Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
ஆண்மையை அதிகரிக்கும் அம்மான் பச்சரிசி இலை... ஒத்த ரூவா செலவில்ல...
பெரியவர்களாகிய நமக்கு கூட சில கீரை மற்றும் மூலிகை வகைகளின் நன்மைகள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். அப்படிப்பட்ட சில அற்புதமான நன்மைகளை அள்ளித் தரும் மூலிகை வகைகளைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்
காய்கறிகள், பழங்களை காட்டிலும் பல மடங்கு நன்மைகளை தருவது இந்த கீரை மற்றும் மூலிகை வகைகள் தான். நமது முன்னோர்கள் அதிகளவில் கீரை மற்றும் மூலிகையை உணவில் சேர்த்துக் கொண்டதனால் தான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் நாம் இந்த நவீன காலத்தில் பாஸ்ட் புட் மயக்கத்திலயே நம் வாழ்நாளை கொன்று கொண்டு இருக்கிறோம். ஏன் நம் பிள்ளைகளுக்கு கூட எந்தவொரு கீரையின் பெயரோ மூலிகையின் பெயரோ கூட தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களாகிய நமக்கு கூட சில கீரை மற்றும் மூலிகை வகைகளின் நன்மைகள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். அப்படிப்பட்ட சில அற்புதமான நன்மைகளை அள்ளித் தரும் மூலிகை வகைகளைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

அம்மான் பச்சரிசி
இது பூண்டு வகை குடும்பத்தை சார்ந்தது. இதில் இரண்டு வகைகள் உள்ளன. பெரிய அம்மான் பச்சரிசி தாவரம் மற்றும் சிறிய பச்சரிசி தாவரம். இவை பார்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

காணப்படும் இடங்கள்
நடைபாதை, சாலையோரங்களில், நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களான கிணறுகள், ஈரப்பதமான நிலம் போன்றவற்றில் காணப்படுகிறது.

அடங்கியுள்ள பொருட்கள்
இதிலிருந்து வரும் பால் மருத்துவ துறையில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அஸ்ட்ரிஜெண்ட் , மெழுகு, டோனிக், உயர் கால்சியம் மற்றும் குளிர்ச்சியான தன்மை போன்றவை உள்ளன.

பெயர்கள்
தாவரவியல் பெயர்கள் :யூபோர்பியா ஹிர்தா, யூபோர்பியா பிலுஃபெரா
தமிழ் : அம்மான் பச்சரிசி
ஆங்கிலம் : கார்டன் பர்ச், ஸ்நேக் வீட், பில் பியரிங் பர்ச், ஆஸ்துமா பிளாண்ட், ஹைரி பர்ச்
குஜராத் : டுடேலி
சமஸ்கிருதம் : டுக்திக்கா
ஹிந்தி : டுதி, பாரிடுதி, டுத் கோஸ்
தெலுங்கு : ரெட்டின் ரரோலு, ரெட்டிவரி நனபாலு
மலையாளம் : நீல பாலை

பயன்கள்
இந்த கீரை வகை ஆஸ்துமா, மூச்சுப் பிரச்சினை, இரத்தத்தை சுத்தப்படுத்துதல், உடல் வலிமை, நீண்ட நாள் காயங்கள் போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது.

உடல் சூடு மற்றும் மலச்சிக்கல்
அம்மான் பச்சரிசி இலைகளை பூண்டு மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்கி சட்னி தயாரிக்க வேண்டும். இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடம்பு ரெம்ப நேரம் குளிர்ச்சியாக இருப்பதோடு மலச்சிக்கலை தடுக்கிறது.

வீக்கம் மற்றும் கொப்புளங்கள்
வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் இந்த இலைகளை அரைத்து பற்று போட்டு வந்தால் 5 நாட்களில் எல்லாம் குணமாகி விடும்.

வாய் மற்றும் குடல் அல்சர்
பாசி பருப்புடன் இந்த இலையை சேர்த்து நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும்.

வறண்ட உதடுகள்
இதன் பால் வறண்ட உதடு, நாக்கு புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கு உதவுகிறது.
கருத்த தோல் மற்றும் மருக்கள்
கருத்த சருமத்தில் இதன் பாலை தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் சருமம் பழைய நிலையை அடையும். இதை குணமாகும் வரை பின்பற்ற வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பு
சுத்தமான மாட்டுப் பாலுடன் இதன் பூவை நன்றாக கழுவி அரைத்து கொள்ளவும். கொஞ்சமாக பாலுடன் இதை சேர்த்து காலையில் 18 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

லுகோரோருவா, கருவுறுதல்
இதன் இலைகளை பட்டர் மில்க் உடன் அரைத்து பயன்படுத்தி வந்தால் லுகோரோருவா குணமாகும். இந்த இலைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்பட்டு கருவுறுதல் எளிதாகும்.

விந்து பிரச்சினைகள்
ஸ்டோன் பிரேக்கர் இலைகள் மற்றும் அம்மான் பச்சரிசி இலைகளை சம அளவு எடுத்து அரைத்து பாலில் கலந்து 21 நாட்களுக்கு காலையில் குடித்து வர ஆண் இனப்பெருக்க மண்டலம் மேம்பட்டு ஆண்மை பிரச்சினைகள் சரியாகும்.

இரத்தம் சுத்தப்படுத்துதல்
3 வேப்பிலைகள், மிளகு, அம்மான் பச்சரிசி இலைகள் சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.

மரு உதிர
லெமன் அளவு இந்த இலைகளை எடுத்து அரைத்து சாப்பிட்டு வர வாத நோய்கள் காணாமல் போகும். எவ்வளவு பெரிய மருவாக இருந்தாலும் இந்த அம்மான் பச்சரிசி செடியின் பாலை மரு மீது வைத்து வந்தால், சருமத்தில் இருந்த இடம், தழும்பு இல்லாமல் மருவை உதிரச் செய்யும் ஆற்றல் கொண்டது.



Click it and Unblock the Notifications