For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பைத்தியத்தையும் குணப்படுத்தும் இந்த செடி பற்றி உங்களுக்கு தெரியுமா? இப்பவாச்சும் தெரிஞ்சிக்கங்க...

|

இந்த தாவரம் வேட்டை பாக்கு செடி என்று அழைக்கப்படுகிறது. இதை செயின்ட் ஜான்சன் வார்ட் என்றும் அழைக்கின்றனர். இந்த தாவரத்தை தொட்டாலே போதும் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக மனச்சோர்வு, தூக்க பிரச்சனைகள், மனநல பாதிப்பு மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது.

பார்ப்பதற்கு நட்சத்திர வடிவிலான 5 இதழ்களைக் கொண்ட மஞ்சள் பூக்களில் அவ்வளவு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. தாவரத்தின் தாவரவியல் பெயர் ஹைபரிகம் பெர்போரட்டம். ஜூன் 24 அன்று வரும் புனித ஜான் தினத்தை ஒட்டி பூ பூத்து உதிர்வதால் இது செயின்ட் ஜான்ஸ் வோர்ட் என்று அழைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூக்கள்

பூக்கள்

இதன் பூக்கள் பல நூற்றாண்டுகளாக மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேநீர், திரவ சாறு மற்றும் மாத்திரைகள் தயாரிக்க பயன்படுகிறது. இதனைக் கொண்டு நடத்திய பல ஆராய்ச்சிகள் இந்த பூ மனச்சோர்வுக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளது. ஏனெனில் இதில் ஆன்டிடிப்ரஸசன் என்ற பொருட்கள் உள்ளன. மேலும் காயங்கள், வலி, மாதவிடாய் அறிகுறிகள் மற்றும் புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. அதே நேரத்தில் இது மற்ற மருந்துகளுடன் சேர்ந்து வினைபுரிவதால் சில நாடுகளில் இதை தடையும் செய்துள்ளனர்.

MOST READ: பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் - யாரை பாதிக்கும் பரிகாரம் என்ன?

உடல் நல நன்மைகள்

உடல் நல நன்மைகள்

மனச்சோர்வு

இந்த பூவில் ஹைபரிசின் என்ற பொருள் உள்ளது. இந்த ரசாயானம் நம்மளுக்கு ஏற்படும் மனச்சோர்வை போக்க உதவுகிறது. இதை நீங்கள் சாப்பிட்டு வந்தால் பதட்டம், பயம், சோர்வு, அனிஸிட்டி போன்ற தொல்லை கள் இருக்காது.

மாதவிடாய் அறிகுறிகள்

மாதவிடாய் அறிகுறிகள்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மனநிலை மாற்றம், வெள்ளைப்படுதல், பசி, இன்ஸோமினியா, தலைவலி, குழப்பம் மற்றும் பிற அறிகுறிகளைப் போக்க பெண்களுக்கு உதவுகிறது.

காயங்களை குணப்படுத்துதல்

காயங்களை குணப்படுத்துதல்

இந்த பூ விலிருந்து தயாரிக்கப்படும் களிம்பு மற்றும் எண்ணெய் காயங்கள் மற்றும் தழும்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்க பயன்படுகிறது. கீழ்க்கண்ட பிரச்சனைகளை சரி செய்கிறது என்கிறார்கள் மக்கள். ஆனால் இதற்கு அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை.

MOST READ: மேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கும் கம்பெனியில் ஒருநாளைக்கு ரூ.33 தான் சம்பளமாம்...

இதர நன்மைகள்

இதர நன்மைகள்

கீழ்க்கண்ட பிரச்சனைகளையும் சரி செய்கிறது

கவனக் பற்றாக்குறை

மூளை கட்டிகள்

ஒற்றைத் தலைவலி

ஹெர்பஸ்

சரும எரிச்சல்

இரத்த குழாய்களில் அடைப்பு

பல் வலி

காயங்கள்

தசை வலி

வயிற்று வலி

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

இதை எடுத்துக் கொள்ளும் போது வேறு மருந்துகளுடன் தொடர்பு கொண்டால் தலைச்சுற்றல், தலைவலி மற்றும் தோல் எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். எனவே எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகிக் கொள்ளுங்கள்.

இதை சாப்பிட்ட பிறகு சூரிய ஒளியில் செல்வதை தவிருங்கள். இல்லையென்றால் தீவிர தோல் எரிச்சல் ஏற்படலாம்.

கருவுற்ற பெண்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம். இல்லையென்றால் குழந்தைக்கு பிறப்புக் குறைபாடு பிரச்சனை ஏற்படலாம்.

இது மற்ற மருந்துகளுடன் வினைபுரிவதால் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நீங்கள் இதய அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் 5 நாட்களுக்கு முன்னரே இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

கருவுற நினைக்கும் பெண்கள் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பிள்ளைப்பேறு தாமதமாகலாம்.

வினைபுரியும் மருந்துகள்

வினைபுரியும் மருந்துகள்

அமினோலெவலினிக் அமிலம் (சருமத்திற்கு)

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்

டிகோக்சின் (இதயத்திற்கு)

இரினோடோகன் (புற்றுநோய்க்கு)

செர்ட்ராலைன், ஃப்ளூக்ஸெடின், மற்றும் இமிபிரமைன் போன்ற மனச்சோர்வுக்கான மருந்துகள்

டெலவர்டைன் மற்றும் நெவிராபின் போன்ற எச்.ஐ.வி மருந்துகள்

மார்பின் மற்றும் வலிக்கு மருந்துகள்

MOST READ: காலேஜ் பாத்ரூமில் சுயஇன்பம் கூடாது... பல்கலைக்கழகம் அதிரடி சுற்றறிக்கை....

வேட்டை பாக்கு பூ தேநீர்

வேட்டை பாக்கு பூ தேநீர்

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த செயின்ட் ஜான்ஸ் வார்ட் இலை மற்றும் பூக்கள்

தேன் அல்லது சர்க்கரை

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் மூலிகைகளை போட்டு சேர்த்து கொள்ளுங்கள்

5-10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்

இப்பொழுது அதை ஒரு கப்பில் வடிகட்டி கொள்ளுங்கள்

சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகுங்கள். சுவையான ஆரோக்கியமான மூலிகை தேநீர் ரெடி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

St John's Wort: Benefits, Side Effects And Drug Interactions

St John's wort, also known as Johnswort, goat weed, touch-and-heal, is a yellow star-shaped five petals flower mainly used for curing depression, sleep disorders and healing wounds.