மனதையும், உடலையும் சுத்தம் செய்ய பெருமளவு உதவும் துளசி எனும் அற்புத மூலிகை!!

Posted By:
Subscribe to Boldsky

துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. துளசியை சாப்பிட்டால் மட்டுமல்ல, சுவாசித்தால் கூட உடலுக்கு நன்மை தான் என்று உங்களுக்கு தெரியுமா?

உடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்!!!

ஏதோ சில காரணங்களால் துளசி மாடமும் துளசி தீர்த்தமும் இந்து மதத்தை சார்ந்தது போல அனுமானம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இது மதத்தை தாண்டிய மாபெரும் மருத்துவம். துளசி மடத்தை தினமும் சுற்றி வருதல், தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம்.

ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!

ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும். இதனால் தான் துளசி மாடம் , துளசி நீர் புனிதமாக கருதப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் உரைத்த அனைத்திற்கும் பின்னணியில் மருத்துவம் இருக்க தான் செய்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு துளசி ஒரு அருமருந்து. இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைத்து, சீராக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

அதிகமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசியை சாப்பிடலாம். இது அதிகமாக இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயனளிக்கிறது. மேலும் இதனால் இதயம் வலுவடைகிறது.

நுரையீரல் தொற்று

நுரையீரல் தொற்று

அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.

அழற்சி

அழற்சி

துளசி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆனது அழற்சி / மூட்டு அழற்சி போன்றவைக்கு நல்ல தீர்வளிக்க கூடியவை.

பன்முக மூலிகை

பன்முக மூலிகை

துளசி உடல் சார்ந்து மட்டுமின்றி சருமம், கூந்தல் போன்றவைக்கும் நல்ல தீர்வளிக்கிறது. இது பருக்கள் மற்றும் பொடுகு தொல்லைகளுக்கு கூட சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

ஐந்தாயிரம் வருட பாரம்பரிய மூலிகை

ஐந்தாயிரம் வருட பாரம்பரிய மூலிகை

நமது இந்தியாவில் துளசியை உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் பயன்

அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் பயன்

தினமும் சிறிதளவு துளசியை வாயில் போட்டு நன்கு மென்று விழுங்கினால் சளி, இருமல், காய்ச்சல், சுவாசக் கோளாறு, செரிமான பிரச்சனை என பலவற்றுக்கும் சீரிய முறையில் தீர்வுக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Ayurvedic Herb Can Help Cleanse Your Mind, Body And Spirit

Tulasi Is An Amazing Ayurvedic Herb That Can Help Cleanse Your Mind, Body & Spirit, read here in tamil.