அளவுக்கு அதிகமாக சீரகத்தை எடுத்துக் கொண்டால் உண்டாகும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

சீரகம் மிக அருமையான மருத்துவ குணங்களை கொண்ட மசாலா உணவு வகையை சார்ந்தது.

இந்தியாவில் சீரகத்தை உபயோகப்படுத்தாமல் எந்த கார உணவும் தயாரிப்பதில்லை. இது ஜீரண சக்தையை அதிகபப்டுத்தும். நச்சுக்களை வெளியேற்றும். வாய்வை குறைக்கும்.

எனினும் இதனை உடல் நோய்க்காக உபயோகிக்க நினைத்தால் எதற்கும் மருத்துவரை ஆலோசித்து உபயோகியுங்கள்.

Impacts of intake of high level of cumin seed

எப்போதும் போல சமையலில் அல்லது சீரக நீராக குடிப்பதில் தவறில்லை. ஆனால் இதனை உடல் நோய்க்காக உபயோகிக்க நினைத்தால் எதற்கும் மருத்துவரை ஆலோசித்து உபயோகியுங்கள்.

அதோடு சிலர் எப்போதும் சீரகத்தை மென்றபடி இருப்பார்கள் அதுவும் தவறு. அதிலுள்ள காரத்தன்மை பக்க விளைவுகளைத் தரும்.

அளவுக்கு அதிக சீரகத்தை சாப்பிடுவதாக் உண்டாகும் பக்க விளைவுகளை காண்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெஞ்செரிச்சல் :

நெஞ்செரிச்சல் :

சீரகம் வாய்ப் பிடிப்பிற்காக உபயோகிப்பதுண்டு. ஆனால் அதிக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்ச்ரிச்சல் உண்டாகும் கவனித்திருக்கிறீர்களா? அதிக அசிடிட்டி இருப்பவரகள் சீரகத்தை மிதமாக அல்லது குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

ஏப்பம் :

ஏப்பம் :

அதிக சீரகத்தை உர்கொள்ளும்போது ஏப்பம் அடிக்கடி உண்டாகும். சிறுகுடலில் காற்று அதிகமாக உண்டாகி அவை வாயின் வழியே தல்லப்படுவதால்தான் இவ்வாறு ஏப்பம் உண்டாகிறது.இதற்கு சீரகத்தை அதிகம் சாப்பிடுவதாலும் ஏப்பம் உண்டாகும்.

கல்லீரல் பாதிப்பு :

கல்லீரல் பாதிப்பு :

நீண்ட காலமாக அதிகமாக சீரகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்படையும். சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் அதிக அளவு ஆவியாவதால் கல்லீரல் மற்றும் சிறு நீரகம் பாதிக்கபடலாம் என சொல்கிறார்கள்.

கருச்சிதைவு :

கருச்சிதைவு :

மிதமாக சீரகத்தை எடுத்துக் கொள்வது கர்ப்பிணிகளின் உடல் நலத்திற்கு நல்லது. மிக அதிகமாக சீரகம் எடுத்துக் கொண்டால் கருசிதைவு அல்லது குறைபிரசவம் உண்டாகும் .

குமட்டல் :

குமட்டல் :

தினமும் தேவையில்லாமல் சீரகத்தை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். இதனால் வயிற்றில் உப்புசம் உண்டாகி, குமட்டல் வாந்தி ஆகிய்வை உண்டாகும்.

அதிக உதிரப்போக்கு :

அதிக உதிரப்போக்கு :

மாதவிடாய் காலத்தில் மிக அதிகமாக சீரகத்தை உட்கொண்டால் அதிக ரத்தப் போக்கு உண்டாகும்.

குறைந்த ரத்த அழுத்தம் :

குறைந்த ரத்த அழுத்தம் :

உயர் ரத்த அழுத்தம் எவ்வாறு ஆபத்தோ, அதும் போல், ரத்த அழுத்தம் குறைவதும் நல்லதல்ல. சீரகம் அடிக்கடி வெறுமனே சாப்பிடுவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு :

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு :

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகரிப்பது ஆபத்தோ அவ்வாறு சர்க்கரை அளவும் குறைவது ஆபத்தை தரும்.

சீரகம் சர்க்கரை அளவை ரத்தத்தில் குறைக்கச் செய்யும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகம் சாப்பிடும்வதை தவிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Impacts of intake of high level of cumin seed

Impacts of high level of intake of cumin seeds
Please Wait while comments are loading...
Subscribe Newsletter