சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த சீனித்துளசி உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும்

இந்த சீனித்துளசி சர்க்கரையை விட பலமடங்கு இனிப்பு சுவை கொண்டது. இனிப்பு சுவை மட்டுமின்றி இந்த சீனித்துளசி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமானது மூலிகைகள். இந்த மூலிகைகள் நமக்கு ஏற்படும் அனைத்து ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கக்கூடும். இதில் பல மூலிகைகளை நாம் வெறும் ரோட்டில் இருக்கும் செடிகளாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அவை அனைத்தும் பல நன்மைகளை வழங்கக்கூடிய அற்புத செடிகளாகும். அந்த வகையில் நம் பலருக்கும் தெரியாத ஒரு ஒரு அற்புத மூலிகைதான் சீனித்துளசி அல்லது ஸ்டெவியா.

health benefits of Stevia

இந்த சீனித்துளசி சர்க்கரையை விட பலமடங்கு இனிப்பு சுவை கொண்டது. பல நாடுகளில் இது சர்க்கரைக்கு பதிலாக இனிப்பு சுவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிப்பு சுவை மட்டுமின்றி இந்த சீனித்துளசி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும். இந்த பதிவில் சீனித்துளசி பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்களையும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனித்துளியின் வகைகள்

சீனித்துளியின் வகைகள்

ஸ்டெவியாவில் மொத்தம் மூன்று வகைகள் இருக்கிறது.

பச்சை இல்லை ஸ்டெவியா - இது ஸ்டெவியாவின் குறைந்தபட்ச நிலையாகும். இது சர்க்கரையை விட 3ஓ முதல் 40 மடங்கு அதிக இனிப்புச்சுவை கொண்டது ஆனால் சிறிது உவர்ப்பு சுவை கொண்டது.

பிரிக்கப்பட்ட ஸ்டெவியா - இந்த பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெவியா சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பு சுவை கொண்டது ஆனால் பச்சை ஸ்டெவியாவை விட அதிக உவர்ப்பு சுவை கொண்டது.

மாற்றியமைக்கப்பட்ட ஸ்டெவியா - இது ஸ்டெவியாவின் அதிகபட்ச மாற்றியமைக்கப்பட நிலையாகும். இது சர்க்கரையை விட 200 முதல் 400 மடங்கு இனிப்பு சுவை கொண்டது, இது ஸ்டெவியாயின் மோசமான நிலையாகும்.

ஸ்டெவியாவின் ஊட்டச்சத்துக்கள்

ஸ்டெவியாவின் ஊட்டச்சத்துக்கள்

ஸ்டெவியா அதன் இனிப்பு சுவைக்காக புகழ்பெற்றது. எனவே இதனை சர்க்கரைக்கு பதிலாக டயட்டில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் கலோரிகள் மிக குறைவாக உள்ளது சொல்லப்போனால் கலோரிகளே இல்லை என்று கூட சொல்லலாம். ஸ்டெவியா மீதான ஆராய்ச்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதனை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அது உங்கள் ஆரோக்கியத்தில் அற்புதத்தை ஏற்படுத்தும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல்

ஸ்டெவியாவின் பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறப்பு என்னவென்றால் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்த அறிவுறுத்துவார்கள் இதில் உள்ள குறைவான கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இதில் உள்ள ஸ்டேவியோசைடு என்னும் வேதிப்பொருள் கார்போஹைட்ரேட் இல்லாத க்ளைக்கோசைடு மூலக்கூறாகும். இது உங்கள் உடலில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

எடை இழப்பு

எடை இழப்பு

ஸ்டெவியாவில் கலோரிகள் மிகக்குறைவாக உள்ளது, இது சர்க்கரையை விட அதிகளவு இனிப்பு சுவை கொண்டிருந்தாலும் இதனுடன் சேர்க்கப்படும் பொருட்களை பொறுத்து அதன் தன்மை மாறுபடும். எனவே ஸ்டெவியா கொண்டு தயாரிக்கப்பட்ட கேக், பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை நீங்கள் தாராளமாக சாப்பிடலாம், எடை அதிகரிக்கும் என்ற பயமே உங்களுக்கு தேவையில்லை. அதனால் உங்கள் உடலில் கலோரிகளின் அளவில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இது குழந்தைகள் உணவில் சேர்ப்பது அவர்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

மேலே கூறியது போல ஸ்டெவியோசைடு ஒருவகை க்ளயோசைடு ஆகும். ஆனால் இதில் உள்ள மற்ற க்ளயோசைடுகள் உங்கள் இரத்த நாளங்களை நிதானப்படுத்த உதவுகிறது, சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கிறது. இதன் அர்த்தம் இது இதயப்பகுதியில் ஏற்படும் அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் மாரடைப்பு, ஆர்தோக்ளோரோசிஸ் போன்ற நோய்களை தடுக்கிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

ஸ்டெவியாவில் காணப்படும் அதிகளவு ஆக்சிஜனேற்ற பண்புகள் அதனை புற்றுநோய் செல்களை அழிக்கவும், பலவித புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கவும் சிறந்த பொருளாக மாற்றுகிறது. குறிப்பாக கணைய புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்க இது முக்கியமான பொருளாகும். ஸ்டெவியாவில் இருக்கும் க்வெர்கெடின், காம்பெஃபோல் போன்ற பொருட்கள் உங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இதில் உள்ள மூலக்கூறுகள் வயதாவதை தாமதப்படுத்துவது, மூளை ஆரோக்கியம் போன்ற நன்மைகளை வழங்குகிறது.

கொழுப்பு நிலைகளை குறைக்கிறது

கொழுப்பு நிலைகளை குறைக்கிறது

ஆய்வுகளின் படி ஸ்டெவியாவை உட்கொள்வது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது, மற்றும் இதில் உள்ள ட்ரைகிளிசெரைடுகள் உங்கள் உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரிக்க பயன்படுகிறது.

வாய் ஆரோக்கியம்

வாய் ஆரோக்கியம்

ஸ்டெவியாவை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்கள் உங்கள் வாயில் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது. இது பெரும்பாலும் அனைத்து பற்பசைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, ஈறுகளில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. இதனை சுக்ரோஸ் ஒருபோதும் செய்யாது.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

ஸ்டெவியா உங்கள் சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சிகள் மற்றும் பிளவுகள் போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது. இது சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா பரவுதலை தடுக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை பல நாடுகளில் மக்கள் இலையாக சாப்பிட்டும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

ஸ்டெவியாவால் பெரும்பாலும் பக்கவிளைவுகள் இல்லை. இருப்பினும் இதனை சாப்பிடுவது உங்களுக்கு நன்மையா இல்லையா என்பதில் சந்தேகம் இருக்கலாம். இதனால் பெரிய பக்கவிளைவுகள் இல்லையன்றாலும் இதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது அது சில ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். எனவே இதை சாப்பிடும் அளவில் கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion