Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நைட்டு உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா? அப்ப உங்களுக்கு இதய நோய் ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகமாம்!
போதுமான தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. அதனால், தினமும் 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியான தூக்கத்தை நாம் பெற வேண்டும். ஆனால், பெரும்பாலான மக்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், தூக்கமின்மை இதயநோய் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
24 மணிநேரம் வேலை செய்தும் ஓய்வெடுக்காமல் இருக்கும்போது, உங்கள் தசைகள் வலிக்கத் தொடங்கி, மூட்டுகள் மற்றும் எலும்புகளில் வீக்கம் ஏற்படலாம். அதேபோல, 24 மணிநேரம் உழைத்த பிறகும் உங்கள் இதயத்திற்குத் தேவையான ஓய்வு கிடைக்காவிட்டால் உங்கள் இதயத்திற்கு என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இது உங்கள் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோய் பிரச்சனைகளை உருவாக்கலாம். எனவே, உங்கள் இதயத்தை மீட்டெடுக்க நீங்கள் செய்யக்கூடிய விஷயம், தினமும் போதுமான தூக்கத்தைப் பெற வேண்டும் என்பதுதான். அதற்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய தூக்க பழக்கங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தூக்கம் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
போதுமான தூக்கம் உங்கள் இதய ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. தினசரி எட்டு மணிநேர தூக்கம், உங்கள் உடலை ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. இதனால் தினசரி செயல்பாடுகளைச் செய்யவும், உணவை சரியாக ஜீரணிக்கவும் சரியாக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதன் பின்னர், இதயம் ஓய்வெடுக்கும். தூக்கமின்மை உடல் செயல்பாடுகளில் தலையிடுகிறது. இதனால், செயல்பாடுகள் தடைபட்டு, ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் ஏற்படலாம்.
உங்கள் உடலை மீட்டெடுக்க இரவு சரியான வாய்ப்பாக இருக்கிறது. இந்த நேரத்தில் சரியான தூக்கம் இல்லையென்றால், உங்கள் ஆரோக்கியம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், இது இதய பிரச்சனைகளாக மாறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நம் உடலில் நாம் குவிக்கும் கூடுதல் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
தூக்க நேரம்
போதுமான நேரம் தூங்காமல் இருப்பது, உங்களையும் உங்கள் இதயத்தையும் ஆபத்தில் ஆழ்த்தலாம். உண்மையில், சீரற்ற தூக்க பழக்கம் கொண்ட பெரியவர்கள், உடலில் மோசமான சுழற்சி போன்ற பிற இருதய நோய்களுக்கான ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியின் படி, வாரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள், வழக்கமான தூக்கப் பழக்கம் உள்ளவர்களைக் காட்டிலும் அவர்களின் கரோனரி தமனிகளில் பிளேக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தகைய அபாயங்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, தினமும் இரவில் நன்றாக தூங்குவதுதான்.
ஸ்மார்ட் ஸ்கிரீன்களில் அதிக நேரம் செலவிடுவது
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தொலைபேசி அல்லது மடிக்கணினியில் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். இரவு நேரங்களில் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். இது உங்கள் செரிமானத்தையும் பாதிக்கலாம்.
போதுமான தூக்கம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழி சூரிய அஸ்தமனத்திற்கு முன் சரியான நேரத்தில் சாப்பிட்டு உறங்க வேண்டும். இரவில் 7-8 மணிநேரம் தூங்குவது, இது உங்கள் உடலை சரிசெய்து மீட்டெடுக்க உதவும்.
சரியாக சுவாசித்தல்
உங்களுக்கு இதய நோய் வராமல் இருக்க சரியாக சுவாசிக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்து சுவாசிக்கவும், மெதுவாக மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் வெளியேற்ற வேண்டும். சரியாக சுவாசிப்பது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் நுரையீரலில் ஆக்ஸிஜனின் முக்கியத் திறனையும் உடனடியாக ஆக்ஸிஜனின் செறிவூட்டலையும் மேம்படுத்தும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
வழக்கமான உடற்பயிற்சி நீங்கள் நன்றாக தூங்கவும் உங்கள் இதய செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. பலாசனம் போன்ற யோகாசனங்கள், உஸ்த்ராசனம், சேது பந்த் ஆசனம், புஜங்காசனம், பச்சிமோத்தனாசனம் மற்றும் உட்கார்ந்த பர்வதாசனம் (உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க) போன்ற தலைகீழ் ஆசனங்கள் நல்ல தூக்கத்திற்கும் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆரோக்கியமான உணவு
இதய நோய் வராமல் இருக்க சரிவிகித உணவை சாப்பிடுவது மற்றொரு முக்கியமான விஷயம். உங்கள் ஒழுங்கற்ற இதயத்தை குணப்படுத்தவும், உங்கள் இதயத் துடிப்பு இயல்பு நிலைக்கு வரவும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும். நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


