வேர் முதல் நுனி வரை மருத்துவ குணம் கொண்ட அதிசய மரம்!

Posted By:
Subscribe to Boldsky

ஏசியாவில் பிரபலமான மூங்கில் அரிசி. பெரும்பாலும் அதனை பயன்படுத்துவதில்லை. 40 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூவில் அரிசி கிடைக்கும். கிடைப்பது அரிது என்பதால் அதன் பயன்பாடும் குறைவாக இருக்கிறது. ஆனால் மூங்கில் அரிசியில் தான் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரி :

கலோரி :

ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரி இருக்கிறது. டயட் இருப்பவர்கள் மூங்கில் அரிசியை எடுத்துக் கொள்ளலாம். குறைவான கலோரி இருப்பதால் அரிசி சாப்பிட்டால் தொப்பை வரும் என்ற கவலை கொள்ளத் தேவையில்லை.

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட் :

மூங்கில் அரிசியில் முக்கிய பங்கு வகிப்பது கார்போஹைட்ரேட். ஒரு கப் அரிசியில் 34 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும். இது ஓட்ஸை விட 10 கிராம் அளவு அதிகம். நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்க உதவிடும் இது.

ஃபைபர் :

ஃபைபர் :

மூங்கில் அரிசியில் குறைந்த அளவே ஃபைபர் இருக்கிறது. ஒரு கப் அரிசியில் 1 கிராம் அளவு கிடைக்கும். செரிமானத்திற்கு ஃபைபர் மிகவும் தேவைப்படும். மூங்கில் அரிசியில் கொழுப்பு கிடையாது. இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் எனர்ஜி கிடைப்பதுடன் விட்டமின் சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளவும் உதவிடுகிறது.

மூங்கில் மருந்து :

மூங்கில் மருந்து :

மூங்கில் அரிசி மட்டுமல்ல அதன் வேரிலிருந்து நுனி வரை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தது. அவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைத்திடும்.

முடி வளரும் :

முடி வளரும் :

அதிகமாக முடி கொட்டினால் மூங்கில் மரத்தின் மேற்தோல் அல்லது அதன் வேர்ப்பகுதியை அரைத்து அதனுடன் வினிகர் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டு வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

வேரை எரித்து அதன் பொடியுடன் அதில் ஜாஸ்மின் எண்ணெய் சேர்த்து ஹேர் பேக் தடவலாம்.

மூங்கில் மரத்தின் வேரைத்து அரைத்து முகத்தில் தடவி வர, அம்மைத் தழும்பை நீக்க உதவும்.

அரிப்பு :

அரிப்பு :

மூங்கில் இலைகளை அரைத்து அரிப்பு வந்த இடத்தில் பூசி வந்தால் அரிப்பு குறைந்திடும்.சரும நோய்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் உங்கள் சருமத்தை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும்.

ரத்தக்கசிவு :

ரத்தக்கசிவு :

காயம் ஏற்பட்டு வீக்கமோ அல்லது ரத்தக்கசிவோ ஏற்பட்டால் மூங்கில் இலை அல்லது அதன் தண்டுப்பகுதியை எரித்த சாம்பலையோ போட்டால் உடனடியாக குறைந்துவிடும்.

பற்கள் :

பற்கள் :

மூங்கில் வேரின் சாம்பலைக் கொண்டு பற்களை லேசாக மசாஜ் செய்து வர பற்கள் வெண்மையாகும் அத்துடன் ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் பாக்டீரியா தொற்று வராமல் காத்திடும். தினமும் இரண்டு வேலை இதனை செய்திடலாம்.

வலிகள் :

வலிகள் :

தலை வலி மற்றும் இடுப்பு வலிக்கு உடனடி நிவாரணம் கிடைத்திடும். மூங்கில் குறுத்தை அரைத்து பத்து போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேரின் சாம்பலையும் இதற்கு பயன்படுத்தலாம்.

மாதவிடாய் :

மாதவிடாய் :

ரெகுலரான பீரீயட்ஸ் வரவில்லை என்று கவலைப்படும் பெண்களுக்கு மூங்கில் இலை சிறந்த நிவாரணமாக இருக்கும். கர்ப்பப்பை கோளாறுகளுக்கும் மூங்கில் நல்ல பலனை கொடுத்திடும். மூங்கில் இலைகளை 20 மில்லி கிராம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்திடுங்கள் அதன் அளவு பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். தினமும் இந்த நீரை குடிக்கலாம்.

சிறுநீர்த்தொற்று :

சிறுநீர்த்தொற்று :

சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்ப்பட்டால் மூங்கில் இலைச்சாறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மூங்கில் இலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திட வேண்டும். 200 கிராம் தண்ணீரிலிருந்து 40 கிராம் தண்ணீர் வரை குறைய வேண்டும். பின்னர் அதுனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

நாய்க்கடி :

நாய்க்கடி :

நாய் கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன்னால் மூங்கில் வேர் பொடியுடன் பால் கலந்து கொடுத்தால் பாக்டீரியா பரவுவது குறையும். மூங்கிலுக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of bamboo

There are so many Health benefits in bamboo tree. Here some of them to know.
Story first published: Tuesday, August 8, 2017, 11:54 [IST]