இதுக்கு பேருதான் குதிரைமசால்... இத தினம் கொஞ்சம் சாப்பிட்டா என்னலாம் நடக்கும் தெரியுமா?

குதிரை மசால் முளைக்கட்டிய பயிறு குறைந்த கலோரி, ஊட்டச்சத்துகளை கொண்டு உடல் நலத்திற்கு சிறந்து விளங்குகிறது. எடை இழப்பு, சீரண பிரச்சனை, பெண்களுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் சுரப்பை ஏற்படுத்தி மாதவிடாய் பிரச்ச

இந்த குதிரை மசால் நமது உடல் நலத்திற்கு பல வகைகளில் உதவுகிறது. இதன் அறிவியல் பெயர் மெடிகோகா சாடிவா ஆகும். இது மூலிகைகளின் ராணி என்றே கூறலாம். அநத அளவுக்கு இதன் நன்மைகள் எண்ணிலடங்காதவை.

Alfalfa

இதில் தாதுக்கள், விட்டமின்கள், புரோட்டீன் போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. இதை முளைக்கட்டிய தானியமாகவோ, மூலிகையாகவோ நாம் சாப்பிட்டு வரலாம். இது பயிறு வகையைச் சேர்ந்த தாவரமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குதிரை மசால் மூலிகை

குதிரை மசால் மூலிகை

இந்த மூலிகைகளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த மூலிகை யை பராம்பரிய பராம்பரியமாக சீனா மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடைய விதைகள் மற்றும் காய்ந்த மூலிகை மாத்திரையாகக் கூட பயன்படுகிறது. இதன் உலர்ந்த இலைகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க, மெட்டா பாலிக் ஆரோக்கியத்தை அதிகரிக்க, மெனோபாஸ் அறிகுறிகளை சரி செய்ய உதவுகிறது.

இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை அழற்சியை எதிர்த்து போரிடுகிறது. இதன் முளைக்கட்டிய பயிறு குறைந்த கலோரி, ஊட்டச்சத்துகளை கொண்டு உடல் நலத்திற்கு சிறந்து விளங்குகிறது. எடை இழப்பு, சீரண பிரச்சனை, பெண்களுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் சுரப்பை ஏற்படுத்தி மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்கிறது. இப்படிப்பட்ட மூலிகையின் ஒட்டுமொத்த பலன்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

குதிரை மசால் ஊட்டச்சத்து அளவுகள்

குதிரை மசால் ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் குதிரை மசாலில்

23 கலோரிகள் ஆற்றல்

0.7 கிராம் கொழுப்பு

0.076 மில்லி கிராம் தயமின்

0.126 மில்லி கிராம் ரிபோப்ளவின்

0.481 மில்லி கிராம் நியசின்

0.563 மில்லி கிராம் பேன்டோதெனிக் அமிலம்

0.034 மில்லி கிராம் விட்டமின் பி6

0.96 மில்லிகிராம் இரும்புச் சத்து

0.188 மில்லி கிராம் மாங்கனீஸ்

0.92 மில்லி கிராம் ஜிங்க்

இதர ஊட்டச்சத்துக்கள்

2.1 கிராம் கார்போஹைட்ரேட்

1.9 கிராம் நார்ச்சத்து

4 கிராம் புரோட்டீன்

36 மைக்ரோ கிராம் போலேட்

8.2 மில்லி கிராம் விட்டமின் சி

3 0.5 மைக்ரோ கிராம் விட்டமின் கே

32 மில்லிகிராம் கால்சியம்

27 மில்லி கிராம் மக்னீசியம்

70 மில்லி கிராம் பாஸ்பரஸ்

79 மில்லி கிராம் பொட்டாசியம்

6 மில்லிகிராம் சோடியம்

குதிரை மசால் பயிறு சிறுநீரக பிரச்சினை, வயிறு பிரச்சினை போன்றவற்றிற்கு சிறந்தது. அதன் பயன்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு காணலாம்.

புற்றுநோயை தடுத்தல்

புற்றுநோயை தடுத்தல்

குதிரை மசாலை தினமும் உணவுகளில் சேர்த்து வந்தால் நிறைய நன்மைகளை பெற முடியும். இது புற்றுநோயை தடுக்க உதவுகிறது. இதிலுள்ள அமினோ அமிலங்கள் மற்றும் கேனாவனைன் புற்று நோய் செல்களை பரவ விடாமல் தடுக்கிறது. இது தான் குடலில் கார்ஜினோஜென் பிணைப்பிற்கு உதவுகிறது. இந்த முளைக்கட்டிய பயிற்றில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பது புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துகிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

இந்த பயிரில் நிறைய நார்ச்சத்துகள் இருப்பது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. எனவே இதை ஸ்நாக்ஸ் மாதிரி எடுத்து வந்தாலே போதும் உங்கள் உடல் எடை குறைந்து விடும். இதிலுள்ள விட்டமின்கள் மெட்டா பாலிசத்தை தூண்டி கொழுப்புகளை எரிக்கிறது.

சிறுநீரக தொற்று

சிறுநீரக தொற்று

இந்த பயிறின் டையூரிக் தன்மை சிறுநீரக பாதை தொற்றை சரி செய்கிறது. சிறுநீர் பாதையில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது. இதன் நீர்ச்சத்து தன்மை சிறுநீர் போக்கை அதிகரித்து பாக்டீரியாக்களை அலசி வெளியேற்றுகிறது.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

இந்த பயிரில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஒழுங்கற்ற மாதவிடாய் க்கு காரணமான ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்கிறது. மூன்று வகையான பைட்டோ ஈஸ்ட்ரோஜன் காணப்படுகின்றன. கம்மஸ்டிரால், ஜெனஸ்டிடின் மற்றும் பயோக்கனைன் ஆகியவை ஆகும். யோனி பகுதியில் ஏற்படும் வறட்சி, வெள்ளை படுதல், ஈஸ்ட்ரோஜன் குறைவு, இரவில் வியர்த்தல், ஒழுங்கற்ற மாதவிடாய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரி செய்கிறது.

டயாபெட்டீஸ் நோயை தடுத்தல்

டயாபெட்டீஸ் நோயை தடுத்தல்

டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க நார்ச்சத்து மிகவும் இன்றியமையாதது. இந்த குதிரை மசால் பயிரில் உள்ள நார்ச்சத்துகள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. எனவே இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதில் பைட்டோ நியூட்ரியன்ட், எல்-கேனாவனைன், குளோரோபைல் போன்றவை நோய்களை எதிர்த்து போரிடுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விட்டமின் சி நமது உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அழற்சி மற்றும் தொற்றை போக்குகிறது.

சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

இதன் நார்ச்சத்துகள் சீரண உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. வயிற்று போக்கு, மலச்சிக்கல், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றை போக்குகிறது. குடல் புற்று நோய் வராமல் காக்கிறது.

இரத்தக் கசிவு

இரத்தக் கசிவு

இதிலுள்ள விட்டமின் கே இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது. மாத விடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்த போக்கு, மூக்கில் இரத்தக் கசிவு போன்றவற்றை சரி செய்கிறது. இந்த இலைகளைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால் இரத்தக் கசிவு சரியாகி விடும்.

ரூமேட்டிஷம்

ரூமேட்டிஷம்

இந்த பயிறு வகைகளில் ஆன்டி ரூமேட்டிக் தன்மை உள்ளது. மூட்டுகளில் ஏற்படும் வலி, தசை நார்கள், எலும்புகள் போன்றவற்றில் ஏற்படும் அழற்சியை இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை போக்குகிறது..

நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்களித்தல்

நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்களித்தல்

இது ஒரு அல்கலைன் உணவு. எனவே இது நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளை களைகிறது. வயிற்றின் அமில கார நிலையை சமநிலையில் வைக்கிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இந்த முளைக்கட்டிய பயிரை தொடர்ந்து சாப்பிட்டு வருவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆர்டியோகுலோரோசிஸ் போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இது இயற்கையாகவே இரத்த அடர்த்தியை குறைக்கக் கூடியது. இதய வலிமைக்கு சிறந்தது.

கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல்

கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல்

இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. எல்டிஎல் கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த குழாய்களில் படிந்து உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. ஹார்ட் அட்டாக், பக்க வாதம், ஆநுத்ரோஸ்கேலரிஸ் போன்றவற்றை தடுக்கிறது.

மெட்டா பாலிசம் அதிகரித்தல்

மெட்டா பாலிசம் அதிகரித்தல்

இதிலுள்ள விட்டமின் பி மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. ஹார்மோன் உற்பத்தி, எனர்ஜி மெட்டா பாலிசம் போன்றவற்றை சரி செய்கிறது.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

இந்த பயிறு வகைகளை சாப்பிட்டு வந்தால் சருமம் தூய்மையாக இருக்கும். இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதிலுள்ள குளோரோபைல் சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. சருமத்திற்கு புத்துயிர் அளிக்கிறது. விட்டமின் ஏ சருமத்தினுள் இருக்கும் லேயர்களை சரி செய்கிறது.

கூந்தல் ஆரோக்கியம்

கூந்தல் ஆரோக்கியம்

இந்த பயிறு வகைகளில் புரோட்டீன், தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் போன்றவை கூந்தலுக்கு பயன்படுகிறது. கூந்தல் உதிர்வு போன்றவற்றை குறைக்கிறது. மயிர்க்கால்களை வலிமையாக்கி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

திணை சாலட், தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் குதிரை மசால்

திணை சாலட், தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் குதிரை மசால்

தேவையான பொருட்கள்

11/2 கப் திணை, அலசி வடிகட்டி கொள்ளவும்

3 பூண்டு பற்கள், நறுக்கியது

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

21/2 கப் வெஜிடபிள் குழம்பு

1 தக்காளி, நறுக்கியது

1 வெள்ளரிக்காய், நறுக்கியது

2 அவுன்ஸ் முளைக்கட்டிய குதிரை மசால்

5 வெங்காய தாள்

1/2 லெமன் ஜூஸ்

1 டீ ஸ்பூன் ரெட் வொயின் வினிகர்

பயன்படுத்தும் முறை

அடுப்பில் கடாயை வைத்து ஆலிவ் ஆயில் சேர்த்து சூடுபடுத்தவும்

அதில் பூண்டு, திணை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்

லேசாக பொன்னிறமாக வறுக்கவும்

அதில் வெஜிடபிள் குழம்பை சேருங்கள்

மூடியை கொண்டு மூடி 15-20 நிமிடங்கள் சமைக்கவும்

அதில் தக்காளி, வெள்ளரிக்காய், குதிரை மசால், குதிரை மசால், திணை சேர்த்து வதக்கவும்

அதனுடன் லெமன் ஜூஸ் மற்றும் ரெட் வொயின் வினிகர் சேர்த்து கலக்கவும்

நன்றாக கலந்து பரிமாறவும்

முட்டை, அவகேடா மற்றும் முளைக்கட்டிய குதிரை மசால்

முட்டை, அவகேடா மற்றும் முளைக்கட்டிய குதிரை மசால்

தேவையான பொருட்கள்

4 முட்டைகள்

1/2 டீ ஸ்பூன் நெய்

1 அவகேடா நறுக்கியது

1 கப் முளைக்கட்டிய குதிரை மசால்

பயன்படுத்தும் முறை

அடுப்பில் மிதமான சூட்டில் கடாயை வைத்து நெய் ஊற்றி கொள்ளுங்கள்

முட்டையை நன்றாக கலந்து கடாயில் ஊற்றவும், அதை நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள்.

முளைக்கட்டிய பயிறு வகைகள், அவகேடா, முட்டை எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்து ருசியாக சாப்பிடுங்கள்.

இது ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

கருவுற்ற பெண்கள் குதிரை மசாலை எடுக்க வேண்டாம், இது கருப்பை சுருங்கி விரிதலை சீக்கிரமாகவே ஏற்படுத்தி விடும்.

ஏற்கனவே இரத்த அடர்த்தி குறைவிற்கு மாத்திரை எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம். ஏனெனில் இதில் விட்டமின் கே இருக்கிறது. பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

ஆட்டோ இம்பினியூ நோயாளிகள் இதை எடுத்துக் கொண்டால் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்.

பாக்டீரியா தொந்தரவு இருப்பவர்கள் இதை எடுத்துக் கொண்டால் அதிகமாக வாய்ப்புள்ளது

மார்பக புற்று நோய் உள்ள பெண்கள் இதை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். காரணம் இதிலுள்ள ஈஸ்ட்ரோஜன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இரத்த சர்க்கரை அளவு குறைந்தவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது தலைவலி, மயக்கம் மற்றும் குழப்பத்திற்கு ஆளாவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, February 26, 2019, 12:00 [IST]
Desktop Bottom Promotion