For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கிழங்கை ஏன் வாசலில் கட்டுகிறார்கள் தெரியுமா? இதோட மகத்துவம் தெரிஞ்சா விடமாட்டீங்க

|

நம்முடைய வீட்டு வாசற்படியில் எலுமிச்சையும் மிளகாயும் கோர்த்து திருஷ்டிக்காகக் கட்டியிருப்பார்கள். சில பெரிய வீடுகளில் பூசணிக்காயில் திருஷ்டி பொம்மை படம் வரைந்து தொங்கவிடப்பட்டிருக்கும். ஆனால் இதுமட்டும் இல்லாமல் நம்முடைய கிராமப் புறங்களில் வீட்டு வாசலில் கழுகுப் போன்ற உருவம் கொண்ட ஒரு காய்ந்த கிழங்கு ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த கிழங்கின் பெயர் தான் ஆகாய கருடன் கிழங்கு. காட்டுப் பகுதிகளில் கிடைக்கும் இந்த கிழங்கு பற்றிய பல அபூா்வத் தகவல்கள் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆகாய கருடன் கிழங்கு

ஆகாய கருடன் கிழங்கு

இந்த கிழங்குக்கு கொல்லங்கோவை, பேய்சீண்டல் போன்ற பெயர்கள் இருந்தாலும் கூட, ஆகாய கருடன் கிழங்கு என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும். காட்டுப் பகுதிகளில் மட்டுமே வளரும் இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இந்த கொடியை வேருடன் வெட்டினால் மண்ணுக்கு அடியில் இந்த கிழங்கு கிடைக்கும்.

MOST READ: எப்படி சுத்தம் பண்ணினாலும் வீட்ல சிங்க் நாற்றமடிக்குதா?... இத ட்ரை பண்ணி பாருங்க...

வீட்டு வாசல்

வீட்டு வாசல்

மண்ணுக்கு அடியில் இருக்கும் இந்த கிழங்கை தோண்டி எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவது வழக்கமாக இருக்கிறது. நம்முடைய காலத்தில் நிறைய பேர் கற்றாழையை வீட்டுமுன் தொங்கவிட்டிருப்பார்கள். அதேபோல அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த ஆகாய கருடன் கிழங்கைத் தான் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்.

பாம்பு

பாம்பு

கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் போது, அது கருடன் வடிவத்தில் இருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது. அதோடு வானத்தில் இருக்கும் கழுகு நிலத்தில் இருக்கின்ற பாம்பினை வேட்டையாடுவதைப் போன்று, இந்த கிழங்கு பாம்புகளை விரட்டுகின்ற சக்தி கொண்டது. அதற்குக் காரணம் இந்த கிழங்கின் வாசம் தான். இந்த வாசத்தால் எந்த விஷப்பூச்சிகளும் நம்முடைய வீட்டுக்குள் வரவே வராது.

பில்லி சூன்யங்கள்

பில்லி சூன்யங்கள்

மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்பட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான தொற்றுநோய்களும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. விஷப் பூச்சிகளை வரட்டுவது போலவே வீட்டுக்கு ஏற்படுகின்ற திருஷ்டி, தோஷங்கள், பில்லி சூன்யங்களை நீங்குவதோடு தீய சக்திகளையும் அண்ட விடாமல் தனக்குள் கிரகித்துக் கொள்கின்ற ஆற்றல் இந்த கிழங்குக்கு உண்டு.

MOST READ: ஆவாரம்பூவை இப்படி டீ போட்டு குடித்தால் ஆயுள் இரட்டிப்பாகுமாம்... செய்முறை உள்ளே...

நேர்மறை ஆற்றல்

நேர்மறை ஆற்றல்

கோவில் கோபுர கலசங்கள் பிரபஞ்சத்தில் உள்ள நேர்மறை சக்திகளையும் ஈர்த்து கோவில் கருவறைக்கு அனுப்புவது போல, இந்த ஆகாய கருடன் கிழங்கும் நேர்மறை சக்திகளை ஈர்த்து, வீட்டுக்குள் அனுப்புகிறது.

பாம்பு கடி

பாம்பு கடி

யாருக்கேனும் பாம்பு கடித்துவிட்டால், இந்த ஆகாய கருடன் கிழங்கை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு மெல்ல வேண்டும். அப்படி மென்றால், சிறிது நேரத்தில் வாந்தி உண்டாகும். அதையடுத்து உடலில் உள்ள விஷம் மலத்தின் வழியாக உடனடியாக வெளியேறிவிடும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள்.

தோல் அழற்சி

தோல் அழற்சி

மண்ணுளி பாம்பு, கம்பளிப்பூச்சி ஆகியவற்றால் உண்டாகின்ற தோல் அழற்சிக்கும் இந்த கிழங்கு மிகச்சிறந்த தீர்வைக் கொடுக்கும்.

இந்த கிழங்கை வெயிலில் காய வைத்து, அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, சுடு தண்ணீர் குடித்து வந்தால் எல்லாவிதமான தோல் வியாதிகளும் குணமடையும்.

MOST READ: வழுக்கையில் மீண்டும் முடிவளர சுண்டெலியை அரைத்து தேய்க்கும் விநோதம்... வேற என்னலாம் செய்றாங்க

மூட்டு வலி

மூட்டு வலி

இந்த ஆகாய கருடன் கொடியில் உள்ள இலைகளை நன்கு நறுக்கி வைத்துக் கொண்டு, ஒரு இரும்புச் சட்டியில் சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி காயவிட்டு, அதில் இந்த இலைகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.நன்கு வதங்கியதும் நல்ல சுத்தமான நூல் துணியில் கட்டி, வலியெடுத்த கால், கைகளுக்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி பறந்து போகும். வீக்கமும் குறையும். மூட்டு வலி குணமடையும்.

அந்த காலத்தில் காடுகளில் விளையும் இந்த கிழங்குகளைக் கொண்டு வந்து, சந்தைகளில் விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கால மாற்றத்தால், அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதன் தேவையும் குறைந்துவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

rare herbs of agaya garudan kilangu benefits

here we are introducing rare herbs of agaya garudan kilangu and that benefits.
Story first published: Monday, October 29, 2018, 18:10 [IST]
Desktop Bottom Promotion