For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளநரையைப் போக்கி, கருகருவென முடி வளர்ச்சியைத் தரும் தும்மட்டி பழங்கள் !!

தும்மட்டி மரத்தின் மருத்துவ நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

தமிழகத்தின் மணற்பாங்கான ஆற்றங்கரையோரம் அதிகம் விளையும் ஒரு செடி வகை, ஆற்றுத் தும்மட்டி என்று அழைக்கப்படுகிறது. தரையில் வேர்விட்டு, மண்ணிலேயே படரும் கொடியின் இலைகள் பாகல் இலைகளைப் போன்று, நீள்வட்ட வடிவில் காணப்படும். இதன் காய்கள் சிறிய கோலி உருண்டைகள் போல, மேல்புறம் வெண்ணிற பட்டைகள் கொண்டு காணப்படும்.

கிராமங்களில், மணற்பாங்கான நிலங்களில் விளைந்திருக்கும் தும்மட்டி கொடிகளையும் சேர்த்தே, புல்லருப்பவர்கள் வெட்டி வந்து, கால்நடைகளுக்கு தீனியாகக் கொடுப்பார்கள். வயல்வெளிகளில் தானாகவே வளரும் இந்தச் செடிகள், விதைகள் மூலமும், வளர்க்கப்படுகின்றன. இந்தக் கொடி, கொம்மட்டி என்று கிராமங்களில் அழைக்கப்படுகிறது.

Excellent remedies using Bitter Apple to treat diseases

தும்மட்டியின் பொதுவான பயன்கள், உடலில் உள்ள புழுக்களை அழிக்கும், உடலில் சேர்ந்த நச்சுக்களை முறித்து, மலச்சிக்கல் போக்கும், சிறுநீர்ப் போக்கை இயல்பாக்கும். புழுவெட்டு போக்கி, முடியை மீண்டும் வளர வைக்கும். இள நரையைப் போக்கும். இதன் இலைகள், காய் மற்றும் வேர் போன்ற பாகங்கள், மருத்துவ பயன்கள் மிக்கவை.

வயிறு வீக்கம் மற்றும் வாயுத் தொல்லைகள் விலகும். பெண்களின் கருப்பை சார்ந்த கோளாறுகள் மற்றும் நீர்க் கட்டிகள் போன்ற பாதிப்பிற்கு, சிறந்த நிவாரணம் அளிப்பவையாக, தும்மட்டி திகழ்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Excellent remedies using Bitter Apple to treat diseases

Excellent remedies using Bitter Apple to treat diseases
Story first published: Monday, January 15, 2018, 13:30 [IST]
Desktop Bottom Promotion