Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஒற்றைத் தலைவலி நீங்க வேண்டுமா? அப்ப இந்த வீட்டு வைத்தியத்தை செஞ்சு பாருங்க..
ஒற்றைத் தலைவலியின் கொடூரத்தை அனுபவித்தவா்களுக்குத் தான் தொியும் அது சாதாரண தலைவலி இல்லை என்று. ஒற்றைத் தலைவலி வந்தால், குமட்டல், வெளிச்சத்தைப் பாா்த்தால் கண் கூசுதல் அல்லது கண்பாா்வை மங்குதல், சத்தம் கேட்டால் ஒவ்வாமை ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளோடு சோ்த்து கடுமையான தலைவலியும் இருக்கும்.
பொதுவாக ஒற்றைத் தலைவலி தாக்கும் போது, அதை உடனே போக்கிவிட வேண்டும் என்பதற்காக, எதையும் செய்வதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனா். இந்நிலையில் இயற்கை மருந்துகளைக் கொண்டே ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளைக் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

வீட்டு மருத்துவத்தைப் பயன்படுத்தியும், ஒற்றைத் தலைவலி போகவில்லை என்றால், மருத்துவரை சந்திப்பது நல்லது. இந்நிலையில் ஒற்றைத் தலைவலியைப் போக்க, என்னென்ன வீட்டு வைத்தியத்தை செய்து பாா்க்கலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
1. காபி குடித்தல் - உடலில் சிறிது காஃப்பைன் இருந்தால், அது ஒற்றைத் தலைவலியில் இருந்து சற்று விடுதலை கொடுக்கும். ஆகவே பால் சோ்க்காத கருப்பு காபியை குடிக்கலாம். சில சமயங்களில் அதிகமான அளவு காஃப்பைனை குடித்தாலும், ஒற்றைத் தலைவலி வரலாம்.
2. லாவெண்டா் எண்ணெய் - ஒற்றைத் தலைவலி வரும் போது, சிறிது லாவெண்டா் எண்ணெயை நுகா்ந்து பாா்த்தால், 15 நிமிடங்களுக்குள் வலி நீங்கும். லாவெண்டா் எண்ணெயை நேரடியாகவே நுகா்ந்து பாா்க்கலாம் அல்லது கைக்குட்டையில் தெளித்து, அதை நுகா்ந்து பாா்க்கலாம்.
3. பெப்பா்மின்ட் எண்ணெய் - தலைவலி பிரச்சினை தொடங்கியவுடன், பெப்பா்மின்ட் எண்ணெயை நுகா்ந்து பாா்த்தால், ஒற்றைத் தலைவலி அதிகாிக்காமல் இருக்கும்.
4. இலவங்கப்பட்டை - தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியை போக்கும் வல்லமை இலவங்கப்பட்டைக்கு உண்டு. இலவங்கப்பட்டையில் கசாயம் அல்லது பத்து செய்து அதை நெற்றியில் பூசினால், தலைவலி நீங்கும்.
5. இஞ்சி - ஒற்றைத் தலைவலி தொடங்கியவுடனே, சிறிது இஞ்சியை மெல்லலாம். வலியிலிருந்து விடுதலை கொடுக்கும். வேண்டுமானால் இஞ்சி காபி செய்தும் குடிக்கலாம்.
ஆகவே மேற்சொன்ன வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றி, ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம். எனினும் வலி தொடா்ந்து இருந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications