For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரக கற்களை இயற்கை முறையில் கரைக்கச் செய்யும் ஓர் அற்புத மூலிகை

இயற்கை வைத்தியமுறையில் சிறு நீரக கற்களை கரைக்க உதவும் கோபுரந்தாங்கி மூலிகையை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Gnaana
|

இயற்கை அளிக்கும் அற்புத ஆற்றல் கொண்ட எண்ணற்ற பலன்கள் தரும் மூலிகைகள் எல்லாம் நம் கண்களில் படும் தூரத்திலேயே இருந்தாலும், நாம் அதை அறியாமல், அவை சாலையோரங்களில், வீடுகளின் கொல்லைப்புறங்களில் வளர்வதால், அவற்றை ஒன்றுக்கும் ஆகாத களைச்செடிகள் என்று புறக்கணித்து வருகிறோம். அதாவது, நமது அறியாமையை, நாம் நமது அறிவாக கருதுகிறோம் என்பதுதான் உண்மை. இதுவே, வாழ்வில் எல்லா விசயங்களுக்கும் பொருந்துமன்றோ?!

அதுபோன்ற மனிதர்களால் புறக்கணிக்கப்பட்ட, பரவலாக எங்கும் வளரும் ஒரு மூலிகைச்செடிதான், கோபுரந்தாங்கி! எல்லா இடங்களிலும் மண்டியிருப்பதால் சுத்தம் செய்யும்போது, இதைக் களைச்செடி என எண்ணி, களைந்துவிடுவர்.

Andrographis echioides is a herb that helps to cure Kideny stones

Image Source

நல்ல பட்டையான வெளிர் பச்சைநிற தண்டுகளைக் கொண்ட கோபுரங்தாங்கியின் இலைகள் நீண்டு தண்டிலிருந்து தனித்தனியே காணப்படும்.

இந்த இலைகளின் காம்புகளை ஒட்டி, சிறிய அடுக்கில் பூக்கள் கோபுரத்தின் கலசங்கள் போலக் காணப்படுவதால், இந்த மூலிகைக்கு கோபுரந்தாங்கிஎனப்பெயர் வந்ததாகக்கூறுவர். ஆயினும், சித்தர்கள் இதன் பெயரை வேறுவிதமாக அழைத்து, போற்றுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Andrographis echioides is a herb that helps to cure Kideny stones

Andrographis echioides is a herb that helps to cure Kideny stones
Story first published: Thursday, October 19, 2017, 16:25 [IST]
Desktop Bottom Promotion