Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
நீங்க சாப்பிடும் தர்பூசணி இப்படி இருந்தால் அது கலப்படமான தர்பூசணியாம்... சரியா பார்த்து வாங்கி சாப்பிடுங்க!
கோடைக்காலம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் சில உணவு பொருட்களில் ஒன்றுதான் தர்பூசணி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதற்கேற்ப அங்கங்கே தெருக்களில் சிவப்பு நிறத்தில் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் தர்பூசிணியின் நிறம் நம்மை கவர்ந்து சாப்பிட தூண்டும்.
ஆனால் அத்தகைய தர்பூசணியில் இருக்கும் கலப்படம் பற்றி உங்களுக்கு தெரியுமா? சில எளிய வழிகள் மூலம் நீங்கள் சாப்பிடும் தர்பூசணி பாதுகாப்பானதா அல்லது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது அல்லது இரசாயனங்கள் சேர்க்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இரசாயனம் செலுத்தப்படும் தர்பூசணிகள்
தர்பூசணியில் பயன்படுத்தப்படும் மோசமான கலப்பட நச்சு சாயங்களில் ஒன்றுதான் எரித்ரோசின். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த சாயத்தை பெரும்பாலும் உணவு வண்ணங்களில் பயன்படுத்துகிறார்கள். அதை கண்டறிய தர்பூசணியை இரண்டு பகுதிகளாக வெட்டி, அதன் மீது சிறிது சுத்தமான பருத்தி பஞ்சால் துடைக்கும் போது பஞ்சு சிவப்பு நிறமாக மாறினால், பழத்தில் இரசாயன சாயம் இருக்கிறது என்று அர்த்தம்.
எரித்ரோசின் நரம்பு மண்டலத்தை பாதிக்குமா?
எரித்ரோசினின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்த சாயத்தை நீண்டகாலமாக அல்லது அதிகமாக பயன்படுத்துவது குழந்தைப் பருவ பிரச்சினைகள், தைராய்டு செயல்பாடு போன்ற முக்கியமான நிலைகளில் சிக்கல்களை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுகளின் படி, எரித்ரோசின் மற்றும் டார்ட்ராசின் அதிக அளவு உட்கொள்வது மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
விரைவில் பழுக்க சேர்க்கப்படும் கார்பைடு
கார்பைடு பொதுவாக பழங்களை பழுக்க வைக்க விற்பனையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் முழுமையாக வளர்ச்சியடையாத அல்லது நன்றாக பழுக்காத பழங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி, லாபம் ஈட்ட செயற்கை முறையில் பழுக்க வைக்கின்றனர்.
தர்பூசணியில் கார்பைடு வெள்ளை தூளாக தோன்றும். மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களிலும் கார்பைடு பயன்படுத்தப்படுவதால், பழங்களில் கார்பைடு இருப்பதை கண்டாலோ அல்லது சந்தேகித்தாலோ, அதை வெட்டுவதற்கு முன் சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.
கார்பைடு உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
இது இயற்கையாகவே மிகவும் நச்சுத்தன்மை கொண்டது மற்றும் அதிகப்படியான அளவில் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும். இது தலைவலி, தோல் வெடிப்பு மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். இது உடலின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு மயக்கம், வலிப்பு மற்றும் கோமாவை தூண்டக் கூடியது.
சீசன் இல்லாத நேரத்தில் வாங்கும் பழங்கள்
சீசன் இல்லாத போது கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்களை வாங்க வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். தேவை இருக்கும் போதோ அல்லது சில சமயங்களில் தேவையை உருவாக்கவோ, விற்பனையாளர்கள் வலுக்கட்டாயமாக ரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்காத மற்றும் முழுமையாக வளராத பழங்கள் மற்றும் காய்களை பழுக்க வைக்கின்றனர்.
இத்தகைய இரசாயனங்கள் கலக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவது பெரும்பாலும் சிக்கல்களை ஏற்படுத்தும். சீசன் இல்லாத பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கும்போது, அவற்றை வெட்டுவதற்கு முன் சரியாக கழுவ வேண்டும். வாங்கும் முன் பழங்கள் மற்றும் காய்கறிகள் பிரெஷ்ஷாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
