For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே..! உங்கள் மாதவிடாய் பிரச்சினைகளை குணப்படுத்த இந்த 7 மூலிகைகள் இருக்கிறது...!

மாதவிடாய் சரியாக வந்தால் மட்டுமே பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாக மாதவிடாய் 21 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை வரும். இதன் உதிர போக்கு 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். பெண

|

ஒவ்வொரு மாதமும் தவறாமல் அழைக்கா விருந்தாளி போல வருவது இந்த மாதவிடாய்தான். ஆனால் பல பெண்களுக்கு இந்த மாதவிடாய் வருவதில் எக்கச்சக்க உடல் சார்ந்த பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. மாதவிடாய் சரியாக வந்தால் மட்டுமே பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாக மாதவிடாய் 21 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை வரும். இதன் உதிர போக்கு 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். பெண்களின் மாதவிடாய் காலத்தில் வரும் ரத்தத்தின் கால அளவு அவர்களின் உடல் அமைப்பை பொறுத்ததே. ஒரு பெண்ணிற்கு ஒரு வருடத்தில் 11 முதல் 13 மாதவிடாய் வர வாய்ப்பு உள்ளது.

herbs to induce periods in tamil

பலருக்கு இந்த உதிர போக்கு வருடத்திற்கு 5 அல்லது 7 முறைதான் வர கூடும். இதனை தான் ஒழுங்கற்ற மாதவிடாய் ( irregular periods) என மருத்துவர்கள் கூறுவார்கள். இதனை குணப்படுத்த பல வழிகளையும் மேற்கொண்டு பார்த்து விட்டீர்களா..? எந்த பலனும் கிடைக்க வில்லையா..? கவலையை விட்டு தள்ளுங்கள். உங்களுக்கென நம்ம முன்னோர்கள் எழுதி வைத்த மூலிகை பொருட்கள் உள்ளது. அவை என்னென்ன என்பதை இனி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் பிரச்சினைக்கு காரணம் :-

மாதவிடாய் பிரச்சினைக்கு காரணம் :-

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் முதலில் இருப்பது ஊட்டச்சத்து குறைபாடே. ஆரோக்கியமான உணவுகளை சரியான நேரத்துக்கு சாப்பிட்டாலே மாதவிடாய் பிரச்சினை வராது. அடுத்து ரத்த சோகை, தைராய்டு, ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், கர்ப்பப்பை கட்டிகள் ஆகியவற்றால் இந்த சுழற்சி பாதிக்க கூடும். மேலும் புகை பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றால் மாதவிடாய் தள்ளி போகலாம்.

இஞ்சி :-

இஞ்சி :-

உங்கள் மாதவிடாயை சீராக வர செய்ய இஞ்சி பெரிதும் உதவும். மருத்துவத்தில் அருமையான பங்கு இஞ்சிக்கு உள்ளது. ஆயிரம் மருத்துவ குணங்களை தனக்குள்ளே வைத்திருக்கும் மருத்துவ பெட்டகம் இந்த இஞ்சி. பல ஆயிரம் வருடங்களாக இதனை மருத்துவ பயனுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் மாதவிடாய் வலியை குணப்படுத்தும். மேலும் மாதவிடாய் தாமதமாக வந்தால் அதனையும் சரி செய்யும். தினமும் காலை - மாலை என இரு வேலைகளிலும் இஞ்சி டீ குடித்தால் இதற்கு தீர்வு கிடைக்கும்.

எள்ளு :-

எள்ளு :-

மாதவிடாய் மாததிற்கு ஒரு முறை சரியாக வர, எள்ளு பயன்படுகிறது. உடலின் ரத்த போக்கை சீராக வைத்து ஹார்மோன்களை நன்கு சுரக்க செய்கிறது. இதனால் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சினை விரைவில் குணமடையும். மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்கள் உற்பத்திக்கும் நன்றாக உதவும். எள்ளு மற்றும் வெல்லத்தை தூளாக செய்து, சாப்பிட்டு வந்தால் இது குணமடையும்.

கற்றாழை :-

கற்றாழை :-

இயற்கையாகவே அரிய வரப்பிரசாதம் இந்த கற்றாழை. கற்றாழை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஒரு கற்றாழை அரிந்து அதில் உள்ள ஜெல்லை தேனுடன் கலந்து தினமும் காலையில், சாப்பிடுவதற்கு முன் இதனை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக மாதவிடாய் சார்ந்த கோளாறுகள் குணமடையும். மேலும் ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும் உதவும்.

மஞ்சள் :-

மஞ்சள் :-

மாதவிடாய் பிரச்சினைக்கு மஞ்சள் முற்று புள்ளி வைக்கிறது. சமையலில் அதிகம் பயன்படுத்துகின்ற பொருட்களில் முக்கியமான ஒன்று மஞ்சளே. ஏனெனில் இது நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. ஹார்மோன்களை சுரக்க செய்து ரத்த போக்கை சீராக வைக்கும். அத்துடன் மாதவிடாயின் போது ஏற்படும் வலியையும், வீக்கத்தையும் குணப்படுத்தும். பாலில் 1/4 ஸ்பூன் மஞ்சளை கலந்து சாப்பிட்டால் இதற்கு தீர்வு கிடைக்கும்.

பிளாக் கோஹோஷ் (Black Cohosh) :-

பிளாக் கோஹோஷ் (Black Cohosh) :-

வரலாற்று பூர்வமாக இந்த மூலிகை பல நோய்களுக்கு பயன்படுத்தப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளுக்கு இது ஒரு அற்புதமான மருந்து. ஏனெனில் இதில் அதிக அளவில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்ஸ் (phytoestrogens) உள்ளதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை சமமாக வைத்து நல்ல உதிர போக்கை ஏற்படுத்தும். தைரொய்ட் குறைபாடு உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த மூலிகை.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

இயல்பாகவே எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகம் ஏற்படுத்த கூடிய ஆற்றல் பெற்றது அஸ்வகந்தா. "மூலிகைகளின் ராஜா" என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இது பல மருத்துவ குணங்களை கொண்டது. உடலில் ரத்த ஓட்டத்தை நன்றாக ஏற்படுத்தி மாதவிடாய் கோளாறுகளை சீராக்கும். அத்துடன் ஹார்மோன்கள் குறைபாட்டை தீர்ப்பதிலும் அஸ்வகந்தாவிற்கு நிறைய பங்குண்டு.

இலவங்கபட்டை :-

இலவங்கபட்டை :-

மாதவிடாய் சுழற்சியை சீரான முறையில் வைக்க இலவங்கம் நன்கு பயன்படுகிறது. சீனர்கள் தங்கள் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு இதனை இன்றும் பயன்படுத்துகின்றனர். ஒரு குவளை பாலில் 1/2 டீஸ்பூன் இலவங்க தூளை சேர்த்து தினமும் குடித்து வந்தால் இது குணமடையும்.

(முக்கிய குறிப்பு- மாதவிடாயின் போது மேற்சொன்ன மூலிகைகளை பயன்படுத்துதல் கூடாது)

அன்பர்களே...உங்கள் மருத்துவரை ஒரு முறை ஆலோசித்துவிட்டு இவற்றை பயன்படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Herbs for Irregular Periods

An irregular period, medically known as oligomenorrhea, is a common problem among women. It usually refers to infrequent periods with intervals of more than 35 days.
Desktop Bottom Promotion