For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியம், அதிர்ஷ்டம் ரெண்டும் நிறைந்திருக்கும் ஆத்தி மரம்... உங்க வீட்ல இருக்கா?

|

காவிரி வளம் கொழித்த, முற்கால தஞ்சைமாநகரை ஆண்ட சோழ மாமன்னர்களின் தனிச்சிறப்புமிக்க மாலை, ஆத்தி மலர் மாலைகளாகும். பாண்டியருக்கு வேப்பம்பூ மாலை போல, சேரருக்கு வஞ்சி மாலை போல, சோழர்களின் அணிகலன், ஆத்தி மாலை. சோழர்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழும் ஆத்தி மலர்களைக் கொண்ட மரங்கள், பெருமளவில் வளர்ந்த இடங்கள், ஆர் எனும் அதன் இயற்பெயராலேயே அழைக்கப்பட்டன.

Image Source

இவற்றில் உள்ள மருத்துவக் குணங்கள் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாக்கும் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இங்கே காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆத்தி மரங்கள்

ஆத்தி மரங்கள்

ஆத்தி மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்த இடமே, தற்காலத்தில், ஆற்காடு என அழைக்கப்படுகிறது. நீதிநெறி தவறாமல் ஆண்ட மாமன்னன் மனுநீதி சோழன் ஆட்சி புரிந்த திருவாரூர் நகரமும், ஆர் எனும் ஆத்தி மரங்கள் நிறைந்த சோலை வனமாகத் திகழ்ந்த இடமாக இருந்ததால், ஆரூர் என்று இன்றும் வழங்கப்படுகிறது.

திருவாரூரை அடுத்த திருச்செங்காட்டங்குடி சிவன் கோவிலின் தல மரமாக, ஆத்தி மரமே திகழ்கிறது. மலையத்தி என்றும் அழைக்கப்படும் தொன்மையான ஆத்தி மரம், பழந்தமிழர்களின் கலாச்சார சிறப்புமிக்கது மட்டுமல்ல, தமிழர்களின் உடல் நலத்துக்கும் பெருந்துணையாக விளங்கிய மாமரமாகும்.

Image Source

எப்படி இருக்கும்?

எப்படி இருக்கும்?

பச்சை வண்ண குறு மரங்களாக வளரும் ஆத்தி மரத்தின் இலைகள் இரண்டாகப் பிளந்தும், காய்கள் நீண்டு குறுகியும் இருக்கும். கிளைகள் கீழ்நோக்கி வளைந்து காணப்படும். சித்திரை மாதத்தில் மஞ்சள் வண்ண மலர்கள் மலரும் ஆத்தி மரங்களில், ஆடி மாதம் முதல் காய்கள் காய்த்துக் குலுங்கும். தற்காலத்தில் வீடுகளில் அழகுக்காக வளர்க்கும் மரங்களில், ஆத்தி மரமும் ஒன்று.

சோழர்களின் வீரத்துக்கு அடையாளமாகத் திகழ்ந்த ஆத்தி, வடநாட்டவரின் அதிர்ஷ்ட மரமாகத் திகழும் ஆச்சரியம்! தமிழ் மாமன்னர்களில் சிறந்து விளங்கிய சோழ மன்னர்கள் சூடும் தனிச்சிறப்புமிக்க ஆத்திமலர்களும் இலைகளும், வட நாட்டாருக்கு அதிர்ஷ்டம் தரும் மரமாகவும், அதன் இலைகளும் பூக்களும் திகழ்வதை, இன்று நாம் காண முடிகிறது.

Image Source

நவராத்திரி

நவராத்திரி

நவராத்திரி திருவிழா நாட்களின் நிறைவில் வரும் விஜயதசமி எனும் தசரா பண்டிகை வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தமான பண்டிகையாகும். இந்தப் பண்டிகை நாட்களில், சகல நன்மைகள் அடையவும், எதிரிகள் ஒழியவும், மக்கள் ஆத்தி இலைகளை பூஜித்து வணங்குவர். மேலும், இலைகளை, சிறு செடிகளை உறவினர் நண்பர்களுக்கும் வழங்கி, மகிழ்ச்சி பொங்க வாழ்த்துவர்.

தமிழ் மாமன்னர்களின் கலாச்சார ஆத்தி மாலைகளை, நாம் மறந்து விட்டோம், ஆயினும் மொழியிலும், கலாச்சாரத்திலும் வேறுபட்ட வட நாட்டில் இன்றும் ஆத்தியைப் போற்றி, சந்தோசத்தையும், வெற்றியையும் அடைகிறார்கள் என்பதை, இந்த இடத்தில் நாம் வியந்து பார்க்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆத்தி மரத்துக்கு வட நாட்டில் ஆப்தா மரம் என்று பெயர்.

வட நாட்டில், விஷேசமாகக் கொண்டாடப்படும் தசரா திருநாளில், ஆப்தா மரத்தின் இலைகள், புனிதமிக்கவையாகக் கருதப்படுவது ஒருபக்கம் என்றால், பாலை நிலங்களைக் கொண்ட இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், வறட்சியால் உண்ண உணவின்றி பஞ்சம் ஏற்படும் வேளைகளில், மக்கள் ஆத்தி மரத்தின் பட்டைகளை உரித்து, அதையே உண்டு உயிர் வாழ்ந்திருக்கின்றனர்.

Image Source

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

செரிமான கோளாறுகள், சரும வியாதிகள், ஜுரம், வீக்கம் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு, ஆத்தி இலைகள், மரப்பட்டைகள், வேர்கள், மற்றும் பூக்களின் மொட்டுக்கள் மருந்தாகின்றன.

சிறுநீரக பாதிப்புகள், வாதம் தொடர்பான வியாதிகள், தொண்டைப்புண் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான வியாதிகளைப் போக்கும் அரிய தன்மைமிக்க வேதிச்சத்துக்க்ளைக் கொண்ட மரமாக, ஆத்தி மரங்கள் திகழ்கின்றன.

Image Source

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஆத்தி மர இலைகளிலுள்ள ஆன்டி ஹிஸ்டாமின் தன்மை காரணமாக, ஆஸ்துமா எனும் சுவாச ஒவ்வாமை பாதிப்பை குணமாக்குகிறது. ஆத்தி மர இலைகளை நீரில் இட்டு கொதிக்கவைத்து வடிகட்டி பருகி வர, பாதிப்புகள் விரைவில் குணமாகும்.

தலைவலி

தலைவலி

அடிக்கடி ஏற்படும் தலைவலி தொல்லையால் அவதிப்படுபவர்கள், ஆத்தி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரை பருகிவர, தலைவலி குணமாகும்.

உடல்சூடு

உடல்சூடு

வியாதிகளுக்காக நீண்டநாட்கள் மருந்துகள் சாப்பிடுவது, உடலில் அதிகமாக ஏற்படும் சூடு, தகாத உறவுகளால் ஏற்படும் வேட்டைச்சூடு போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு, சிறந்த தீர்வளிக்கிறது, ஆத்தி மரத்தின் வேர்கள் மற்றும் பட்டைகள்.

கல்லீரல்

கல்லீரல்

உடலின் உள் இயக்கத்துக்கு உறுதுணையாக விளங்கும் முக்கிய சுரப்பியான கல்லீரல், குடிப்பழக்கம், மேலை உணவுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு, ஹெபடைடிஸ் எனும் கல்லீரல் அழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சிலருக்கு கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

ஆபத்தான கல்லீரல் வீக்கத்தை குணமாக்கும் வல்லமை, ஆத்தி மரத்துக்கு உண்டு. ஆத்தி மரவேர் மற்றும் பட்டைகளை உலர்த்தி இடித்து, அந்தத் தூளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி பருகி வந்தால், கல்லீரல் வீக்கம் மற்றும் வேதனை குணமாகிவிடும்.

இந்தக் குடிநீரை அவ்வப்போது பருகி வர, வயிற்றுப்பூச்சிகளை அழித்து, பசியைத் தூண்டும்.

ஆத்திப்பட்டை குளியல்

ஆத்திப்பட்டை குளியல்

தேமல், படை போன்ற சரும பாதிப்புகள் உடலில் அரிப்பை ஏற்படுத்தி, சொரிவதன் மூலம், அந்த இடத்தை இரணமாக்கிவிடும். ஆத்தி மரப்பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, உடல் பொறுக்கும் இளஞ்சூட்டில் அந்த நீரில் வாரமிருமுறை குளித்துவர, தேமல், படை போன்ற சரும வியாதிகள் யாவும் குணமாகிவிடும்.

வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண்

வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண்

சிலருக்கு வீரியமிக்க மாத்திரைகள் மற்றும் சுவாச பாதை கிருமிகளின் தொற்றால் மற்றும் உடல் சூட்டால், வாயில் மற்றும் தொண்டையில் புண் ஏற்படும். ஆத்திப் பழங்களை நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் தினமும் அடிக்கடி வாய் கொப்புளித்து வர, வாய் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட புண்கள் ஆறிவிடும். இதுவே, உடல் சூடு தொடர்பான அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாகிறது. சிறுநீரக கோளாறுகள், வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு தீர்வாகிறது,

ஆத்தி மரம்.

இருமல் போன்ற சுவாச பாதிப்புகள், இரத்த சர்க்கரை பாதிப்பு, பெண்களின் மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு போன்றவற்றை குணப்படுத்தும் அற்றல்மிக்கதாக, ஆத்தி மர இலைகள், பட்டைகள் மற்றும் வேர்கள் திகழ்கின்றன.

காயங்கள் மற்றும் புண்கள் ஆற

காயங்கள் மற்றும் புண்கள் ஆற

ஆத்தி மரப்பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரை, காயங்கள் மற்றும் புண்களின் மேல் ஊற்றி அலசிவர, ஆறாதகாயங்கள் விரைவில் ஆறிவிடும். ஆத்தி மரக்காய்கள் சிறுநீர் பாதிப்பை குணப்படுத்துவதிலும், பூக்கள் வயிற்றுப் போக்கை சரியாக்கி, வயிற்றுப்புழுக்களை அழிப்பதிலும் பயன்படுகிறது. ஆத்தி மரத்தின் வேர், பட்டை, இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் பழங்கள் அனைத்தும் கொண்ட தூள், சிறந்த நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை மருந்தாகிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தம் மற்றும் உடல்நலத்தைக் காப்பதில், சிறப்பாக செயல்படுகிறது. மூல வியாதி மற்றும் தொழுநோய் வீக்கங்களையும் குணப்படுத்தும் ஆற்றல்மிக்கதாகத் திகழ்கிறது. ஆத்திமரம், தமிழர்கள் வீடுகளில் அவசியம் வளர்க்கவேண்டிய பழமையான ஒரு மூலிகை மரம்! மூலிகை மரம் மட்டுமல்ல, அதிர்ஷ்ட மரமும் கூட!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Aathi Tree

Check out some of the amazing benefits of Aathi tree.
Story first published: Friday, August 17, 2018, 8:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more