உடல் பிரச்சனைகளை போக்கும் கிராம்பு வைத்தியம் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

கிராம்பு அதிக பட்சமாக பல்வலிக்குதான் பயன்படுத்துவோம். அதை தவிர்த்து பிரியாணி மற்றும் மற்ற உணவுகளில் சேர்க்கிறோம். ஆனால் கிராம்பின் காரத்தன்மை உடலில் பல உபாதைகளுக்கு மருந்தாகிறது என தெரியுமா?

உடல் நலக் கோளாறுகளை போக்க, சரும நோய்கள் குணமாக என இன்னும் பலவித பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நரம்புத் தளர்ச்சி :

நரம்புத் தளர்ச்சி :

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

சிறு நீரக பாதிப்பு :

சிறு நீரக பாதிப்பு :

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

மூட்டு வலி :

மூட்டு வலி :

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

வயிற்றுக் கோளாறு :

வயிற்றுக் கோளாறு :

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

தோல் நோய்கள் :

தோல் நோய்கள் :

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

 வயிற்றுப் போக்கு :

வயிற்றுப் போக்கு :

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal properties of cloves

Medicinal properties of cloves
Story first published: Wednesday, April 19, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter