Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
அதிக மன அழுத்தம் கொண்டால் சர்க்கரை நோய் வருமா? - ஆய்வு சொல்லும் உண்மை
Stress And Diabetes In Tamil: மன அழுத்தத்திற்கும், உங்களின் இரத்த சர்க்கரை அளவிற்கும் இடையே நிறைய தொடர்பு உள்ளது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?. மன அழுத்தம் என்பது ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவையும் கிளைகேட் ஹூமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும். அதிகளவு மன அழுத்தம் உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை அளிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
எனவே நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க முதலில் உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். சரி வாங்க மன அழுத்தத்திற்கும் நீரிழிவு நோய்க்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

மன அழுத்தம் நீரிழிவு நோய் மற்றும் இரத்த சர்க்கரை அளவை எப்படி பாதிக்கிறது?
17 ஆம் நூற்றாண்டில் இருந்து நீரிழிவு நோய்க்கும் மன அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. பல்வேறு மன அழுத்தம் ஒரு நபரின் நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
* பொதுவான உணர்ச்சி மன அழுத்தம்
* கோபம் மற்றும் விரோதம் போன்றவை
* வேலை அழுத்தம்
* துக்கம் போன்றவை நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆய்வுத் தகவல்கள்
நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு வகையான மன அழுத்தம் நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். வாழ்க்கை முறை காரணிகள், ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் விளைவுகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் விளைவுகள் போன்றவை இதில் அடங்கும்.
மன அழுத்தம் உங்கள் வாழ்க்கை முறை காரணிகளை பாதிக்கும்
அதிக அளவு மன அழுத்தத்தில் இருப்பது உங்கள் வாழ்க்கை முறை காரணிகளை பாதிக்கிறது. இது ஒரு நபருக்கு நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. தரமற்ற உணவை உண்ணுதல், குறைந்த உடற்பயிற்சி, புகைப்பிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் போன்ற செயல்களிலும் ஈடுபட வைக்கிறது.
மன அழுத்தம் உங்கள் ஹார்மோன்களை பாதிக்கும்
மன அழுத்தம் ஒரு நபரின் ஹார்மோன் அளவை பாதிக்கிறது. இன்சுலின் வேலை செய்யும் விதத்தை தடுக்கிறது. மன அழுத்தம் ஹைபோதாலமிக் பிட்யூட்டரி அட்ரீனல் மற்றும் அனுதாப நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இது அதிகளவு மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை அதிகரித்து, செக்ஸ் ஹார்மோன் போன்ற மற்ற ஹார்மோன் அளவை குறைக்கிறது.
இந்த ஹார்மோன்களின் அளவு இன்சுலின் அளவை பாதிக்கிறது. அசாதாரண ஹார்மோன் மாற்றங்கள் இருப்பவர்களுக்கு இடுப்பின் அளவு அதிகரிக்க நேரிடும். இது நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் உடலைப் போலவே தங்கள் மனதையும் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க நீரிழிவு சங்கம் பரிந்துரைக்கிறது. 2018 ஆம் ஆண்டு ஈரானில் உள்ள ஒரு கிளினிக்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் , சமூகம் தொடர்பான மன அழுத்த மேலாண்மை பயிற்சியில் பங்கேற்பது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களில் ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவை மதிப்பிடுவதற்கு கிளைகேட் ஹீமோகுளோபின் சோதனை நடத்தப்படுகிறது. இது நீரிழிவு தொடர்பான சிக்கல்களை உடனே அறிய உதவுகிறது. எனவே நீரிழிவு மற்றும் மன அழுத்தம் உள்ள நபர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதன் மூலம் கிளைகேட் ஹூமோகுளோபின் அளவை குறைக்க முடியும்.
நினைவாற்றல் பயிற்சி
2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் , நீரிழிவு நோயாளிகள் 29 பேர் நினைவாற்றல் பயிற்சியை மேற்கொண்டனர். , அதே நேரத்தில் கட்டுப்பாட்டுக் குழுவில் 30 பேர் பெறவில்லை. இந்த பயிற்சியைப் பெற்றவர்களின் இரத்த குளுக்கோஸ் மற்றும் கிளைகேட்டட் ஹீமோகுளோபின் உள்ளிட்ட அவர்களின் மனநலம் மற்றும் நீரிழிவு மேலாண்மை நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றங்களைக் கொண்டிருந்தனர் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கும் உத்திகள்:
அமெரிக்க உளவியல் சங்கம் சில மன அழுத்த உத்திகளை நீரிழிவு நோயாளிகளுக்கு எடுத்துரைக்கிறது.
* மன அழுத்தத்தை நிர்வகிக்க நீரிழிவு நோயாளிகள் 20 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ளுதல், ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம்.
* முகத்தில் உள்ள கவலையை போக்க அடிக்கடி சிரித்து மகிழுங்கள்.
* உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து சமூக ஆதரவை பெறுங்கள்.
* தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சியை மேற்கொண்டு வரலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications