Latest Updates
-
புதாதித்ய ராஜயோகம்: டிசம்பர் மாத தொடக்கமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகமா இருக்கும்! -
டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி 15 நிமிடத்தில் செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்பிளான காலிஃபிளவர் சால்னா ரெசிபி - செஞ்சு பாருங்க - இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க.. -
குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் 5 பழங்கள் - மறக்காம சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் காரணமே இல்லாமல் மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையா? அப்ப முடியை மென்மையாக வைத்திருக்க டாக்டர் கூறும் டிப்ஸ் இதோ! -
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா? -
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?
உங்க விரலில் இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்...
High Cholesterol Symptoms In Tamil: உலகளவில் நிறைய பேரின் உயிரைப் பறிக்க முதன்மையான காரணமாக இருப்பது மாரடைப்பு. ஒவ்வொரு நாளும் மாரடைப்பால் ஏராளமான மக்கள் இறந்து வருகிறார்கள். சமீப காலமாக கூட பிரபலங்கள் பலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
இப்படி மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இருப்பது தான். ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் படிந்து ப்ளேக்குகளை உருவாக்கி, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும்.

கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், அது உடலின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் நம்மில் பலர் அந்த அறிகுறிகளை புறக்கணித்துவிடுகிறோம். அதுவும் கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது நமது விரல்களிலேயே ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும் என்பது தெரியுமா?
ஆம், கீழே கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் இருந்தால் கைகளில் தெரியும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் அனைத்தும் எச்சரிக்கை அறிகுறிகள். உங்களிடம் தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
1. அசாதாரண மஞ்சள் படிவுகள்
உங்கள் விரல் மூட்டுகள் அல்லது விரல் தசைநாண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் வித்தியாசமாக ஏதாவது தெரிகிறதா? இப்படி தெரிந்தால், அதை சாந்தோமாஸ் என்று அழைப்பர். இவை உடலில் அதிக கெட்ட கொழுப்பு இருப்பதைக் குறிக்கிறது. எனவே உங்களின் விரல்களில் இப்படியான அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவரிடம் இதை தெரிவியுங்கள்.
2. விரல்களில் வலி அல்லது அசௌகரியம்
உங்களது கை விரல்களை அழுத்தும் போது வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா?அப்படியானால் உயர் கொலஸ்ட்ரால் காரணமாக இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் தடையை குறைத்து, வலியை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே அவ்வப்போது உங்கள் கை விரல்களை அழுத்திப் பார்த்து சோதனை செய்து பாருங்கள்.
3. சாந்தெலஸ்மா
சாந்தெலஸ்மா என்பது பெரும்பாலும் கண் இமைகளில் காணப்படும் மஞ்சள் நிற புள்ளிகள். ஆனால் இது விரல்களிலும் உருவாகலாம். எனவ உங்கள் விரல்களில் இப்படி மஞ்சள் நிற புள்ளிகளை கண்டால், அது உயர் கொலஸ்ட்ராலின எச்சரிக்கை அறிகுறி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
4. நகங்களில் மாற்றங்கள்
விரல்களை மட்டுமின்றி விரல் நகங்களையும் கவனிக்க வேண்டும். ஒருவரது விரல் நகங்களின் நிறங்களில் மாற்றத்தையோ, நகங்கள் மிகவும் தடிமனாவோ அல்லது வளர்ச்சி குறைவாகவோ கொண்டிருந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறிகள் நீங்கள் கவனித்தால், அதை உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
5. மிகுந்த குளிர்ச்சியான கைகள்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் விளைவாக கைகள் மற்றும் கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். ஏனெனில் அதிகமான கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தில் தடையை உண்டாக்கியிருப்பதால், இப்படியான அறிகுறியை சந்திக்கலாம்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை பொதுவானது. ஆனால் அந்த கொலஸ்ட்ரால் கட்டுப்பாடின்றி அதிகமாக இருந்தால், அதை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், அது நமது விரல்களில் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அப்போது உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதோடு சீரான இடைவெளியில் கொலஸ்ட்ராலை பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
