For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரம்பரிய மருத்துவம்: ஆஸ்துமாவை அடியோடு விரட்டும் நஞ்சறுப்பான் மூலிகை

சாதாரண ஆளையே இந்த பெட்ரோல் புகைக்காத்து, இவ்ளோ பாதிச்சா, ஏற்கெனவே, மூச்சுவிடுறதுலே, கரக் புரக்ன்னு கஷ்டப்படும் ஆஸ்துமா காரங்களை, இந்தப்புகை என்னவெல்லாம் பண்ணும்.

By Gnaana
|

இன்னைக்கு மூச்சுல இழுக்குற காத்தெல்லாம், விஷக்காத்தாதான் இருக்கு, எங்கப் போனாலும், டீசல் புகையும், வாசமும்தான் ரோட்டையே நிரப்புது. இதில எங்கே, சுத்தமான காத்தை சுவாசிக்கிறது? என அங்கலாய்க்கிறீர்களா?

Nanjaruppaan Herbal cure Wheezing and asthma

சாதாரண ஆளையே இந்த பெட்ரோல்புகைக்காத்து, இவ்ளோ பாதிச்சா, ஏற்கெனவே, மூச்சுவிடுரதுலே, கரக் புரக்ன்னு கஷ்டப்படும் ஆஸ்துமா காரங்களை, இந்தப்புகை என்னவெல்லாம் பண்ணும்? சின்னப்புள்ளையிலே, பிரைமரி காம்ப்ளக்ஸ் எனும் மூச்சு பாதிப்பா வந்தது, அப்புறம் நாப்பது வயசுலே, ஆஸ்துமாவா வருது,

என் கூட்டாளி ஒருத்தன், எங்க அப்பன் சொத்தை கொடுத்தாரோ இல்லியோ, ஆஸ்துமாவைக் கொடுத்துட்டுதான் போயிருக்கார்னு, ரொம்ப சந்தோசமா வேற சொல்றான். அட, நம்மகூட இருந்தும், இவனெல்லாம், ரொம்ப நல்லவனா இருக்கானே! இருக்கட்டும், நமக்கும் அடிமை வேணுமே!
இது இல்லாம, கொஞ்சம் பேருக்கு, மூச்சு பிரச்சனையும் இருக்காம். அது யாருக்கு?

ரோட்டுலே காத்திருந்தா, பஸ்ஸு வருதோ இல்லியோ, வியாதி கண்டிப்பா வரும்பான், என்னோட கூட்டாளி. காத்துலே இருக்குற, புகையும் தூசியுமே போதும், நம்மை சீக்கிரம் டிக்கெட் வாங்க வைக்கிறதுக்குன்றான், அவன்.
நம்ம கதை கெடக்கட்டும், ஏன் இந்த மூச்சு பிரச்னையெல்லாம் நமக்கு வருதுன்னு, இது சம்பந்தமா உள்ள ஆளுங்ககிட்டே கேப்போம், அதுதான் சரி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

காற்றில் உள்ள மாசுக்கள், பூக்களின் மகரந்தம் மற்றும் அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள், ஆஸ்துமாவை உருவாக்கும். மன அழுத்தம், பயம், கோபம் போன்றவையும், ஆஸ்துமாவை ஏற்படுத்தும். காற்று மாசு, மன நெருக்கடி போன்ற காரணங்களால், நுரையீரலுக்கு காற்று போகும் மூச்சுப்பாதை, வீக்கமடைந்து, சுருங்கிவிடுகிறது. அத்துடன் குழாயில் சளி ஏற்பட்டு அடைத்துக்கொள்வதால், மூச்சுவிட சிரமமாகி, மூச்சிறைப்பு ஏற்படுகிறது. அந்த சமயங்களில், மூச்சுவிடுதலில் உள்ள சிரமமே, சுவாசிக்கும்போது வரும் சத்தம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

சளி அல்லது சளியில்லாத இருமல் தொடர்ந்து இருக்கும். சுவாசங்களுக்கிடையே, கால அளவு குறைந்து, தொடர்ந்த சுவாசத்தால், இளைப்பு ஏற்பட்டு, அந்த இளைப்பு, அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக, கடுமையாக இருக்கும்.

பெரியவர்கள் ஆஸ்துமா, TB மற்றும் சிறுவர்கள் பிரைமரி காம்ப்ளக்ஸ், கக்குவான் போன்ற பல்வேறு சுவாச பாதிப்புகளால், சிரமப்படுகின்றனர். அலோபதி மருத்துவத்தில் நீண்டகால தொடர் சிகிச்சையும், பக்க விளைவுகள் உள்ள மருந்துகளும், மக்களை அச்சுறுத்தும்போது, தமிழரின் பாரம்பரிய மூலிகைகள், சுவாச பாதிப்புகளை, முழுமையாக, எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் எளிதில் குணப்படுத்திவிடுகின்றன. அதில் ஆஸ்துமாவை குணப்படுத்தும் ஆற்றல்மிக்க மூலிகை, நஞ்சறுப்பான் மூலிகை.

ஆஸ்துமாவை ஒடுக்கும் நஞ்சறுப்பான் மூலிகை

ஆஸ்துமாவை ஒடுக்கும் நஞ்சறுப்பான் மூலிகை

கரிப்பாலை, கொடிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி என்ற பெயர்களில் அழைக்கப்படும் நஞ்சறுப்பான் மூலிகைக்கு, காகித்தம் எனும் வினோத பெயரும், உண்டு. ஆஸ்துமாட்டிகா எனும் இதன் தாவரபெயரே, இந்த மூலிகை, ஆஸ்துமாவுக்கு எதிராக செயல்படுவதைக் குறிக்கும்.

நஞ்சறுப்பான் கொடியின் இலைகள் விஷத்தை முறிக்கும் தன்மைமிக்கவை. பச்சை வேரின் சாறு, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சிறப்பு மருந்தாகிறது. இலைகளும் வேரும், உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையின் மூலம் வெளியேற்றும். நெஞ்சில் உள்ள சளியை கரைத்து அகற்றும் தன்மைமிக்கவை.

தமிழகத்தின் மலைகள் மற்றும் புஞ்சை நிலங்களில், வேலிகளில், மரங்களைச் சுற்றிப் படரும் கொடிவகையைச் சேர்ந்ததுதான், நஞ்சறுப்பான் மூலிகை. தண்டின் எதிரெதிர் அடுக்குகளில், உருளை வடிவ இலைகளுடன், வெளிர் மஞ்சளில் உட்பக்கம் சிவந்து காணப்படும் மலர்களுடன் கொத்தாக பழங்களும் காய்த்திருக்கும். இதன் வேர்கள், நல்ல சதைப்பற்றுடன் காணப்படும்.

ஆஸ்துமா கட்டுப்பாடு

ஆஸ்துமா கட்டுப்பாடு

நஞ்சறுப்பான் மூலிகையின் வேரை கொதிக்கவைத்து காய்ச்சிய சாறு, சுவாசப்பாதை அழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. நஞ்சறுப்பான் வேரின் வாந்தியை ஏற்படுத்தும் தன்மைகளால், நெஞ்சிலுள்ள சளி, வாந்தியின்மூலம் வெளியேறி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் சரியாகிறது.

நிவாரணம்

நிவாரணம்

நஞ்சறுப்பான் இலைகளை வெயில்படாமல் உலர்த்தி, பொடியாக சேகரித்து, தினமும், அரை தேக்கரண்டி வீதம் தேனில் குழைத்து, மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

குழந்தைகளின் சுவாசக் கோளாறுகள், சளித்தொல்லைகளுக்கும், நஞ்சறுப்பான் இலைப்பொடியை தேனில் குழைத்து சாப்பிடவைக்கலாம்.

இதன்மூலம், ஆஸ்துமா, கக்குவான் போன்றபாதிப்புகள் படிப்படியாக குணமாகிவிடும்.

இலைப்பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட, அதிக வியர்வை எடுத்து, சளியை வெளியேற்றும். சூட்டுடன் கூடிய வயிற்றுப்போக்கை சரியாக்கும்.

மூச்சிறைப்பு குணமாக

மூச்சிறைப்பு குணமாக

சிலர் சுவாச கோளாறின் காரணமாக, மூச்சிறைப்பு கடுமையாக ஏற்பட்டு, சிரமப்படுவார்கள். நஞ்சறுப்பான் இலைகளில் ஓரிரு மிளகுகளை வைத்து, காலையில் சாப்பிட்டுவர, இரைப்பு பாதிப்புகள் சரியாகி, உடலில் வீசிங் பாதிப்புகள் அதன்பிறகு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல்மிக்கவை.

இந்த முறையில், தினமும் காலை மாலை என இருவேளை வீதம், தொடர்ந்து ஆறு வாரங்கள் சாப்பிட்டுவர, ஆஸ்துமா மூச்சிறைப்பு பாதிப்புகள் சுத்தமாக நீங்கிவிடும்.

மூலிகை ஆவி பிடித்தல்

மூலிகை ஆவி பிடித்தல்

நஞ்சறுப்பான் இலை, நொச்சியிலை, கர்ப்பூரவல்லி இலை இவற்றை சிறிதளவு எடுத்து, ஆறு டம்ளர் நீரிலிட்டு நன்கு காய்ச்சி, அந்த சூட்டில், துவைத்த பருத்தி விரிப்பை எடுத்து, தலை மற்றும் உடல் முழுதும் மூடிக்கொண்டு, நீரிலுள்ள மூலிகைகளின் வாசனையை ஆழமாக உள்ளிழுத்து சுவாசித்து, முகம், மார்பு பகுதிகளில் மூலிகை ஆவி படுமாறு செய்துவர, சளியால் ஏற்பட்ட தலை பாரம், தலை வலி, உடல் வலி, இருமல் மற்றும் இளைப்பு போன்ற பாதிப்புகள் விலகி, உடல் புத்துணர்வடையும்.

விஷங்களை வெளியேற்றும்.

நஞ்சறுப்பான் இலைகளை அம்மியில் அரைத்து, நெல்லிக்காயளவு விழுங்கவைக்க, விஷங்கள் வெளியேறும். விஷக்கடிபட்ட இடத்திலும் நஞ்சறுப்பான் இலைச்சாற்றை தடவலாம். நஞ்சறுப்பான் இலைகள், வேர்களைத்தூளாக்கி, சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தேனில் கலந்து சாப்பிடவைக்க, விஷங்கள் வெளியேறிவிடும்.

நஞ்சறுப்பான் வேர் தைலம்

நஞ்சறுப்பான் வேர் தைலம்

நஞ்சறுப்பான் வேரை அரைத்து, அதை நல்லெண்ணையில் கலந்து, நன்கு சூடாக்கி, ஆறியபின் வடித்து, தலையில் தேய்த்து ஊறியபின் தலைகுளித்துவர, தலையில் ஏற்பட்ட குடைச்சல் மற்றும் வேதனை சரியாகும்

நோயெதிர்ப்பு ஆற்றலை அளிக்கும், நஞ்சறுப்பான் மூலிகை.

நோயெதிர்ப்பு சக்தி உடலில் குறைவதாலேயே, சிலருக்கு அடிக்கடி சளி, ஜலதோசம் போன்ற தொற்று வியாதிகள் தாக்குகின்றன. உடலில் அதிக ஆற்றலைத் தரும் ஸ்டிராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்தும் கீடோ ஸ்டிராய்டு, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு, அதிகமாக சுரப்பதாலே, நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்து, அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடுகிறது.

உடலில் அதிகம் சுரக்கும் கீடோ ஸ்டிராய்டுகளை, உடலிலிருந்து வெளியேற்றி, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் ஆற்றல்மிக்கவை, நஞ்சறுப்பான் மூலிகை.

மூலிகை குடிநீர்

மூலிகை குடிநீர்

நஞ்சறுப்பான் இலைகளை நீரிலிட்டு கொதிக்கவைத்து, தினமும் இருவேளை, இந்த மூலிகை நீர, வடிகட்டி குடித்துவர, கீடோ ஸ்டிராய்டுகளை உடலிலிருந்து வெளியேற்றிவிடுகிறது. இதன்காரணமாக, உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, உடல் பாதிப்புகள் விலகி, உடல்நலமாகிறது.

நஞ்சறுப்பான் மூலிகை நீரை, தொடர்ந்து பதினைந்து முதல் இருபது வாரங்கள் வரை, குடித்துவர, உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைபாட்டால் ஏற்பட்ட சளி, ஜலதோஷம், இரைப்பு, ஆஸ்துமா போன்ற சுவாச பாதிப்புகள் குணமாகி, உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, சுவாச வியாதிகளான அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகள் முற்றிலும், நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nanjaruppaan Herbal cure Wheezing and asthma

For many, asthma is the bane of their existence. For others, it’s mild and episodes are few and far between.
Desktop Bottom Promotion