30 நிமிடங்கள் பூண்டை வாயில் வைப்பதால் என்னவாகும் தெரியுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

நம் அனைவருக்கும் பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். ஆனால் பூண்டின் நிறைய மருத்துவ குணங்கள் வெறும் பூண்டை சாப்பிடுவதால் தான் கிடைக்கும். இவ்வாறு வெறும் பூண்டை சாப்பிடும் போது அது உணவுக்குழாய்களில் சிறிது எரிச்சலை ஏற்படுத்தலாம்.

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பூண்டு உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த மருத்துவ பொருள் தான். ஆனால் பூண்டை சாப்பிடாமல் அதன் மருத்துவ குணங்களை பெற ஏதேனும் வழி இருக்கிறதா?

ஆமாம், கண்டிப்பாக இருக்கிறது. இது மற்ற பூண்டு சம்பந்தப்பட்ட குறிப்புகளை காட்டிலும் வித்தியாசமானது. இந்த முறையை நீங்கள் 10 - 15 நாட்கள் வரை பின்பற்றினால், பூண்டின் மிகச்சிறந்த நன்மைகளை உங்களால் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதை எப்படி செய்வது?

இதை எப்படி செய்வது?

ஒரு பல் பூண்டினை உங்களது வாயில் போட்டுக்கொள்ளுங்கள். அதனை கன்னப்பகுதியில் அடங்கி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் பூண்டை ஒரு கன்னப்பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு சுழற்றுங்கள்.

இதை எப்போது செய்யலாம்?

இதை எப்போது செய்யலாம்?

இதை காலையில் எழுந்தது முதல் வேலையாக, ஒரு முப்பது நிமிடங்கள் செய்யுங்கள். பூண்டை நீங்கள் 30 நிமிடங்கள் வாயில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இப்படி செய்தால் என்ன ஆகும்?

இப்படி செய்தால் என்ன ஆகும்?

நீங்கள் இவ்வாறு முப்பது நிமிடங்கள் வரை பூண்டை வாயில் வைத்திருப்பதால், பூண்டின் மருத்துவ குணங்கள் மெதுவாக உங்களது உடலுக்குள் சென்றுவிடும். இது உங்களது நிணநீர் மண்டலம் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்கிறது.

இது உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், வாயை துர்நாற்றம் இல்லாமல் வைக்கவும் உதவுகிறது.

முப்பது நிமிடத்திற்கு பிறகு என்ன செய்வது?

முப்பது நிமிடத்திற்கு பிறகு என்ன செய்வது?

முப்பது நிமிடங்களுக்கு பிறகு உங்களது வாயில் உள்ள பூண்டை வெளியில் துப்பிவிடுங்கள். பற்களை துலக்குங்கள். பின்னர் சிறிதளவு புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் வாயில் இருக்கும் பூண்டின் வாசனை போய்விடும்.

இதை ஏன் செய்ய வேண்டும்?

இதை ஏன் செய்ய வேண்டும்?

இதை செய்வதால் உண்டாகும் பலன்களை அறிந்தால், நீங்கள் இதனை கண்டிப்பாக செய்வீர்கள். இது உங்களது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பசியின்மையை போக்குகிறது, காய்ச்சல்களில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும், சுவாச பிரச்சனைகள், இரத்தசோகை போன்றவற்றிற்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதுமட்டுமின்றி, சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பாதையையும் பாதுகாக்கிறது.

யார் இதை கட்டாயம் செய்ய வேண்டும்?

யார் இதை கட்டாயம் செய்ய வேண்டும்?

இது வறட்டு இருமலை குணப்படுத்தும், அதுமட்டுமின்றி சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இது உங்களை பாதுகாக்கும்.

குறிப்பு

குறிப்பு

உங்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுவதாக இருந்தால், இதை செய்யாதீர்கள். உங்களுக்கு வாய்ப்புண் இருந்தாலும் இதை செய்ய வேண்டாம், இந்த பிரச்சனைகள் இருக்கும் போது இதனை செய்தால் பிரச்சனைகள் அதிகமாகும். அதனால் நீங்கள் உங்களது மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

garlic in your mouth for thirty minutes

Here are the some health benefits garlic
Story first published: Thursday, July 13, 2017, 11:20 [IST]