டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கும் நிலவேம்பு கஷாயம் - செய்முறை மற்றும் பயன்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

நிலவேம்பு கஷாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். மழைக் காலத்தில் அதிகம் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக திகழ்கிறது என தமிழக அரசே பல இடங்களில் இந்த கஷாயத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது.

காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க... இல்லன்னா உங்க உயிரை விடுவீங்க...

டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, தலைவலி, செரிமானம், மூட்டு வலி, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என பல பிரச்சனைகளுக்கு இந்த நிலவேம்பு கஷாயம் நல்ல தீர்வளிக்க கூடியது. எடுத்ததும் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடாமல், சிறந்த இயற்கை மருந்தாக விளங்கும் இந்த நிலவேம்பு கஷாயத்தை குடித்து பயனடையுங்கள்....

மழைக் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைக்கு விரைவில் தீர்வுக் காண உதவும் பாட்டி வைத்தியங்கள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான மூலிகைகள்

தேவையான மூலிகைகள்

நிலவேம்பு கஷாயம் தயாரிக்க தேவையான ஒன்பது மூலிகைகள்: சிறியாநங்கை (நிலவேம்பு), வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடல், கோரைக் கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு

செய்முறை

செய்முறை

நாம் மேலே கூறியுள்ள ஒன்பது மூலிகைகளை நன்கு உலர (காய) வைத்து, அனைத்து மூலிகைகளையும் சம பங்கு அளவில் எடுத்து கலந்து, அரைத்துப் பொடியாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

அரைத்து எடுத்து வைத்துள்ள அந்த பொடியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு, அந்த நீரை இதமான சூட்டுக்கு ஆற வைத்து பருக வேண்டும்.

மூட்டு வலி

மூட்டு வலி

நிலவேம்பு கஷாயம் பருகி வந்தால் மூட்டு வலி மற்றும் உடல் வலி குறையும். மேலும் பின்னாட்களில் இதுப் போன்ற வலிகள் ஏற்படாமல் இருக்க வலு சேர்க்கும். டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது மூட்டு வலியும், தசை வலியும் ஏற்படும் அவற்றை இது சரி செய்கிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோய்க்கும் நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக விளங்குகிறது. இது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு

நோய் எதிர்ப்பு

மேலும் நிலவேம்பு கஷாயம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால், உடலில் இருக்கும் நச்சுக்களை விரைவாக அழிக்க முடியும்.

தலைவலி

தலைவலி

அடிக்கடி தலைவலி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் தினம் இரண்டு வேளை இந்த கஷாயத்தை குடித்து வந்தால். தலையில் நீர்க்கட்டு குறைந்து, தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளும் கூட சரியாகும்.

முக்கிய குறிப்புகள்

முக்கிய குறிப்புகள்

நிலவேம்பு கஷாயத்தை தயாரித்த நான்கு மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். இல்லையேல் அதன் பயன் இருக்காது. மேலும் பத்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். பத்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தர வேண்டும் எனில், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு கொடுங்கள்.

முக்கிய குறிப்புகள்

முக்கிய குறிப்புகள்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காலை, மாலை என இரு வேளைகள் 30 மில்லி நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு குடித்து வந்தால் விரைவாக குணமடையலாம்.

தினமும் கூட குடிக்கலாம்

தினமும் கூட குடிக்கலாம்

காய்ச்சல் உள்ளவர்கள் தான் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும் என்றில்லை. உடல் வலிமை அதிகரிக்க வேண்டும் எனில், யார் வேண்டுமானாலும் தினமும் இந்த கஷாயத்தை பருகி வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nilavembu Kashayam Is The Best natural Med For Dengue Fever

Nilavembu Kashayam Is The Best natural Med For Dengue Fever. Read here How to make and its uses in tamil.
Subscribe Newsletter