Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா?
உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
High Cholesterol In Tamil: உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டுள்ளனர். உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையானது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது இதயம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் உயிரையே பறித்துவிடும். நிறைய பேருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பது தெரிவதில்லை. ஏனெனில் இப்பிரச்சனையானது தீவிரமாகும் வரை எந்த ஒரு அறிகுறிகளையும் கவனிக்கும் படி ஏற்படுத்துவதில்லை.
ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன், தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். நிறைய பேர் கொலஸ்ட்ராலைக் குறைக்க சப்ளிமெண்ட்டுகளை எடுக்கிறார்கள். இவற்றில் சில சப்ளிமென்ட்டுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.

அதுவும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைக்கு மருந்துகளை எடுத்து வந்தால், அந்த மருந்துகளுடன் இந்த சப்ளிமெண்ட்டுகள் குறுக்கிட்டு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், பின்வரும் 4 சப்ளிமெண்டுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது உயர் கொலட்ஸ்ட்ரால் இருப்பவர்கள் எந்த மாதிரியான சப்ளிமெண்ட்டுகளை எடுக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
1. பொட்டாசியம் சப்ளிமெண்ட்டுகள்
பொட்டாசியம் என்பது உடலில் திரவ சமநிலையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் கனிமச்சத்தாகும். இரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் கூறுவார்கள். ஏனெனில் பொட்டாசியமானது உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆயினும் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையை கொண்டவர்கள், அப்பிரச்சனைக்கு ஏற்கனவே மருந்துகளை எடுத்து வரும் போது, மருத்துவரின் அறிவுரையில்லாமல் பொட்டாசியம் சப்ளிமெண்ட்டுகளை எடுக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்து, ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
2. பூண்டு சப்ளிமெண்ட்டுகள்
பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பதைத் தவிர, அதில் உள்ள மருத்துவ பண்புகள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிவதன் மூலம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதற்கு காரணம் அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை தான் காரணம். இது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கிறது.
இருந்தாலும், பூண்டில் இரத்த உறைதல் எதிர்ப்பு விளைவுகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் அல்லது NSAID-களை எடுத்தால், பூண்டு சப்ளிமெண்டுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் துர்நாற்றம், வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
3. காம்பினேஷன் சப்ளிமெண்ட்டுகள்
தற்போது கடைகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சப்ளிமெண்டுகள் விற்கப்படுகின்றன. அதோடு இந்த சப்ளிமெண்ட்டுகளுள் சில கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுவதாக கூறியும் விற்கப்படுகின்றன. ஆனால் ஆரோக்கியமான எண்ணெய்கள், நியாசின் மற்றும் மக்னீசியம் நிறைந்த காம்பினேஷன் சப்ளிமெண்டுகளானது ஏற்கனவே ஆரோக்கியமான அளவில் கொலஸ்ட்ராலை கொண்டவர்களுக்கானது. இப்படிப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை ஏற்கனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் உட்கொண்டால், அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.
4. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமான ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கின்றன. ஆனால் அவற்றில் உள்ள DHA கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். எனவே ஏற்கனவே உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இந்த வகை சப்ளிமெண்ட்டுகளை எடுத்தால், அதன் விளைவாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே இந்த சப்ளிமெண்ட்டுகளையும் மருத்துவர் அறிவுரையின்றி எடுக்கக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
