குளிர் காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

வெயில் காலத்தில் வெளியே ஓடி ஆடி வேலை செய்வதாலும், வெப்பத்தினால் வியர்வையாய் கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் மழை மற்றும் குளிர்காலத்தில் வெளியே போக முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பீர்கள்.

இதனால் உடல் எடை கூடும். ஆரோக்கியம் கெடும். அடிக்கடி உடல் சரியில்லாமல் போகும். ஆரோக்கியமான சின்ன சின்ன விஷயங்களை நாம் கடைபிடிக்காததால்தான் அடிக்கடி பாதிப்படைகிறோம். எவ்வாறு குளிர் மற்றும் மழைக்காலங்களில் நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என பார்க்கலாம்.

Protect our body from infection during winter season

காலை வேளை உணவை தவிர்க்காதீர்கள் :

குளிர்காலத்தில் பெரும்பாலோனோர் காலை வேளையில் சாப்பிட மாட்டார்கள். குளிர்காலத்தில் ஜீரண சக்தி சற்று குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயங்களில் குளிருக்கு இதமாய் காபி டீ என குடித்து, காலை உணவை தவிர்த்து விடுவார்கள்.

இது மிகவும் தவறு. இப்படி செய்தால் உடல் எடை கூடும். உடலில் வாய்வு அதிகமாகி அசிடிடி ஏற்படுத்திவிடும். மேலும் மதியம் அதிக உணவு சாப்பிடத் தோன்றும். உடல் பருமனை நீங்களாகவே எற்படுத்திக் கொள்வீர்கள்.

Protect our body from infection during winter season

வீட்டிலேயே முடங்கி இருக்காதீர்கள் :

குளிருக்கு பயந்து வீட்டிலேயே இருப்பது சோம்பேறித்தனத்திற்கு வழிவகுக்கும். மேலும் உடல் நலம் சரியில்லாதது போலவே உணர்வீர்கள்.

உடல் அறையின் வெப்பத்திலேயே இருக்கும்போது வெளியே குளிர் காற்று பட்டாலே உடலுக்குள் கிருமிகள் எளிதில் தாக்கிவிடும். ஆகவே சுதந்திரமாய் குளிருக்கு பழக்கப்படுத்துங்கள்.

அப்போதுதான் நோய் எதிர்ப்பு செல்கள் அதிகமாய் உருவாகும். நல்ல காற்றை சுவாசிக்கும்போது, ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.

Protect our body from infection during winter season

ஜலதோஷம் காய்ச்சல் வராமல் இருக்க :

குளிர்காலத்தில் எளிதில் கிருமிகள் தாக்கும் தான். ஆனால் நோய் எதிர்ப்புதிறனை வளர்த்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் உடல் எதிர்த்து போராடும்.

வீட்டிற்குள்ளேயே இருக்கும் போது போதிய அளவு ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காது. நீர்சத்துக் குறைந்துவிடும். இதனால்தான் உடல் பாதிப்பு ஏற்படும். ஜலதோஷம் காய்ச்சல் உண்டாகும்.

ஆகவே குளிர்காலங்களில் காலையில் இருக்கும் புதிய காற்றில் மூச்சுப்பயிற்சி எடுங்கள். இவை உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்லும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Protect our body from infection during winter season

நீர் சத்தி இழக்காமல் இருக்க வேண்டும் :

குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும், தொண்டை வறண்டு போகாமல் பாத்துக்கொள்ள வேண்டும்.

வெந்நீர் அருந்துவது மிகவும் சிறந்தது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்த்து தட்பவெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.

Protect our body from infection during winter season

வெப்பம் தரும் உணவுகளை உண்ணவேண்டும் :

காய்கறிகள், ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் நிறைந்த உணவுகள் எண்ணெய் மற்றும் மீன் பயன்படுத்தலாம்.

சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

Protect our body from infection during winter season

இஞ்சியை குளிர்காலத்தில் சேர்த்தால் ஜலதோஷம் வராமல் பாதுகாப்பு வளையம் போல் செயல்படும். குளிர்காலத்தில் வளரும் அஜீரண பிரச்சனையை தவிர்க்கலாம். காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் சாப்பிடுங்கள் உடலை சூடாக வைத்து கொள்ளலாம்.

English summary

How To Protect Our Body From Infection During Winter Season

Protect our body from infection during winter season
Story first published: Friday, June 17, 2016, 18:20 [IST]
Subscribe Newsletter