Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்கா? இயற்கையாகவே குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்க..
Ovarian Cysts Home Remedies In Tamil: இன்றைய பெண்கள் பொதுவாக பாதிக்கப்படும் பிரச்சினையாக கருப்பை நீர்க்கட்டிகள் உள்ளன. கருப்பை நீர்க்கட்டிகள் என்பது ஒரு பெண்ணின் கருப்பையில் உருவாகும் திரவங்களால் நிரப்பப்பட்ட பைகள் ஆகும்.
ஒரு பெண்ணின் கருப்பை என்பது பாதாம் போன்ற வடிவத்தில் காணப்படுகிறது. இவை தான் இனப்பெருக்கத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கருப்பை நீர்க்கட்டிகள் பொதுவாக ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. இவை பெண்களின் இனப்பெருக்க திறனை பாதிக்கிறது. இதனால் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டிகள் வரும் ஆபத்து குறைவதாக ஆராய்ச்சி கூறுகிறது. சில கருப்பை நீர்க்கட்டிகள் எந்தவித சிகிச்சையும் இல்லாமல் எளிதாக மறைந்து விடும். சில கருப்பை நீர்க்கட்டிகளுக்கு மட்டும் சிகிச்சைகள் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இந்த கருப்பை நீர்க்கட்டிகளை இயற்கையான உணவு முறையின் மூலமும் நம்மால் அழிக்க முடியும். அதைப்பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள்
கருப்பை நீர்க்கட்டிகள் உருவாகுவதற்கு ஹார்மோன் மாற்றங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை கட்டுப்படுத்தக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகளில் பைட்டோ கெமிக்கல் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஹார்மோன்களை சரியாக நிர்வகிப்பதற்கு உதவுகிறது. கருப்பையில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. ஆரஞ்சு, பீன்ஸ், பருப்பு, முழு தானியங்கள், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
புரோட்டீன் வகை உணவுகள்
கருப்பை நீர்க்கட்டிகளை தடுக்க முதலில் எடையை பராமரிப்பதும் மிகவும் அவசியம். எனவே வறுத்த உணவுகள், சிவப்பு இறைச்சி மற்றும் பிற கொழுப்பு உணவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். உணவில் மெலிந்த புரத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். டோஃபு, வேர்க்கடலை, வெண்ணெய், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, கிரேக்க தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. காய்கறிகள் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுகிறது. பச்சை காய்கறிகளில் குறைந்தளவு கலோரிகள் மட்டுமே காணப்படுகிறது. அதிகளவில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் கே, சி ஈ மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த காய்கறிகள் உடலில் உள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றி கருப்பை நீர்க்கட்டிகள் உருவாகுவதை குறைக்கிறது. முட்டைக்கோஸ், பிரக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள், காலிஃப்ளவர், கீரைகள், முள்ளங்கி மற்றும் அருகுலா போன்ற காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மூலிகை தேநீர்
இஞ்சி மற்றும் கெமோமில் தேநீர் போன்றவை மிகவும் சிறந்தது. இந்த மூலிகை தேநீர் அழற்சியை குறைக்க உதவுகிறது. கெமோமில் என்பது ஒரு பழங்கால முறையாகும். இது கருப்பை நீர்க்கட்டிகளை போக்கவும், வலியை குறைக்கவும் உதவுகிறது. இஞ்சி டீயில் ஆன்டிகார்சினோஜெனிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது கருப்பை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
பீட்ரூட்
பீட்ரூட் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஏனெனில் இந்த பீட்ரூட்டில் பீட்டாசயனின் உள்ளது. இது கல்லீரல் திறனை அதிகரிக்கிறது. பீட்ரூட்டில் உள்ள காரத்தன்மை பண்புகள் நமது உடலில் உள்ள அமிலத் தன்மையை சீராக்க உதவுகிறது. இது கருப்பை நீர்க்கட்டிகளின் தீவிரத்தை குறைக்கிறது.
நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் காணப்படுகிறது. பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவை ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. ஹார்மோன் சுரப்பை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் கருப்பை நீர்க்கட்டிகளை அழிக்க உதவுகிறது.
அதே மாதிரி ஆளி விதைகள் போன்ற விதைகளில் பைட்டோ ஹார்மோன்கள் உள்ளன. இவை உடல் உற்பத்தி செய்யும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவை சமப்படுத்த உதவுகிறது. காய்கறிகள், பழங்கள் மற்றும் சாலட்களில் ஆளி விதைகளை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
ஆப்பிள் சிடார் வினிகர்
ஆப்பிள் சிடார் வினிகர் நமக்கு பல நன்மைகளை தருகிறது. கருப்பை நீர்க்கட்டிகளால் ஏற்படும் சில அறிகுறிகளை போக்க ஆப்பிள் சிடார் வினிகர் உதவுகிறது. பாலி சிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் போன்ற அறிகுறிகளை போக்க உதவுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாயை போக்க ஆப்பிள் சிடார் வினிகர் உதவுகிறது. மருத்துவரின் பரிந்துரை பேரில் இதை நீங்கள் எடுத்துக் கொண்டு வரலாம்.
மக்னீசியம் அடங்கிய உணவுகள்
மக்னீசியம் கருப்பை நீர்க்கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. கீழ் முதுகுவலி, வயிற்று வீக்கம், குமட்டல் போன்றவற்றை போக்க உதவுகிறது. இது ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது உடலில் நீர்தேக்கத்தை குறைத்து கருப்பை நீர்க்கட்டிகள் உருவாகுவதை தடுக்கிறது. வெண்ணெய், உலர்ந்த முந்திரி பருப்பு, கருப்பு பீன்ஸ், கீரைகள் மற்றும் சோயா பீன்ஸ் போன்றவை மக்னீசியம் அடங்கிய உணவுகளாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications