வாய்புண்ணிற்கு சிறந்த மருந்ததாகும் காய் எது தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

கோவைக்காய் எளிதில் கிடைக்கக் கூடியது. புதரில் வளரக் கூடியது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.

A vegetable that cures the mouth ulcer

கோவைக்காயை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் கிடைப்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்:-

சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்:-

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.

பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது.

 வாய்ப்புண் குணமாகும்:-

வாய்ப்புண் குணமாகும்:-

கோவைக்காயில் பச்சடி செய்து தொடர்ந்து இரண்டு நாட்கள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

நுரையீரல் பிரச்சனைகளை போக்கும் :

நுரையீரல் பிரச்சனைகளை போக்கும் :

கோவைக்காயின் இலை மற்றும் தண்டு - கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். .

 வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்:-

வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்:-

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும்.

கோவை இலைச் சாறு, பித்தம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகளால் ஏற்படும் தீமைகளுக்கு கோவைக்காய் நல்ல மருந்தாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A vegetable that cures the mouth ulcer

This one vegetable can use to treat mouth ulcer and for various diseases
Story first published: Saturday, December 3, 2016, 16:00 [IST]