Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சாப்பிட்டத்துக்கு அப்புறம் உங்க வயிறு பானை மாதிரி வீங்கி இருக்கா? அப்ப இத குடிங்க...உடனே குறைஞ்சிடும்!
அதிகமாக அல்லது நிறைய உணவுகளை சாப்பிட்ட பிறகு வீக்கம், அசௌகரியம் மற்றும் வாய்வு போன்ற உணர்வுகளை சந்திப்பது பொதுவானது. பெரும்பாலான மக்கள் இந்த திடீர் சங்கடமான உணர்வை சரிசெய்ய மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
நீங்களும் வயிற்று வீக்கம் பிரச்சனையை அடிக்கடி சந்திக்கிறீர்களா? இதற்காக மாத்திரிகளை எடுத்துக்கொள்கிறீர்களா? ஆம். எனில், அது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். அதிகளவு ஆன்டாக்சிட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக எடுத்துக்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட சில எளிய பானங்கள் இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவும். இது வீக்கத்தை எளிதாகக் குறைக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். வீக்கத்தை உடனடியாக குறைக்க வீட்டில் தயாரிக்கப்படும் எளிதான பானங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பெருஞ்சீரகம் விதை தேநீர்
பெருஞ்சீரகம் விதைகளை கிரீன் டீயுடன் சேர்த்து ஒரு எளிய தேநீரை காய்ச்சி, சாப்பிட்ட பிறகு இந்த பானத்தை பருகினால் வீக்கம் குறையும். கருஞ்சீரகத்தின் கார்மினேட்டிவ் பண்புகள் மற்றும் பெருஞ்சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாயுவை இயற்கையாகவே சரி செய்யும்.
இந்த பானத்தை தயாரிக்க தண்ணீர் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை கொதிக்கவைக்க வேண்டும். அதில் சிறிது கிரீன் டீயை ஊற்றி, பானத்தை வடிகட்டி குடிக்க வேண்டும்.
புதினா தேநீர்
புதினா மற்றும் தேன் கலந்த தேநீரை குடிப்பது திறம்பட இரைப்பைக் குழாயின் தசைகளைத் தளர்த்த உதவும், இது வீக்கம் மற்றும் வாயுவைப் போக்க உதவும். புதிய அல்லது உலர்ந்த புதினா இலைகளை சூடான நீரில் ஊறவைத்து ஒரு கப் புதினா தேநீர் தயாரிக்க வேண்டும்.
இந்த பானத்தில் தேன் சேர்ப்பது, தேநீரின் செயல்திறனை அதிகரிக்க உதவும். மேலும், இது குணப்படுத்தும் மற்றும் மலமிளக்கிய பண்புகளை வழங்கும்.
எலுமிச்சை மற்றும் இஞ்சி டிடாக்ஸ் பானம்
இந்த பானத்தை தயாரிக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், துருவிய இஞ்சியுடன் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாற்றை கலக்க வேண்டும். பின்னர், வடிக்கட்டி இந்த பானத்தை குடிக்கலாம். எலுமிச்சை செரிமானத்தைத் தூண்ட உதவுகிறது. இஞ்சி அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகிறது.
இந்த இரண்டு பொருட்களும் கலந்த பானம் வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
வெள்ளரி மற்றும் புதினா தண்ணீர்
இந்த பானத்தை தயாரிக்க, வெட்டப்பட்ட வெள்ளரிகள் மற்றும் லேசாக நசுக்கிய புதினா இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து அருந்தலாம். இந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வீக்கம் குறையும். ஏனென்றால், வெள்ளரிகளில் இயற்கையான டையூரிடிக் பண்புகள் இருப்பதால், நீர்ப்பிடிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இஞ்சி தேநீர்
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது செரிமான மண்டலத்தை தளர்த்த உதவும். ஒரு எளிய இஞ்சி தேநீர் தயாரிக்க, சூடான நீரில் புதிய இஞ்சித் துண்டுகளை அரைத்து சேர்க்க வேண்டும். பின்னர் இந்த பானத்தை வடிக்கட்டி குடிக்கலாம்.
வீக்கத்தைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும் எலுமிச்சை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை நீங்கள் இந்த பானத்தில் சேர்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
