், மார்பக புற்று நோயை தடுக்கலாம்.

எலும்பு சோதனை :

எலும்பு சோதனை :

பெண்களுக்கு 40 வயது கடந்தாலே எலும்புகள் பலமிழக்க வாய்ப்புகள் உண்டு. காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சம நிலையற்ற நிலையில் இருக்க நேரிடுவதால், விட்டமின் டி மற்றும் கால்சியம் போதிய அளவு உடலில் எடுத்துக் கொள்ளப்டாமல் இருக்கும். இதனால் எலும்பு தேய்மானம் உண்டாகும். இதனால் எலும்பின் அடர்த்தியை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். போதிய அளவு விட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இதயம் :

இதயம் :

இதய நோய்கள் 40 வயதிற்கு பின் பெண்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. காரணம் அதிகப்படியான மன அழுத்தம், ஹார்மோன்களின் சம நிலையற்ற தன்மையால் உடல் பலவிதங்களில் பாதிக்கும். அதில் இதயமும் ஒன்று. அதோடு கொழுப்புகளும் அதிகமாக உடலில் சேரும். அதனால்தான்40 வயதிற்கு பின் பெண்களின் உடல் பருமன், இதய நோய்கள் வரக் காரனம். ஆகவெ இதயத்தையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பப்பை புற்று நோய் :

கர்ப்பப்பை புற்று நோய் :

பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் அதிகம் தாக்கும் புற்று நோயாகும். இது மெனோபாஸிர்கு பிறகு வைரஸால் தாக்கப்படுவது ஆகும். இதனை தடுக்க மெனோபாஸ் காலங்களில் கட்டாயம் கர்ப்பப்பை புற்று நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதி :

பெண்கள் டைப் 2 சர்க்கரை வியாதியால் அதிகம் பாதிக்க்ப்படுகிறார்கள். சரியான டயட்டை உட்கொள்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. அடிக்கடி உணவு வெளியில் சாப்பிடுபவர்கள், போதிய உடல் உழைப்பு இல்லதவர்கள் கட்டாயம் இந்த சோதனையையும் செய்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Important Medical tests for women after 35 s

Important Medical tests for women after 35 s
Subscribe Newsletter