Latest Updates
-
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும்
வாரத்திற்கு எத்தனை முறை செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லது? தினமும் செக்ஸ் வைச்சுகிட்டா என்ன நடக்கும் தெரியுமா?
உடலுறவு கொள்வது என்பது நமது உடலின் தேவைகளுக்காக மட்டுமல்ல அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்க்கும் அவசியமானதாகும். உடலுறவு கொள்வதால் ஒன்றல்ல பல நன்மைகள் உள்ளன. உடலுறவு மற்றும் நல்ல ஆரோக்கியம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது, ஏனெனில் இது ஒரு எடைக்குறைப்பு, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான குறைந்த ஆபத்து, வலிமையான இதயம் மற்றும் மனச்சோர்வவைக் குறைப்பது போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குறைவான உடலுறவு கொள்வதாக ஆய்வு கூறுகிறது. துல்லியமாக, 2010 முதல் 2014 வரை, அமெரிக்கர்கள் 2000 முதல் 2004 வரை ஆண்டுக்கு ஒன்பது மடங்கு குறைவாக உடலுறவு கொண்டிருந்தனர். இந்த வீழ்ச்சி உலகம் முழுவதும் திருமணமானவர்களிடையே பொதுவாக காணப்படுகிறது.

வேலை மற்றும் தினசரி அலுவல்களாலும், இணையத்தில் அதிக நேரத்தைக் கழிப்பதாலும் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தைக் கண்டறிய தம்பதிகள் தவறிவிடுகின்றனர். ஒரு சராசரி வயது வந்தவர் வருடத்திற்கு 54 முறை உடலுறவை அனுபவிக்கிறார்கள், இது வாரத்திற்கு ஒரு முறைக்கு சற்று அதிகமாகும். ஒன்றாக வாழும் திருமணமான தம்பதிகள் வருடத்திற்கு சுமார் 51 முறை உடலுறவு கொள்கிறார்கள்.
வருடத்துக்கு இவ்வளவு குறைவாக உடலுறவு கொள்வது நிச்சயம் மோசமானது அல்ல. நீங்களும் உங்கள் துணையும் திருப்தியாக இருக்கும் வரை உடலுறவின் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. வாரம் ஒருமுறை உடலுறவு கொள்வதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உகந்தது என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
வாரத்திற்கு பலமுறை உடலுறவு கொள்வது நல்ல ஆரோக்கியத்திற்கும், உறவில் திருப்தி உணர்விற்கும் வழிவகுத்தாலும், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் உடலுறவு கொள்வது எந்த விதத்திலும் அவர்களின் மகிழ்ச்சியைக் குறைக்காது. தினமும் உடலுறவு கொள்வது சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
உணர்ச்சிரீதியான நெருக்கம்
உடலுறவு என்பது உடல் நெருக்கம் மட்டும் அல்ல. இது இரு துணைகளுக்கு இடையே உள்ள உணர்ச்சிப் பிணைப்பை வலுப்படுத்த உதவுகிறது. எந்தவொரு உறவும் வெற்றிகரமாக இருக்க, சம்பந்தப்பட்டவர்கள் உணர்வுபூர்வமாக இணைந்திருக்க வேண்டியது முக்கியம் மற்றும் அந்த உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை உருவாக்க உடலுறவு ஒரு சிறந்த வழியாகும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடி இம்யூனோகுளோபுலின் ஏ (IgA) அளவை அதிகரிக்கிறது, இது உங்கள் உடலை ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக வலிமையாக்குகிறது.
மனஅழுத்தத்தைக் குறைக்கும்
வேலை அல்லது குடும்ப பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் உள்ளீர்களா? அது படுக்கையறையில் உங்கள் செயல்திறனை பாதிக்க அனுமதிக்காதீர்கள். உடலுறவு உங்கள் மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வழக்கமான படுக்கையறை செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மன அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்க முடியும் மற்றும் மகிழ்ச்சியான நபர்களாக இருக்க முடியும் என்று ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது.
வலியைக் குறைக்கும்
உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதற்கு தலைவலியை ஒரு சாக்காக பயன்படுத்தினால், அதை இனிமேல் செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக உடலுறவு கொள்ளுங்கள், ஏனென்றால், நீங்கள் உச்சக்கட்டத்தை அடையும் போது, ஆக்ஸிடாஸின் ஹார்மோனின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கிறது. இந்த எண்டோர்பின் உண்மையில் அசௌகரியம் மற்றும் வலியைக் குறைக்கிறது.
ஆயுளை அதிகரிக்கிறது
ஒருவருக்கு உச்சக்கட்டம் ஏற்படும் போது, டீஹைட்ரோபியன்ட்ரோஸ்டிரோன் என்ற ஹார்மோன் வெளியாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, திசுக்களை சரிசெய்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது உச்சக்கட்டத்தை அனுபவிக்கும் ஆண்கள், சில வாரங்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்ளும் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
நீங்கள் உடலுறவு கொள்ளும்போது உங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதால், உங்கள் உறுப்புகள் மற்றும் செல்களுக்கு புதிய இரத்தம் வழங்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட இரத்தம் அகற்றப்படும் போது, உடல் சோர்வை ஏற்படுத்தும் நச்சுகள் மற்றும் பிற பொருட்களையும் வெளியேற்றுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

