பக்கவாதம் வருவதற்கு முன் எப்போது அதன் அறிகுறிகளை அறியலாம்?

Written By:
Subscribe to Boldsky

பக்கவாதம் பொதுவாக 50 வயதை க்டனத பின் தாக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் உண்டாகும் பாதிப்பினால் பக்க வாதம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இதயம், மூளை, உடல் பருமம் ஆகிய்வற்றிற்கும் தொடர்பு உள்ளன.

How to spot a stroke before it affects

யாருக்கு வரலாம்?

முக்கியமான இதய நோய்களும், பக்கவாதத்திற்கு நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. ஆகவே இதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருப்பவர்கள் பக்க வாதம் வராமல் காத்திடுவது முக்கியம்.

பக்கவாதம் வருவதற்கு முன் உண்டாகும் அறிகுறிகளை எப்படி கண்டறிவது என தெரிந்து வைத்துள்ளீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதையும் அழுந்த பிடிக்க முடியாது :

எதையும் அழுந்த பிடிக்க முடியாது :

உங்களால் எந்த ஒரு பொருளையும் அழுத்தி பிடிக்க முடியாது. டிவியின் ரிமோட் பட்டனை அமுத்தவோ அல்லது கணிணியில் டைப் செய்யவோ இயலாதபடி தோன்றினால் அது பக்க வாதத்தின் அறிகுறியாகும்.

நேராக சிரிக்க முடியாது :

நேராக சிரிக்க முடியாது :

முகம் வீங்கி, சரியாக சிரிக்க முடியாதபடி உங்களுக்கு தோணினால் மூளைக்கு சரியாக ரத்தம் போகவில்லை என்று அர்த்தம். ஒரு பக்கமாக வாய் கோணுவது போல் தோன்றும்.

 பேச்சு குழறுதல் :

பேச்சு குழறுதல் :

உங்களால் சரியாக பேச முடியாது. குழறும். உடலில் ஏதாவது ஒரு பாகம் அசைக்க வேண்டும் என நினைக்கும்போது அசைக்க முடியாது. இந்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நேராக நிற்க முடியாது :

நேராக நிற்க முடியாது :

உங்களால் ஸ்திரமாக நிற்க முடியாமல் தள்ளாடுவதைப் போல் உணர்ந்தால், அல்லது தலை சுற்றுவது போலிருந்தால் பக்க வாதத்தின் அறிகுறியாகும். சம நிலையிழந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடும்.

கொடுமையான தலைவலி :

கொடுமையான தலைவலி :

தலைவலி அசாதரணமாக இருக்கும். தாங்க முடியாத அளவிற்கு தலை நேராக நிற்க முடியாத அளவிற்கு தலைவலி உண்டாகும். இதற்கு காரனம் ரத்த குழாய்கள் வெடித்து ரத்தக் கசிவு உண்டாகியிருப்பதே காரணமாக இருக்கலாம்.

 கண்பார்வை :

கண்பார்வை :

திடீரென கண்பார்வை குறைந்து மங்கலாக வெளிப்படும் அல்லது கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடலாம். இது பக்கவாதத்தின் தாக்கம் பொறுத்து உங்கள் பார்வையின் திறன் மாறுபடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to spot a stroke before it affects

How to spot a stroke before it affects
Story first published: Wednesday, December 21, 2016, 14:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter