For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குன்றிமணி எண்ணெயை சாதாரணமா நினைக்காதீங்க... இத்தன விஷயத்துக்கு பயன்படும்...

குன்றிமணி விதை எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் அது எப்படி பூஞ்சைத்தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது என்பது பற்றியும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

|

குன்றிமணி விதையிலிருந்து எண்ணையானது பாரம்பரிய மருத்துவர்களால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அதன் பயன்களுக்காக பரிந்துரைக்கப்பட்டு வரும் ஒன்று. குன்றிமணி விதையிலிருந்து பிரித்தெடுக்கிற பிசின் (கோபைபா எண்ணையின் மூலப்பொருள்), மருத்துவர்களால் கிட்டத்தட்ட 1625 ஆண்டு முதல் இயற்கை முறை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Copaiba Oil

முக்கியமாக மூச்சுக்குழல் வீக்கம், நாள்பட்ட சிறுநீரகத் தொற்று, நாள்பட்ட வயிற்றுப் போக்கு மற்றும் மூல நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக பல காலமாக இயற்கை முறை மருத்துவர்களால் இந்த எண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பிடம்

பிறப்பிடம்

பிரேசில் நாட்டை சேர்ந்த மூலிகை மருத்தவ அமைப்பானது குன்றிமணி பிசினை ஒரு சக்திமிக்க கிருமிநாசியாகவும், சுவாச குழாயில் ஏற்பட்டும் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும், சிறுநீரக தொற்று போன்ற உள் அழற்சி நோய்களுக்கும் மற்றும் அணைத்து வகையான சரும தொற்று நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பரிந்துரைத்து வருகிறது.

சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவுகளில், குன்றிமணி எண்ணெயானது பல ஆச்சரியமூட்டும் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் குணநலன்களை கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குன்றிமணி எண்ணையை நம் அத்தியாவசிய எண்ணெய் தேவையில் ஒன்றாக சேர்த்து கொள்வது நமக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

MOST READ: நெஞ்சில் தேங்கியிருக்கிற நாள்பட்ட சளியை உடனடியாக வெளியேற்ற பாட்டி வைத்தியங்கள் இதோ...

குன்றிமணி எண்ணெய் என்றால் என்ன?

குன்றிமணி எண்ணெய் என்றால் என்ன?

அத்தியாவசிய குன்றிமணி எண்ணெய் அல்லது அத்தியாவசிய குன்றிமணி பிசின் எண்ணெய் என்பது தென் அமெரிக்கா நாட்டில் வளரும் கோபீஃபெரா தாவர குடும்பத்தை சேர்ந்த ஒரு மரத்திலிருந்து வடியும் வழவழப்பான பசை போன்ற பிசினில் இருந்து தயாரிக்கப்படுவது. கோபீஃபெரா அஃபிஸினாலிஸ், கோபீஃபெரா லாங்க்ஸ்டார்ஃபி மற்றும் கோபீஃபெரா ரிட்டிகுலாட்டா போன்றவை கோபீஃபெரா தாவர குடும்பத்தை சேர்ந்த சில மரங்களாகும்.

இப்பொது உங்களுக்கு குன்றிமணி பிசினும் குன்றிமணியும் ஒன்றா என தோன்றலாம். கோபைபா பிசின் என்பது கோபீஃபெரா மரங்களில் இருந்து பெறப்படும் ஒரு வழவழப்பான பசை போன்ற ஒரு பொருள்.

மணம்

மணம்

குன்றிமணி எண்ணையின் மனமானது மிகவும் இனிமையாகவும் உற்சாகமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. குன்றிமணி எண்ணெய் மற்றும் பிசினானது இன்று பல சோப்புகள், வாசனை திரவியங்கள் மற்றும் பல தரப்பட்ட அழகுசாதன பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும்மில்லாமல் நீரிழிவு நோய் மற்றும் இருமலை குணப்படுத்த உதவும் இயற்கை மருந்துகளிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குன்றிமணி ஒரு சிறந்த கிருமிநாசினியாகவும், அழற்சி எதிர்ப்பானாகவும் சிறப்பாக செயல்படுகிறது என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பம்சங்களுக்காவே இது பல நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இப்பொது நாம் குன்றிமணி எண்ணையின் எண்ணற்ற பயன்களைகளை பற்றி காணலாம்.

இயற்கை அழற்சி எதிர்ப்பான்

இயற்கை அழற்சி எதிர்ப்பான்

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் அழற்சி அல்லது வீக்கம் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு வழி வகுக்கிறது.

மூன்று முக்கிய குன்றிமணி எண்ணெய்கள் முறையே - கோபீஃபெரா சீரென்ஸிஸ், கோபீஃபெரா ரிட்டிகுலாட்டா மற்றும் கோபீஃபெரா பிலுஜுகா போன்றவை சிறந்த அழற்சி எதிர்ப்பான்களாக திறம்பட செயலாற்றுகிறது என பல ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. எனவே குன்றிமணி எண்ணெயானது பல நோய்களுக்கு இன்றும் மருந்தாக இயற்கை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

நரம்புகளை பாதுகாக்கும்

நரம்புகளை பாதுகாக்கும்

பக்கவாதம், மூளை/முதுகெலும்பில் ஏற்படும் அதிர்ச்சியினால் ஏற்படும் அழற்சிக்கு கோபைபா எண்ணெய் பிசின் (COR) எவ்வாறு உதவுகிறது என்று 2012 ஆம் ஆண்டு, ஒரு சான்றுகள் அடிப்படையிலான மாற்று மருந்து ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் கோபைபா எண்ணெய் சிறந்த அதிசயிக்கத்தக்க முடிவுகளை ஆராய்ச்சியாளர்களுக்கு தந்தது.

ஆய்வாளர்களால் குன்றிமணி எண்ணெய் பிசினனது குணப்படுத்த முடியாத மோட்டார் கார்டெஸ் சிதைவு கொண்ட விலங்குகளின் மீது பயன்படுத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு ஆய்வாளர்களை பிரம்மிக்க வைத்தது. ஏனென்றால் குன்றிமணி எண்ணெய் பிசின் அல்லது COR ஆனது கடுமையான மத்திய நரம்பு மண்டல சேதத்தைத் தொடந்து ஏற்படும் அழற்சியை பண்படுத்தி நரம்புபாதுகாப்பை அதிகப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், தினமும் 400 மிகி / கிகி என்ற வீதத்தில் குன்றிமணி எண்ணெய் பிசின் அல்லது COR (கோபீஃபெரா ரிட்டிகுலாட்டா மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டது) எடுக்கும் பொது, அது மோட்டார் கார்டெஸ் சிதைவை 39 சதவீதமாக குறைக்கும் என நிரூபணம் செய்யப்பட்டது.

MOST READ: மேக்கப் இல்லாம முகத்தை பளபளனு வெச்சிக்கறது எப்படி? இத மட்டும் செய்ங்க போதும்...

கல்லீரல் பாதிப்பு

கல்லீரல் பாதிப்பு

2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஆய்வின் முடிவு, குன்றிமணி எண்ணெயானது அசெட்டமினோஃபென் போன்ற வலி நிவாரணிகளால் கல்லீரலில் ஏற்படும் சேதத்தை எவ்வாறு குறைக்கிறது என்பதை விவரிக்கிறது. இந்த ஆய்வில் விலங்குகளுக்கு 7 நாட்களுக்கு தொடர்ந்து அசெட்டமினோஃபென் வலி நிவாரணியுடன் குன்றிமணி எண்ணையும் கொடுக்கப்பட்டு வந்தது. சில விலங்குகளுக்கு குன்றிமணி எண்ணெய் வலி நிவாரணி கொடுப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டது, சில விலங்குகளுக்கு வலி நிவாரணி கொடுத்ததற்கு பின்பு கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் அமைந்தன. எந்த விலங்குகளுக்கு குன்றிமணி எண்ணெயானது வலி நிவாரணி கொடுப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டதோ அந்த விலங்குகளில் கல்லீரல் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது, அதேசமயம் வலி நிவாரணி கொடுப்பதற்கு பின்பு கொடுக்கப்பட்ட விலங்குகளின் கல்லீரலில் பிலிரூபின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

பல் ஆரோக்கியம்

பல் ஆரோக்கியம்

குன்றிமணி எண்ணெயானது பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. 2015 ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக்கூட சோதனை அறிக்கையின்படி, குன்றிமணி எண்ணெய் பிசின் ஒரு சிறந்த பற்சொத்தை அடைப்பானாக பற்கால்வாய் சிகிச்சையில் பயன்படுகிறது, அதேசமயம் மற்ற பற்றச்சொத்தை அடைப்பான்களுடன் ஒப்பிடும் போது நச்சுத்தன்மை இல்லாத ஒன்றாகவும் உள்ளது. குன்றிமணி எண்ணெய் பிசினின் இயற்கையாக திசுக்களை சீர்படுத்தும் பண்பு நலனே அதை பல் மருத்துவத்தில் ஒரு நம்பத்தகுந்த மருந்தாக மாற்றியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

பிரேசில் நாட்டில் உள்ள பல் சம்பத்தப்பட்ட பத்திரிகை ஒன்று கோபைபா எண்ணெய் எவ்வாறு ஸ்ட்ரெப்டோகோகஸ் மியுடன்ஸ் போன்ற பாக்ட்ரியாக்கள் பெருகுவதை தடுக்கிறது என ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதில் என்ன முக்கியம் என நீங்கள் நினைக்கலாம், இந்த வகை பாக்ட்ரியாக்கள் தான் பற்சொத்தை மற்றும் பற்குழிக்கு காரணமானவை. எனவே கோபைபா எண்ணையை பயன்படுத்தி நம்மால் பற்சொத்தை மற்றும் பற்குழியை சிறந்த முறையில் தடுக்க முடியும். ஆகவே அடுத்த முறை எண்ணெயால் வாயை கொப்பளிக்கும் போது (ஆயில் புல்லிங்) மறக்காமல் ஒரு துளி குன்றிமணி எண்ணெயும் கலந்து கொப்பளிக்கவும்.

வலி நிவாரணி

வலி நிவாரணி

குன்றிமணி எண்ணையின் அண்டினோசிஸ்ப்டிவ் பண்புநலனால் ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணியாக மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குன்றிமணி எண்ணெய், வலி ஏற்படும் போது உணர்ச்சி நரம்புகளுக்கு செல்லும் சமிக்ஞையை தடுப்பதால் ஒருவருக்கு வலி உணர்வு ஏற்படுவதில்லை. 2017 ல் வெளியான அறிவியல் ஆய்வறிக்கையின்படி, கோபைபா எண்ணையை உபயோகித்த பெரும்பாலான கீல்வாதம் வந்த நபர்களின் மூட்டுவலி மற்றும் வீக்கம் வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது.

MOST READ: மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ... கட்டாயம் சாப்பிடுங்க

முகப்பரு நீக்கம்

முகப்பரு நீக்கம்

குன்றிமணி எண்ணையின் கிருமிநாசினி, அழற்சியை எதிர்க்கும் திறன் மற்றும் குணப்படுத்தும் ஆற்றலால் அது இயற்கையாகவே முகப்பருவை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.

குன்றிமணி எண்ணையின் சரும சுத்திகரிப்பு பயனை முழுமையாக பெற ஒரு துளி குன்றிமணி எண்ணையை நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக கிரீமில் கலந்து பயன்படுத்தி வர வேண்டும்.

மன அமைதி

மன அமைதி

இந்த பயன்பாட்டை நிரூபிக்க நிறைய ஆய்வுகள் இல்லாத நிலையில், கோபைபா எண்ணெயானது அதன் பண்புகளுக்காக தெளிப்பான்களில் (டிஃபிஸஸர்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் நல்ல இனிமையான இயற்கை நறுமணம், ஒருவருக்கு நாள் முழுவதும் ஏற்பட்ட களைப்பு மற்றும் கவலைகளை மறக்க செய்து நல்ல தூக்கத்தை தரவல்லது.

குன்றிமணி எண்ணைய்

குன்றிமணி எண்ணைய்

குன்றிமணி எண்ணெயானது பல வகைகளில் வாசனை திரவியம், அழகுசாதனப் பொருள்கள் மற்றும் உட்கொள்ளும் மருந்துகள் என பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ஒருவர் 100 சதவீத சிகிச்சை தர மற்றும் USDA சான்றளிக்கப்பட்ட கோபைபா எண்ணையை நேரடியாக உட்கொள்ளலாம்.

ஒன்று அல்லது இரண்டு துளி குன்றிமணி எண்ணையை தண்ணீர் அல்லது தேநீருடன் கலந்து பருகலாம். குன்றிமணி எண்ணையை வேறு ஒரு எண்ணெய் அல்லது நறுமணமற்ற கிரீமுடன் கலந்து சருமத்தில் தடுவுவதற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமில்லாமல் குன்றிமணி எண்ணையை வாசனை திரவிய தெளிப்பானில் கலந்து நறுமண பொருளாகவும் பயன்படுத்தலாம்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

குன்றிமணி எண்ணையை நேரடியாக சருமத்தின் மீது உபயோகிக்கும் பொது அது சரும உணர்த்திறனில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே குன்றிமணி எண்ணையை எப்போதும் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களுடன் கலந்து உபயோகிக்க வேண்டும்.

குன்றிமணி எண்ணையை எபோதும் வளர்ப்பு பிராணிகள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். அதிகப்படியாக குன்றிமணி எண்ணையை உட்கொள்ளும் ஒருவருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, நடுக்கம், துர்நாற்றம், இடுப்பு வலி மற்றும் தூக்கமின்மை வர வாய்ப்புள்ளது.

சருமத்தில் பயன்படுத்தும்போது தோல் சிவப்பாதல் அல்லது அரிப்பு ஏற்படலாம். குன்றிமணி எண்ணையினால் மிக அரிதாகவே ஒவ்வாமை ஏற்படும். ஆனால் ஏதாவது மாற்றம் தென்பட்டால் உடனடியாக குன்றிமணி எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு மருத்துவரை அணுகவேண்டும்.

MOST READ: முருங்கைக்காய் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

எப்படியெல்லாம் பயன்படுகிறது?

எப்படியெல்லாம் பயன்படுகிறது?

குன்றிமணி மரத்திலிருந்து வடிகின்ற பிசினில் இருந்து தான் இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக குன்றிமணி எண்ணெயானது அணைத்து விதமான பொது நோய்களுக்கும் மருந்தாக உபயோகத்தில் உள்ளது.

இந்த எண்ணெய், இயற்கையான அழற்சி எதிர்ப்பானாக பயன்படுகிறது, வீரியமிக்க கிருமிநாசினியாக பயன்படுகிறது, நரம்புகளை பாதுகாக்கிறது, கல்லீரல் பாதிப்பை தடுக்கிறது, பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தை பேணிக்காக்கிறது, வலி நிவாரணியாகவும் சரும பிரச்சனைகளுக்கும் மருந்தாக உபயோகிக்கப்பட்டு வருகிறது.

குன்றிமணி எண்ணெய், நம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளும் மருந்தாகவும், சரும பாதுகாப்பிற்கும் மற்றும் நறுமண பொருளாகவும் பயன்பாட்டில் உள்ளது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Copaiba Oil: A Powerful Anti-Inflammatory, Antiseptic & Expectorant

here we are giving a important benefits of Copaiba Oil and how its work A Powerful Anti-Inflammatory, Antiseptic.
Story first published: Wednesday, January 2, 2019, 11:00 [IST]
Desktop Bottom Promotion