For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பூ தெரியுமா? இத டீயில போட்டு குடிச்சா ஆஸ்துமா ஒரே வாரத்துல சரியாயிடும்...

முல்லீன் என்னும் மூலிகை மலரைப் பற்றியும் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

முல்லீன் என்ற இந்த தாவரம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அறிவியல் ரீதியாக இது வெர்பாஸ்கம் டாப்ஸஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் தான் முல்லீன். இது பூச்செடிகளில் பெரிய இனமாகும். இதன் இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் அனைத்துமே ஆதி காலத்தில் இருந்து மருத்துவ துறையில் பயன்பட்டு வருகிறது.

Mullein

அதிலும் குறிப்பாக சுவாச பாதையில் ஏற்படும் பிரச்சினைகளை இது தீர்க்க வல்லது. மேலும் ஆல்கஹாலுக்கு சுவையூட்டியாகவும் இந்த தாவரம் பயன்படுகிறது. முல்லீன் இலைகளில் எக்ஸ்பெக்டோரண்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பொருட்கள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ பொருட்கள்

மருத்துவ பொருட்கள்

முல்லீனில் வெர்பாஸ்கோஸ் மற்றும் வெர்பாஸ்டெரால், கூமரின், அஸ்கார்பிக் அமிலம், சபோனின்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் உள்ளன. இந்த தாவரத்தின் இலைகளை மேற்பூச்சாகவோ, மருந்தாகவோ பயன்படுத்தி கொள்ளலாம். சுவாசப் பிரச்சினையை போக்க இந்த இலைகளைக் கொண்டு புகைபிடிக்கப்படுகிறது.

MOST READ: உங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா? இத படிங்க தெரியும்...

முல்லீனின் ஆரோக்கிய நன்மைகள் சுவாச பாதை ஆரோக்கியம்

முல்லீனின் ஆரோக்கிய நன்மைகள் சுவாச பாதை ஆரோக்கியம்

இந்த முல்லீன் தாவரம் சுவாச பாதையில் நிறைய நன்மைகளைத் தருகிறது. ஆஸ்துமா, தொண்டை புண் மற்றும் வறட்டு இருமல் போன்றவற்றை போக்குகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் குணப்படுத்தும் தன்மை சுவாச பாதையில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் நீருபித்து உள்ளது.

காதில் தொற்றுகள்

காதில் தொற்றுகள்

காதில் ஏற்படும் தொற்றுகளை முல்லீன் குணப்படுத்துகிறது. 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி படி இந்த இலையின் சாறு அல்லது களிம்பு போன்றவை காதில் ஏற்படும் தொற்றுக்களை போக்குகிறது.

நச்சுக்களை வெளியேற்றுதல்

நச்சுக்களை வெளியேற்றுதல்

நமது உடலில் தேங்கியுள்ள கெமிக்கல் நச்சுக்கள் மற்றும் நச்சுக்களை அலசி வெளியேற்றுகிறது. இதற்கு இந்த இலையில் நீங்கள் டீ போட்டு குடித்து வரலாம். டிஞ்சர் போன்றவையாகக் கூட நீங்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

நெஞ்சில் ஏற்படும் அழற்சி

நெஞ்சில் ஏற்படும் அழற்சி

சுவாச பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. நெஞ்சில் ஏற்படும் சளி போன்றவற்றிற்கு இதை பயன்படுத்தி வந்தால் சீக்கிரம் இதை சரி செய்து விடலாம்.

அழற்சியை போக்குதல்

அழற்சியை போக்குதல்

இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை தலைவலி மற்றும் கெளட் அழற்சியை போக்குகிறது.

MOST READ: உங்க மூக்கு இப்படிதான் இருக்கா? உங்களுக்கு என்னமாதிரி பிரச்சினை வரும் தெரியுமா?

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு உள்ளது. அதன் படி பார்த்தால் முல்லீன் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இரத்த குழாய்களில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது.

வயிற்று பிரச்சனை

வயிற்று பிரச்சனை

இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை வயிற்று பிரச்சினைகளை சரி செய்கிறது. வயிறு மந்தம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றை போக்குகிறது.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு

காயங்களை ஆற்ற (இதன் ஆன்டி செப்டிக், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை உதவுகிறது)

மூலநோய்

சளி

ப்ளூ

ஒற்றைத் தலைவலி

காசநோய்

நிமோனியா

க்ரப்

தொண்டை புண்

இருமல்

போன்றவற்றிற்கு உதவுகிறது.

பயன்கள்

பயன்கள்

இதன் இலைகள், விதைகள் மற்றும் பூக்கள் எல்லாம் பயன்படுகிறது.

உலர்ந்த இலைகள் டீ தயாரிக்க பயன்படுகிறது

இலைகள் எஸென்ஷியல் எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

உலர்ந்த மற்றும் நசுக்கிய இலைகள் புகை உண்டாக்குதலுக்கு பயன்படுகிறது. இது மருந்துப் புகையாக பயன்படுகிறது.

இலைகள் மற்றும் பூக்கள் டிஞ்சர் தயாரிக்க பயன்படுகிறது.

விதைகளை தண்ணீருடன் கலந்து பேஸ்டாக்கி அழற்சி எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தலாம்.

MOST READ: காமாலைக்கு பயப்படறீங்களா? கரும்பு ஜூஸை இப்படி குடிங்க... காமாலை ஓடியே போயிடும்...

முல்லீன் டீ தயாரிக்கும் முறை

முல்லீன் டீ தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

1-2 டீ ஸ்பூன் உலர்ந்த முல்லீன் பூக்கள் மற்றும் இலைகள்

1 கப் கொதித்த நீர்

சுவைக்கேற்ப தேன்

பயன்படுத்தும் முறை

1 கப் தண்ணீரில் உலர்ந்த முல்லீன் இலைகள் மற்றும் பூக்களை சேருங்கள்

10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்

பிறகு வடிகட்டி யை கொண்டு வடிகட்டி நீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு தேன் சேர்த்து பருகுங்கள்.

ஆரோக்கியமான முல்லீன் டீ ரெடி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did You Know These Health Benefits Of Mullein?

Scientifically termed as Verbascum thapsus, mullein is generally known as Verbascum. Mullein is, in fact, the general name used to describe the large genus of flowering plants. The flowers, leaves and fruit of the plant are widely used in folk and ancient medicine.
Desktop Bottom Promotion