For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க, சித்தர்கள் கூறும் 8 மூலிகைகள் இதோ..!

|

உடலில் உருவாக கூடிய எல்லா விதமான அமிலங்களும் நமக்கு நன்மை தராது. இவற்றில் ஒரு சில அமிலங்கள் நம் உடலில் இருந்து வெளியேறவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகி விடும். அந்த வகையில் நம் உடலுக்கு தேவையற்ற அமிலம் தான் யூரிக் அமிலம் என்பது. பெரும்பாலும், இந்த யூரிக் அமிலம் சிறுநீரின் வழியாக வெளியேறி விடும். ஆனால், பல சமயங்களில் இது அப்படியே உடலில் தங்கி விடும்.

சித்தர்கள் குறிப்பிடும், சிறுநீரக கற்களை கரைக்கும் 8 மூலிகைகள் இதோ..!

இந்த யூரிக் அமிலம் உடலிலே இருந்து விட்டால் ஏராளமான நோய்களை உருவாக்கும். குறிப்பாக சிறுநீரக கோளாறு, மூட்டு பிரச்சினை, உடல் முழுவதும் அங்கங்கு வீக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற பக்க விளைவை இந்த யூரிக் அமிலம் தரவல்லது.

இவற்றின் உற்பத்தியை தடுக்கவும், ஏற்கனவே நம் உடலில் இருக்க கூடிய யூரிக் அமிலத்தை வெளியேற்றவும் அந்த காலத்திலே சித்தர்கள் சில அற்புத மூலிகைகளை தீர்வாக கூறியுள்ளனர். அவை என்னென்ன மூலிகைகள் என்பதை அறிந்து, இந்த பிரச்சினையில் இருந்து காத்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருவாக காரணம்..?

உருவாக காரணம்..?

எந்த ஒரு நோயும் நம் உடலில் நம்மை மீறி உருவாவதில்லை. அந்த வகையில், இந்த யூரிக் அமிலமும் நம் உடலில் உருவாவதற்கு பியரின் என்கிற மூலபாருள் உள்ள உணவுகள் தான் காரணம்.

அதிக அளவில் இறைச்சி, அவற்றின் உறுப்புகளை அதிகமாக சாப்பிடுதல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருதல் முதலியவை தான் இந்நிலைக்கு மூல காரணம்.

குதிரை மசால்

குதிரை மசால்

இதன் பெயர் சற்று வித்தியாசமாக தான் இருக்கும். அதே போன்று தான் இதன் மருத்துவ பயனும் பலவிதங்களில் நமக்கு உதவுகிறது.

சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றவும், பித்தப்பை மற்றும் ஆணுறுப்பில் உண்டாக கூடிய பிரச்சினைகள் அனைத்திற்குமே குதிரை மசால் அருமருந்தாக பயன்படுகிறதாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

நம் வீட்டிலே இருக்க கூடிய மூலிகைகளில் அதிக மகத்துவம் கொண்டவை இந்த எலுமிச்சை. ஆயுர்வேதத்தில் பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு எலுமிச்சை உதவுகிறது.

எலுமிச்சை சாற்றை தினமும் நீரில் கலந்து குடித்து வந்தால் இந்த சிறுநீரக கற்களை உருவாக்கும் யூரிக் அமிலம் கரைந்து விடும். தேவைக்கும் 1 ஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளலாம்.

சூர்நகம்

சூர்நகம்

"இப்படியுமா மூலிகையின் பெயர்கள் உண்டு" என யோசிக்கும் உங்களை ஆச்சரியப்படுத்த கூடிய தன்மை இதற்கு உண்டு.

சூர்நகம் அல்லது பேய் நகம் என்று அழைக்கப்படும் இந்த மூலிகை சிறுநீரக கற்கள் முதல் மூட்டு வலி வரை குணபடுத்தும் திறன் கொண்டது. இதை பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடந்து கொண்டு வருகிறது.

MOST READ: 1 வாரத்திற்கு வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிடுங்க...அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!

உவர்ப்பு சுவை கொண்ட

உவர்ப்பு சுவை கொண்ட

செர்ரியில் இரு வகை உண்டு. ஒன்று, இனிப்பு சுவை கொண்ட செர்ரி , வேறொன்று நெல்லி காய் போன்ற உவர்ப்பு சுவை கொண்ட செர்ரி .

இதில் இரண்டாவது வகை தான் சிறுநீரகத்தில் சேர கூடிய யூரிக் அமிலத்தை வெளியேற்றும் தன்மை கொண்டவை. மேலும், சிறுநீரக கற்கள் உருவாவதையும் இது தடுத்து விடுமாம்.

கோதுமை புல்

கோதுமை புல்

வைட்டமின் சி, பச்சையம், பைட்டோ கெமிக்கல்ஸ் போன்றவை அதிக அளவில் கோதுமை புல்லில் நிறைந்துள்ளது. சிறுநீரகத்தில் சேர கூடிய கற்களை இது விரைவில் கரைத்து விடும்.

ஆதலால் சிறுநீர் கற்கள் தொல்லையால் அவதிப்படுவோர் தினமும் 2 ஸ்பூன் கோதுமை புல்லின் சாற்றை குடித்து வாருங்கள்.

செந்தட்டி

செந்தட்டி

உடலில் இருக்க கூடிய நச்சு தன்மை உள்ள கழிவுகளை வெளியேற்ற இந்த செந்தட்டி என்கிற மூலிகை பயன்படுகிறது.

இதனை நீரில் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து விடும். இந்த மருத்துவத்தை தான் சித்தர்களும் செய்து வந்தார்களாம்.

செலரி விதைகள்

செலரி விதைகள்

செலரி கீரை எப்படி நமக்கு உணவாக உதவி பலவித நோய்களில் இருந்து காக்கிறதோ அதே போன்று இதன் விதையிலும் ஏரளமான மருத்துவ குணம் நிறைந்துள்ளதாம்.

இந்த விதைகளை உலர வைத்து பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.

MOST READ: உங்கள் வயதை பொருத்து, உடலுறவு வைத்து கொள்ள எது சிறந்த நேரம்..?

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

சமையல் எண்ணெய்யாக பயன்படுத்த கூடிய இந்த ஆலிவ் எண்ணெய் எண்ணற்ற மருத்துவ நலன்களை கொண்டது.

ஆலிவ் எண்ணெய்யில் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க கூடிய தன்மையும் உண்டாம். எனவே, உணவை ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Herbs Can Dissolve Uric Acid

Here we listed out some ayurvedic herbs to dissolve uric acid.
Desktop Bottom Promotion