For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இட்லிப்பூவுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா?... இவ்ளோ நாள் இது தெரியலயே!

By Mahibala
|

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஹைட்ராஞ்ஜியா ஸே என்ற புதிர் குடும்பத்தை சார்ந்தது.இதன் உயரம் 5-6 அடி வரை இருக்கும். இதன் தண்டுப் பகுதி இதய வடிவ லேசான இலைகளுடன் அல்லது நீள் வட்ட வடிவில் காணப்படும்.

இலைகளில் 6 அங்குல அளவிற்கு முட்கள் காணப்படும். இந்த தாவரத்தில் பூக்கள் கோடைகால ஆரம்பத்திலும் இடைக்காலத்திலும் பூக்க ஆரம்பிக்கும். மலர்கள் பார்ப்பதற்கு பால் போன்ற வெண்மை நிறத்திலும் சிவப்பு, ஊதா, பிங்க் என பல நிறங்களில் கொத்தாக காணப்படும். பெரும்பாலான வீடுகளில் இந்த மலர் அழகுக்காக வைக்கப்பட்டிருக்கிறதே தவிர இதனுடைய மகத்துவம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாறு

வரலாறு

கிளைகளுடன் தடித்த வேர்களை கொண்டு காணப்படும். பாறைகள், நீரோடைகள், நிழல்கள், குறைந்த பாறைகள், பாறை இடுக்குகள் போன்ற வாழ்விடங்களில் வளரக் கூடியது. இதன் தாயகமாக தெற்கு நியூயார்க், இந்தியா, ஓஹியோ, மிசூரி, இல்லினாய்ஸ், ஓக்லஹோமா, புளோரிடா மற்றும் லூசியானா ஆகியவற்றிற்கு நாடுகளில் தான் உற்பத்தி ஆகிறது. மாசசூசெட்ஸ், நோவா ஸ்கொச்சி, நியூ பிரன்ஸ்விக் மற்றும் ஒன்டாரியோ ஆகிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MOST READ: கோடீஸ்வர யோகம் தரும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சனி - யாருக்கு யோகம் வரும்

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

இந்த தாவரத்தில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, சல்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன். இது போக இந்த தாவரத்தின் வேர்ப் பகுதியில் ஃப்ளாவனாய்டுகள், க்வெர்கெடின், காம்பெர்ல், வேலைட் எண்ணெய் மற்றும் செபோனின் போன்றவையும் காணப்படுகிறது. இவை செல் பாதிப்பை தடுக்கிறது. புராஸ்டேட், சிறுநீரக பாதை பாதிப்பு, சீரணமின்மை, சளி, ஆட்டோ இம்பினியூ சிகிச்சை போன்றவற்றிற்கு உதவுகிறது.

தன்மை

தன்மை

இது ஒரு புதிர் செடி என்பதால் 3-8 அடி வரை நன்கு நிமிர்ந்த கிளைகளற்ற தன்மையுடன் வளரக் கூடியது. இதன் நடுப்பகுதி பருத்து இளம் பச்சை நிறத்தில் காணப்படும். இதன் பட்டை ப்ரவுன் நிறத்திலும் அதை உரிக்கும் போது பலவண்ண நிறங்களுடன் காட்சியளிக்கும்.

இதன் இலைகள் 3-5 அங்குல அகலத்திலும், 4-6 அங்குல நீளத்திலும் காணப்படும். 1/8 அங்குல நீளத்தில் 5 இளம் பச்சை மற்றும் வெண்மை நிறம் கலந்த மலர்களை பூக்கக் கூடியது. பார்ப்பதற்கு பிஸ்டல் மற்றும் ஜோடி ஜோடியாக 8-10 தண்டுகளை கொண்டு இருக்கும். அதே மாதிரி இந்த பூக்களில் 1/8 அங்குல நீளத்தில் முட்கள் காணப்படும்.

MOST READ: மரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...

இலைகள்

இலைகள்

இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் 3-5 அங்குல அகலத்திலும், 4-6 அங்குல நீளத்திலும் காணப்படும். இலையின் அடிப்பகுதி வெளிர் பச்சை நிறத்திலும் மேற்பரப்பில் முடியற்றும் நடுப்பகுதி அடர்ந்த பச்சை நிறத்துடனும் காணப்படும். இதன் மெல்லிய இலைக்காம்பு 2-6 அங்குல நீளமுடையது.

மலர்கள் சின்னதாக இளம் பச்சை நிறத்தில் காணப்படும். இதழ்களின் உட்புறத்தில் சூலகம், மகரந்தம் காணப்படும். இதன் அடிப்பகுதியில் இணை மாத்திரை வடிவில் 1/8 அங்குல நீளத்தில் முட்கள் காணப்படும். இந்த விதை காப்ஸ்யூல் காற்றினால் வீசப்பட்டு நீரோட்டமான இடங்களில் விதைக்கப்படுகின்றன.

பயன்கள்

பயன்கள்

இது சிறுநீரக பாதிப்பு, நீர்கட்டிகள், புராஸ்டேட் பாதிப்பு, யூரினரி கால்குலி, புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக கல், சிறுநீர்ப் பையில் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

இதயம் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இதன் பட்டைகளை சாப்பிட்டாலே போதும்.

காய்ச்சலுக்கு...

காய்ச்சலுக்கு...

நேபாள் போன்ற நாடுகளில் இதன் இலைகள் சளி, இருமல் மற்றும் சுவாச பாதை தொற்றிற்கும், இதன் வேர்கள் சீரணமின்மைக்கும், காய்ச்சலுக்கும் பயன்படுகிறது.

இதன் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து காய்ச்சலுக்கு பயன்படுகிறது.

அதே மாதிரி வாந்திக்கும் இது சிறந்தது.

சுவாச பாதையில் ஏற்படும் எரிச்சல், முதுகு வலி போன்றவற்றை சரி செய்கிறது.

முதுகுவலி, வாத நோய், ஸ்கர்வி, பக்கவாதம், தூக்கம் போன்றவற்றிற்கு மருந்தாகும்.

தீப்பட்ட புண், காயங்கள், சுளுக்குகள், தசைகளில் ஏற்படும் புண்கள் மற்றும் கட்டிகள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

சிறுநீர்ப் பையில் ஏற்படும் அழற்சி, சிறுநீரக கற்கள், புராஸ்டேட் வீக்கம், சிறுநீரக பாதை பாதிப்பு போன்றவற்றிற்கு மேற்கத்திய நாடுகளும் இதை மருந்தாக பயன்படுத்துகின்றனர். இது கழிவுகளை நீக்குவதோடு ஹார்மோன் சுரப்பையும் தூண்டுகிறது.

MOST READ: செல்வந்தர்களாக்கும் சோடசக்கலை நேரம்: நினைத்தது நிறைவேறும்

யார் பயன்படுத்தக்கூடாது...

யார் பயன்படுத்தக்கூடாது...

கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் இந்த மூலிகையை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு சில பேருக்கு இது தோல் அழற்சி, குடல் அழற்சி ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது மார்பகத்தில் இறுக்கம், தலைசுற்றல், மயக்க உணர்வை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Vetchi Flower

The roots of this medicinal plant is ground well with peper seeds and then given along with butter milk or water twice a day in the dose 60 ml to 100 ml for 3 – 4 days in the conditions like diarrhoea, dysentry etc.
Story first published: Saturday, September 14, 2019, 14:00 [IST]