Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Heatwave: வெப்ப அலை நாட்களில் ஒருவர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யகூடாதவைகள்!
Heatwave In Tamil: இந்தியாவில் நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற நகரங்களில் 40-45 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் ஐஎம்டி இந்தியாவில் உள்ள ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெப்ப அலை என்பது வழக்கமான வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை தொடர்ந்து 3 நாட்களாக அல்லது அதற்கும் மேலாக நீடிப்பதை குறிக்கிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை தொடர்ந்து பதிவாகிக் கொண்டிருக்கிறது. வெப்ப அலையானது மிகவும் கொடியது. இதனால் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கூட மகாராஷ்டிராவில் 11 பேர் வெப்ப அலை காரணமாக இறந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக ஒருவர் வெப்ப சூழலில் இருக்கும் போது, அது வெப்ப மயக்கத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது. வெப்ப மயக்கமானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.
அதில் அதிகப்படியான வெப்பம் மட்டுமின்றி, கோடையில் மது அருந்துவது, உடல் வறண்டு இருப்பது, பாலியஸ்டர் போன்ற மோசமான அல்லது இறுக்கமான ஆடைகளை அணிவது போன்றவையும் வெப்ப மயக்கத்திற்கு வழிவகுக்கலாம். இது மட்டுமின்றி, குறிப்பிட்ட மருந்துகள், ஆரோக்கிய நிலைகள், வயது, வெப்பமான காலநிலையில் உடற்பயிற்சி செய்வது ஆகியவை வெப்ப மயக்கத்தின் அபாயத்தை அதிகரிப்பதோடு, மரணத்தையே ஏற்படுத்தலாம்.
வெப்ப மயக்கத்தின் அறிகுறிகள்
வெப்ப மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குமட்டல், வாந்தி, வேகமாக இதயத் துடிப்பு, சுவாசிப்பதில் சிரமம், தொடர்ச்சியான வியர்வை, பலவீனமான நாடித் துடிப்பு, மயக்கம், சில சமயங்களில் வாதம், அதிகப்படியான உடல் வெப்பநிலை, தலைவலி, மந்தமான பேச்சி, எரிச்சல், சிவந்த தோல் போன்ற அறிகுறிகளை சந்திக்கலாம். இந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்போது வெப்ப அலையின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைக் காண்போம்.
வெப்ப அலையின் போது செய்ய வேண்டியவை
* வெப்ப அலை தீவிரமாக இருக்கும் கோடை காலத்தில் நல்ல காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். இது வியர்வையை எளிதில் உறிஞ்சிவிடும்.
* அடர் நிற ஆடைகளை அணியாமல், வெளிர் நிற ஆடைகளையே தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
* பகல் வேலையில், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் வெயில் உச்சக்கட்டத்தில் இருக்கும்.
* வெளியே செல்லும் போது மறக்காமல் தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும்.
* முக்கியமாக முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து செல்ல வேண்டும் அல்லது குடையை கொண்டு செல்ல வேண்டும்.
வெப்ப அலையின் போது செய்யக்கூடாதவைகள்
* காபி, டீ, ஆல்கஹால், சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடல் வறட்சியை ஏற்படுத்தும்.
* புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும் மற்றும் பழைய உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும்.
* வெயில் அதிகமாக இருக்கும் போது கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளை வெளியே அனுமதிக்காதீர்கள்.
* அடிக்கடி தண்ணீர் குடிப்பதை தவறக்கூடாது.
* புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
வெப்ப மயக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கான முதலுதவி சிகிச்சைகள்
* வெப்ப மயக்கத்தால் பாதிக்கப்பட்டவரை முதலில் குளிர்ச்சியான, நிழலான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். பின் அவரது உடலை ஈரத்துணியால் துடைக்க வேண்டும். முடிந்தால் தலையில் சாதாரண நீரை ஊற்ற வேண்டும். அப்படி செய்வதால், உடல் வெப்பநிலை குறையத் தொடங்கும்.
* ஓஆர்எஸ் பானம் அல்லது எலுமிச்சை சர்பத் அல்லது அவரது உடலுக்கு புத்துயிர் அளிக்கும் பானத்தை குடிக்க கொடுக்க வேண்டும்.
* முதலுதவி செய்ததும், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெப்ப மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications